உடலின் மீட்பு நெருங்கி வந்துவிட்டது

இயேசு கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையின் வழியாக கடவுளின் அருளால் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் என திருவிவிலியத்தில் பல இறைவார்த்தையின் வாயிலாக நாம் காண்கிறோம்.

உடலின் மீட்பு நெருங்கி வந்துவிட்டது

இயேசு கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையின் வழியாக கடவுளின் அருளால் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் என திருவிவிலியத்தில் பல இறைவார்த்தையின் வாயிலாக நாம் காண்கிறோம்.

 

 இயேசு கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையின் வழியாக கடவுளின் அருளால் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் என திருவிவிலியத்தில் பல இறைவார்த்தைகள்  சான்று பகர்கிறது (2 திமொ. 1/9, எபே. 2/8, எபே. 2/5) . எனவே, இறைமக்களுக்கு மீட்பு கிடைத்து விட்டது என்ற கருத்தை பலர்  கற்றுக்கொடுக்கின்றனர்.ஆனால், தூய ஆவியார் இறைவசனங்களின் வாயிலாக நாம் ஒரு மீட்புக்காக காத்திருக்க வேண்டும் என்றும், இன்னும் ஒரு மீட்பு நமக்கு அருளப்படவிருக்கின்றது என்றும்   கற்றுக் கொடுக்கின்றார்(எபி. 9/27-28, உரோமை. 9/27, உரோமை. 5/10, உரோமை. 5/9, மாற்கு. 16/16 ,திருவெளி. 7/10, 1 பேதுரு 1/10 - 13, 1 பேதுரு 1/5, பிலிப்பி.3/20 - 21). மேலும்,இயேசு கிறிஸ்து மட்டுமே ஏக மீட்பர் எனவும் தூய ஆவியார் கற்றுக் கொடுக்கின்றார்.

 பலரும் மீட்பைக் குறித்து இவ்வாறு கூறுவதன் காரணம், அவர்களது பார்வையில் மீட்பைக் குறித்துள்ள தவறான வேறுபட்ட கண்ணோட்டமாகும். இது, கடவுளுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் இடையில் தொடர்பில்லாத தத்துவங்களின் தாக்கம் வழியாக பலர் இவ்வாறு கற்றுக்கொடுக்கின்றனர்.மேலும்,அனைத்து இறை மக்களுடைய கருத்தானது  மீட்பு என்பது, மனிதனின் உடலிலிருந்து ஆன்மா மட்டும் பிரிந்து மகிழ்ச்சிகரமான நிலைக்கு சென்றடைவதே மீட்பு என  விசுவசிக்கின்றனர். ஆனால், திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ளதும் , மீட்பரும் போதகருமான இயேசு கிறிஸ்து சான்று பகர்ந்ததுமான மீட்பு அது கிடையாது.

 

ஆன்மா, மனம், உடல் ஆகிய மூன்றும் இணைந்தவன்தான் முழுமையான மனிதன் ஆவான். இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை இழந்துவிட்டவன், முழுமையான மனிதனாக இருக்க முடியாது.ஆகவே, உண்மையான மீட்பு என்பது இம்மூன்றும் இணைந்த முழுமையான மனிதனின்  மீட்பையே குறிக்கின்றது. இதுவே, இறைவாக்கினர்களும், இயேசு கிறிஸ்துவும், திருத்தூதர்களும் கற்றுக்கொடுத்ததும், இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தியதுமான மீட்பாகும்.

உண்மையான மீட்பு என்பது என்ன?

 

 உண்மையான மீட்பு என்பது நிலைவாழ்வாகும். அதுவே, இயேசுகிறிஸ்து இறைமக்களுக்கு அருளிய வாக்குறுதி.

 அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்.

(1 யோவான் 2:25).

உடலின் உயிர் குறுதியில் உள்ளது (லேவி. 17/11).இந்த உயிராகிய குறுதி  குடி கொள்வது உடலில் ஆகும்.எனவே, இரத்தம் குடி கொள்வதற்கு உடல் மிக அவசியமானது. இதிலிருந்து உடல் இல்லையெனில் நிலைவாழ்வு இல்லை என்பதுெளிவாகிறது.மேலும்,பாவத்திற்கு அடிமையான உடலில் நிலை வாழ்வு குடிக் கொள்வதில்லை.

 அப்போது நிலைவாழ்வை குடிக் கொள்ள எத்தகைய உடல் வேண்டும்?

  பாவமும், மரணமும் இல்லாத ஒரு உடல் , அதாவது விண்ணை சார்ந்த உடலாக இருக்க வேண்டும். எனவே, இயேசு கிறிஸ்துவைப் போல மாட்சிக்குரிய  உடலை பெற்றுக் கொண்டால் மட்டுமே நிலைவாழ்வை அடைய முடியும்.

   ஒரு மனிதன் வீழ்ச்சியுற்ற நிலையில் இருந்து, மேலே எழுந்தபின், மீண்டும்  வீழ்ச்சி                                   அடையாதிருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே மீட்பாகக் கருதப்படுகிறது.

எந்த நிலையில் கடவுளின் மக்கள் வீழ்ந்து போனார்கள்?

