வாழ்வே உண்மை என்றும், மரணம் சாத்தானிடமிருந்து வந்த பொய் என்றும் கடவுள் இந்த உலகிற்கு வெளிப்படுத்துவார்.அப்போது அவரே நிலையாக வாழ்கின்ற உண்மையான கடவுள் என அனைவரும் அறிந்து கொள்வார்கள்.
வாழ்வே உண்மை என்றும், மரணம் சாத்தானிடமிருந்து வந்த பொய் என்றும் கடவுள் இந்த உலகிற்கு
வெளிப்படுத்துவார்.அப்போது அவரே நிலையாக வாழ்கின்ற உண்மையான கடவுள் என அனைவரும்
அறிந்து கொள்வார்கள்.
“ உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணத்திற்கு உட்படுவர்” என்ற பொய்மையை சாத்தான் மனிதர்களின் மனதிற்குள் விதைத்தான். இதுவே இன்றைய தலைமுறை வரையுள்ள உலக நியதியாக கருதப்படுகிறது. ஆனால், என்றும் வாழ்கின்ற கடவுள் வாழ்வே உண்மை என அவருடைய மக்களுக்கு தமது உண்மையான
வார்த்தைகளால் கற்றுக் கொடுக்கிறார்.மேலும், உண்மையின் உறைவிடம் கடவுளே, அவரிடமிருந்து உண்மை மட்டுமே புறப்படுகின்றது.
சாவைக் கடவுள்
உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. ஆனால்,அலகையின் பொறாமையால்தான் சாவு உலகில் நுழைந்தது .
கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார்.
ஆனால், அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.
(சாலமோனின் ஞானம் 2: 23-24)
சாத்தான் மனிதர்களின் மீது பொறாமை கொண்டதன் காரணம் என்ன?
கடவுளது படைப்புகளில் சிறந்த மணிமுடி மனிதன் ஆவான்.ஏனெனில், கடவுள் தமது வார்த்தையால் மட்டும் மனிதனைப் படைக்கவில்லை. மாறாக,தமது கரங்களாலும் மனிதனை உருவாக்கினார். (தொடக்க நூல் 2:7 ; சாலமோனின் ஞானம் 9:1-2). மேலும்,
அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
(தொடக்கநூல் 1:26-27)
கடவுள் மானிடரை அவரது உருவிலும் ,சாயலிலும் படைத்தார் என்று இறைவசனம் சான்று
பகர்கிறது.
கடவுளுடைய சாயல்
என்றால் என்ன?
கடவுளின் சாயல் என்பது நோய்(பிணி),முதுமை , மரணம் ஆகியவை எதுவுமின்றி
நிறைவான எழில்மிகு இளைஞனாக என்றும் நிலைநிற்கக்கூடிய அழியாமையின் சாயல் ஆகும்.
அவ்வாறே மானிடரையும் கடவுள் உருவாக்கினார்.
தமக்கு உள்ளதைப்போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்; தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார்.எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்; விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
(சீராக்கின் ஞானம் 17:3-4)
எனவேதான், சாத்தான் மானிடரின் மீது பொறாமை கொண்டு மரணத்தை பொய் வார்த்தை வழியாக மானிடரில் விதைத்தான்.
மரணத்திற்கு அடிமையான மனிதனே ‘தன்னுடைய பிள்ளைகள்’ என்றென்றும் வாழ வேண்டுமென விரும்பும் போது, உண்மையும் அன்பும் நிறைந்த கடவுள் தாம்
உருவாக்கிய மக்கள் சாக வேண்டுமென விரும்புவாரா?
ஒருபோதும் இல்லை, என இறைவசனம் சான்று பகர்கிறது.
சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.
(சாலமோனின் ஞானம் 1:13-14).
ஒரு மனிதன் ஓர் பொருளை
அல்லது கருவியை உருவாக்கும் போது அது என்றும் செயல்பட வேண்டும் என நினைப்பான். அதற்கு அவன் அவனுடைய எல்லா திறன்களையும், ஆற்றலையும் பயன்படுத்துவான்.அவ்வாறு உருவாக்கிய கருவி அல்லது பொருள் அதனுடைய செயல்பாட்டை
இழந்துவிட்டால், அந்த மனிதனை மற்றவர்கள், அவனை திறனில்லாத்தவன் என்றும் அவனுடைய செயலில் அவன் தோல்வியடைந்தான்
என்றும் கூறுவர்.
