இயேசு கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையின் வழியாக கடவுளின் அருளால் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் என திருவிவிலியத்தில் பல இறைவார்த்தையின் வாயிலாக நாம் காண்கிறோம்.
இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.
இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.
காலத்தின் நிறைவில் அதாவது இறுதிக் காலத்தில் பறைசாற்றப்படும் விண்ணரசு பற்றிய நற்செய்தி தான் இந்த சத்வார்த்தை. இதுவே மூன்றாம் இறையாட்சியின் சத்வார்த்தை ஆகும்.
மீண்டும் வருகின்ற இறைமகன் இம்மானுயேல் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கும் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம்( தமது அன்புக்குரியவர்கள்) உடலை மாட்சிக்குரிய அவரது உடலின் சாயலாக உருமாற்றமடைய செய்வார்.
இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு நிலையான நகரம் எதுவுமில்லை. எனவே பூமியும் அதிலுள்ள அனைத்தும் அகற்றப்படவுள்ளது.ஆனால், சாத்தானின் தீண்டாமை மற்றும் பாவத்தின் மணம் இல்லாத தூய்மையின் கூடாரம் தான் சொர்க்க சீயோன்.
நாம் மீட்பின் முழுமையை அடைந்து விட்டோமா? இறைமகன் இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையில் நாம் பெற்றுக் கொண்டது பாவமன்னிப்பாகிய அருளையும் (மீட்பையும்), அவரது இரண்டாம் வருகையில் நாம் பெற்றுக்கொள்ளவிருக்கும் மீட்பையும் குறித்து பிரித்தே திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது.
கடவுள் மனிதனுக்கு ஒரு நிலையான மீட்பை ஆயத்தப்படுத்தியுள்ளார் என்பது நமக்கு தெரியும். அப்போது இயேசு கிறிஸ்து தமது முதல் வருகையில் அளித்த மீட்பு என்ன? மீட்பு முழுமை அடைந்துவிட்டதா? மீட்பின் முழுமை என்பது என்ன ? அதை அவர் எப்போது தருவார் ?