எம்பரர் இம்மானுயேல் தெய்வாலயத்தின் சமூக சுகாதார அர்ப்பணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக “ஹீல் 2024- டெல்லி அத்தியாயம்” மே 5,2024 அன்று புது தில்லியில் உள்ள NIV Art Studio -வில் பல்வேறு நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. விருந்தினரான டாக்டர். ஜோசப் வில்லியின் சொற்பொழிவும், அதை தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலும் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் ஆகும். இதில் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையின் இடையிலும் , மனவளர்ச்சி பாதிப்பு மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவும், தற்கொலைகளில் தஞ்சம் தேடுகின்ற மனித உள்ளங்களுங்கும், நிலைப்படுத்துதல் மற்றும் குணப்படுத்துதல் போன்ற உளவியல் ஆலோசனைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்வின் வழியாக தனிநபர்களின் மன அழுத்தத்தை எளிதாக்குவதற்கு லேசான மன பயிற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.
டெல்லியில் வளிமண்டல வெப்பநிலை அடிக்கடி கட்டுப்பாடின்றி உயர்வதினால் ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தூய்மையான தண்ணீரை சேகரித்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதுகாப்பாக பயன்படுத்த தன்னார்வலர்கள் மூலம் காப்பிடப்பட்ட தண்ணீர் (இன்சுலேட்டர் வாட்டர்) ஜாடிகள் விநியோகிக்கப்பட்டன.
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.