மேலும், கடவுளின் படைப்புகள் அனைத்தும் அவரது வார்த்தைகளால் படைக்கப்பட்டன.எனவே வார்த்தைகளை கடவுள் தம்மிடம் திரும்ப எடுத்துக்கொள்ளும் போது வார்த்தையால் படைத்த படைப்புகள்
அனைத்தும் அழிந்துவிடும். (2 பேதுரு 3:5-7).
ஆனால் கடவுள் தமது கரங்களால்
உருவாக்கின எதுவும் அழிவதில்லை. கடவுள் தமது கரங்களால் மனிதர்களை மட்டுமே உருவாக்கினார்.
அவ்வாறெனில், மனிதர்கள் மரணத்திற்கு உட்படுவதன் வழியாக கடவுள் தமது படைப்புகளில் தோல்வியடைந்து விட்டாரா?
ஒருபோதும் இல்லை.120 ஆண்டுகள் மட்டுமே ஆயுட்காலம் உள்ள மனிதகுலம் அனைத்தும், இன்று வரையுள்ள எல்லா மனிதருடைய இறப்பும் கடவுளுக்கு தோல்வியும்,ஏமாற்றமும் தருவதாக எண்ணலாம்.மேலும், கடவுளின் வார்த்தை என்பது வாழ்வுதரும் ஆவியைத் தரக்கூடியதாகும்.
வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.
(யோவான்
6:63)
அவ்வாறு வாழ்வு
தரும் வார்த்தையின் வழியாக கடவுள் மனிதர்களை ஏதேன் தோட்டத்தில் படைத்து, அவர்களுக்கு கட்டளையும் அருளினார். ஆனால், அவர்கள் கடவுளின் உண்மையும் வாழ்வும் நிறைந்த கட்டளையை
புறக்கணித்து, சாத்தானின் பொய்யும் மரணமும் நிறைந்த வார்த்தைக்கு செவி கொடுத்ததால் , கடவுள் தந்த
நிலைவாழ்வை மனிதன் இழந்து விட்டான். அவ்வாறு, மனிதனுக்குள் பாவமும் மரணமும் நுழைந்தது. ஆகவே,பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமையான மனிதன் சாத்தானின்
ஆட்சிக்கு கீழில் சென்றடைந்தான்.இவ்வாறு, சாத்தானின் ஆட்சிக்கு உட்பட்ட மனிதன் மரணத்திற்கு உட்படாமல் இருந்தால் இறுதிவரை சாத்தானின் அடிமைகளாகவே இருப்பர் என்று தந்தையாகிய கடவுளுக்கு நன்றாக தெரியும்.
ஆகவேதான்,மனிதன் என்றென்றும் வாழ்வதற்காக வாழ்வின்
மரத்திலிருந்து பறித்து உண்ணாமல் இருக்க கடவுள் மனிதரை சாவுக்கு உட்படுத்தினார். சாத்தானின் ஆளுமை நிறைந்த மண்ணினால் உருவாக்கப்பட்ட மனிதனின் உடலை,மரணம் வழியாக கடவுள் சாத்தானிற்கு
விட்டுக்கொடுத்தார்.ஆனால் கடவுள் உயிர்த்தெழுதல்
வழியாக, விண்ணக உடலை தம் மக்களுக்கு அணிவித்து தம்முடன் ஒப்புரவாக்கிக் கொள்கிறார்.
உயிர்த்தெழுதல் என்றால் என்ன?
உயிர்த்தெழுதல் என்பது
கடவுள் தம் மக்களுக்கு கொடுத்த மிகப்பெரிய வாக்குறுதியாகும். 2000 வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தப் பொழுது அவருடன் சேர்ந்து இறை மக்களுள் பலரின் உடல்களும் உயிருடன் எழுப்பப்பட்டு எருசலேமில் பலருக்கு தோன்றினர் ,என இறைவசனம் சான்று
பகர்கிறது. (மத்தேயு 27:50
- 53). இது, உயிர்த்தெழுதலுக்கு கடவுள் கொடுத்த மறுக்க முடியாத அடையாளம்
ஆகும்.
