தந்தையாகிய கடவுள் இந்த பூவுலகை சந்திக்க வருகின்ற நாளே அவரது பழிதீர்க்கும் நாளாகும். இதோ! சர்வ வல்லமையோடும் மாட்சியோடும் அனைத்தையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் இந்த பூவுலகை சந்திக்க வருகிறார் என்று சத்வார்த்தை வழியாக விளம்பரம் செய்யப்படுகிறது.
தமது மக்கள் ஒவ்வொரும் தன் கண் முன்பாக குற்றமற்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் அன்பில் ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே தந்தையாகிய கடவுளின் திருவுளம். அதற்காகவே மக்களைப் படைத்து அவர்களுக்கு உடல் மற்றும் உள்ளம் போன்ற தனித்தன்மைகளை அளித்தார்.
திருவிவிலியத்தில் தொடக்கநூல் முதல் திருவெளிப்பாடு வரையுள்ள அனைத்து நூல்களையும் ஆராய்ந்தால், நமது தந்தையாகிய கடவுள் சரீர இரத்தம் உள்ள முழுமையான பண்பை உடையவர் என்று ஏராளமான இறைவசனங்கள் வழியாக அறிந்து கொள்ள முடியும்.
தந்தையாகிய கடவுளைப் பற்றியும், இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், இறைவார்த்தையின் மறைப்பொருள்கள் பற்றியும் தெளிவாகவும் முழுமையாகவும் இறைமக்கள் அறிந்து கொள்வது இறுதிக்காலத்தில். அதாவது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில்.