சீயோன் அல்லது எம்பரர் இம்மானுயேல் ஆலயம் என்பது திருச்சூர் மாவட்டத்தின் இரிஞாலக்குடா நகராட்சியில் முரியாடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இறைமகன் இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையில் அவருடைய அனைத்து மீட்பின் செயல்களுக்கும் மையமாக அமைந்தது எருசலேம் தேவாலயம் ஆகும். அவ்வாறே, இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவருக்கு வழியை ஆயத்தம் செய்யவும், எல்லா தீமைகளிலிருந்தும் விட்டு விலகிய ஒரு தூய மக்களினத்தை அவருக்காக ஒருங்கிணைக்கும் மையமாக சீயோன் நிறுவப்பட்டுள்ளது. இந்த சீயோன் அமைப்பைப் பற்றி திருவிவிலியத்தில் பல இறைவாக்கினர்களும், பூமியின் பல்வேறு இடங்களில் காட்சியளித்த பரிசுத்த அம்மாவும் ஏராளமான சான்றுகள் வழங்கியுள்ளனர்.
Learn Moreஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.திருப்பாடல்கள் 132:13
கண்கள் காணாததும் காதுகள் இதுவரை கேட்டிராததுமான நிகழ்வுகள் ஒரு தலைமுறையில் ஒன்று சேர நிகழ்வதுதான் காலத்தின் அடையாளங்கள். இவை இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் உலக முடிவிற்குமான அடையாளங்கள். 2000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய ஒரு நட்சத்திரம் முதல் வருகையில் இறைமகன் பூமியில் வந்து விட்டார் என்பதற்கான காலத்தின் அடையாளமாக இருந்தது. இன்றும் இந்த அடையாளங்கள் வழியாக குறிப்பிடுவது இறைமகன் மீண்டும் வந்துவிட்டார் என்பதுதான்...
English
Malayalam
Fill out the form and we will get back to you as soon as possible
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.