நித்தியத்தோடு ஒப்பிடும்போது அந்தச் சில ஆண்டுகள் கடல்நீரில் ஒருதுளி போன்றவை. கடல் மணலில் ஒரு துகள் போன்றவை.
(சீராக்கின் ஞானம்
18:10)
எதற்காக கடவுள் உயிர்த்தெழுதலை ஏற்படுத்தினார்?
தமது மக்களின் நிலைவாழ்விற்காகவே
கடவுள் உயிர்த்தெழுதலை ஏற்படுத்தினார். உடலின்றி
நிலைவாழ்வு இல்லை.ஆனால், ஊனியல்பின் சட்டங்களுக்கும், பாவத்திற்கும்
அடிமையான உடலில் நிலைவாழ்வு வசிப்பதில்லை. அந்த உடலோடு இறையாட்சியை நெருங்கக்கூட முடியாது.ஆகவேதான்,மண்ணால் உருவாக்கப் பட்ட மனிதனின் உடல் அழிந்து, அழியாத விண்ணக உடலாக உருமாற்றமடைய வேண்டும்.
எவ்வாறு கடவுள் வாழ்வே உண்மை என வெளிப்படுத்துவார்?
இறுதிக் காலத்தில்
ஒரு மக்களினம் சாவுக்கு உட்படாமல் இந்த பூமியில் வைத்தே நிலைவாழ்வை அணிந்துக் கொள்வார்கள் என திருவிவிலியம்
சான்று பகர்கின்றது.
இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் யாவரும் சாகமாட்டோம்; ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம். ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; நாமும் மாற்றுரு பெறுவோம். ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும். அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்; "சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?
(1 கொரிந்தியர்
15: 51-55)
இந்த பூமியில் வைத்து கடவுள் ஏற்பாடு செய்கின்ற சிறந்ததொரு விருந்தில் இறைமகன் இயேசு கிறிஸ்து எல்லா ஊனியல்பின் சட்டங்களையும் , இந்த உலகம் சார்ந்த
சட்டங்களையும் அழித்து, இறைமக்களை விடுவிப்பார். அவ்வாறே,சாவை என்றுமே இல்லாதவாறு
ஒழித்து விடுவார் என்றும் இறைவார்த்தை எடுத்துரைக்கின்றது (எசாயா 25:6-9) .
இறைமக்களின் நிலைவாழ்வு என்பது இம்மானுயேலுடன் (இயேசு கிறிஸ்துவின்) தந்தையாகிய
கடவுளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.இறைமகன் மீண்டும்
இந்த உலகிற்கு அனுப்பப்படும் பொழுதுதான், இறைமக்களுக்கு நிலைவாழ்வை கொண்டு வருகின்றார். (1யோவான் 5:10
- 12).
மேலும், இறைமக்களின் தாழ்வுக்குரிய உடலை,அவர்தம் மாட்சிக்குரிய உடலாக இம்மானுயேல்(இயேசு கிறிஸ்து) உருமாற்றம் அடையச் செய்வார் (எபிரேயர். 9/27 -28, பிலிப்பியர்
3/20 – 21).இவ்வாறு, உருமாற்றம் அடைகின்ற இறைமக்கள் கடவுளுடைய சாயலையும்,உருவத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டு உண்மையான கடவுளோடு என்றும் நிலையாக வாழ்வார்கள்.
இவ்வாறு , மரணம் அழிவிற்குரியவனான சாத்தானிடமிருந்து வந்த பொய் என்றும் வாழ்வே உண்மை என்றும் கடவுள் இந்த உலகிற்கு
வெளிப்படுத்துவார். அப்போது அவர்தான்
உண்மையான கடவுள் என அனைவரும் அறிந்து கொள்வர்.
படைத்தல்
– அழித்தல் – நிலைத்தல் குறித்து இறைமகன்
இம்மானுயேல் அறிவித்திருக்கின்றார்!
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.