கடவுள் மானிடரை என்றும் உள்ள நிலையான இளமையிலும், மரணம் இல்லாதவராகவும், கடவுளின் மாட்சிக்குரியவராகவும், தமக்கு  உள்ளதை போன்ற வலிமை உடையவராகவும், அனைத்து படைப்புகள் மீதும்  அதிகாரம் உள்ளவராகவும் படைத்தார் (தொடக்க. 1/26-28, சா.ஞானம். 2/23, சீராக்.17/3 - 4).

மேலும்,பாவமோ, நோய்நொடிகளோ(பிணி), மரணமோ, முதுமையோ அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால்,சூழ்ச்சிமிக்க சாத்தான் தமது பொய் வார்த்தையால் மனிதனை ஏமாற்றி கடவுளின் கட்டளைகளை மீறச் செய்தான். அப்போது, கடவுள் மனிதனுக்கு அருளிய அனைத்து ஆட்சியையும், அதிகாரத்தையும்  சாத்தான் மனிதனிடம் இருந்து தட்டிப் பறித்துக் கொண்டான்.  எனவே, மனிதன் இழந்த ஆட்சியையும் , அதிகாரத்தையும்  திரும்ப பெற்றுக் கொண்டு, பாவம் செய்யாமல் இருக்கக் கூடிய கடவுளின் அருளை  பெற்றுக்கொள்ளும் போது தான்  உண்மையான மீட்பின் முழுமை வெளிப்படும்இந்த மீட்பே நிலை வாழ்வு ஆகும்.

ஆனால்,இன்று வரை யாரும் இம்மீட்பை பெற்றுக்கொள்ளவில்லைஇந்த மீட்பை இறைமகன் இயேசு கிறிஸ்துவே  இறைமக்களுக்கு அருள்வார்.வேறு யாராலும் இந்த மீட்பை அருள இயலாது.

இயேசு கிறிஸ்து அவரது முதல் வருகையில் இந்த மீட்பை யாருக்காவது அருளினாரா?

 இயேசு கிறிஸ்து அவருடைய முதல் வருகையில்  யாருக்கும் இம்மீட்பை அருளவில்லை. ஏனெனில்,பாவமன்னிப்பாகும் மீட்பின் அருளை மட்டுமே அவர் வழங்கினார்.மேலும், 2000 வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்து மரணத்திற்கு உட்பட்டவராகவே  வந்தார். ஆனால், அவரது இரண்டாம் வருகையில்  நிலை வாழ்வை கொண்டே வந்திருக்கிறார்.       ( 1 யோவா.5/10 - 12).

 இந்த நிலை வாழ்வின் மீட்பைக் குறித்து திருத்தூதர்கள் வழியாக தூய ஆவியார் அருளிய சான்றுகள்:

·          பேதுரு வழியாக:

                        நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.

(1 பேதுரு 1:5)

·         பவுல் வழியாக:

             அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

(எபிரேயர் 9:28)    

 நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

(பிலிப்பியர் 3:20-21)

படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

(உரோமையர் 8:23)

 

இதிலிருந்து, நாம் இந்த மீட்பை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில்,இம்மீட்பு வெளிப்படுவது இறுதிக்காலத்தில் என்று இறைவசனம் சான்று பகர்கிறது. எனவேதான், இந்த மீட்பு  இன்றும் ஒரு எதிர்நோக்காகவே  இருக்கின்றது.

    இவ்வாறு, இறைமக்களுக்கு ஒரு உடலின மீட்பு அருளப்பட உள்ளது என்பதைறிந்துொள்ளலாம். இம்மீட்பின் வழியாக  இறைமக்களுடைய உடல் இயேசு கிறிஸ்துவின் மாட்சிக்குரிய  உடலாக உருமாற்றமடைந்து தூயவர்களாகவும், மாசற்றவர்களாகவும், மரணம் இல்லாதவர்களாகவும்,அழியாதவர்களாகவும்  தந்தையாகிய கடவுளோடு சேர்ந்து புதிய பூமியில் நிலையாக வாழ்வர். இம்மீட்பை நாம்   அடைந்து விட்டால் மரணமோ, முதுமையோ, நோயோ நம்மீது ஆட்சி செலுத்தாது. மேலும் இம்மீட்பு வழி அழிவுக்குரிய நம் உடல் அழியாமையை அணிந்துகொள்ளும்(1 கொரி. 15/51-56).இதுவே  மனிதன் உடலால் அடைய வேண்டிய மீட்பின் முழுமை என்று கடவுள் இறைவார்த்தை வழியாக எடுத்துரைக்கிறார்.மேலும் தந்தையாகிய கடவுளின் திருவுளமும் , நீதியும் இதுவே.

 

      இந்த மீட்பை தருபவரான, அரசர்களுக்கெல்லாம் அரசரும், இம்மானுயேல்(இயேசு கிறிஸ்து) என்ற பெயரை உடையவரும்  விண்ணை விட்டு  இறங்கி இந்த பூமிக்கு வந்து விட்டார். இதோ!கடவுள் நம்மோடு இருக்கின்றார்.

    

      படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.    நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா?  (உரோமை .8/23-24).

Related Articles

View All

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.

இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.

Chat with us