தமது மக்கள் ஒவ்வொரும் தன் கண் முன்பாக குற்றமற்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் அன்பில் ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே தந்தையாகிய கடவுளின் திருவுளம். அதற்காகவே மக்களைப் படைத்து அவர்களுக்கு உடல் மற்றும் உள்ளம் போன்ற தனித்தன்மைகளை அளித்தார்.
தமது மக்கள் ஒவ்வொரும் தன் கண் முன்பாக குற்றமற்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் அன்பில் ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே தந்தையாகிய கடவுளின் திருவுளம். அதற்காகவே மக்களைப் படைத்து அவர்களுக்கு உடல் மற்றும் உள்ளம் போன்ற தனித்தன்மைகளை அளித்தார்.
உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக் கொள்வேன் என்றும் திரளான மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச் சொத்தாகிய இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேன் என்றும்
எண்ணிக் கொண்டிருந்தேன். என் தந்தை’ என என்னை அழைப்பாய் என்றும், என்னிடமிருந்து விலகிச் செல்லமாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன்.. ‘ (எரேமியா 3:19)
தமது பிள்ளைகளை அன்பு செய்து எப்போதும் அவர்களோடு வாழ வேண்டும் என்று விரும்பாத தந்தை யாரேனும் இவ்வுலகத்தில் உள்ளனரா?
ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிகளும் பரிசுத்த அன்னையின் திருக்குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமது குடும்பமும் அவ்வாறாக இருக்க வேண்டுமென்று வேண்டுதல் செய்கின்றனர். உண்மையில், தந்தையாகிய கடவுளுடன் நமது முதற்பெற்றோர்கள் அவ்வாறாகத்தான் இருந்தார்கள்.ஆனால்,பாவம் செய்ததன் வழியாய் தந்தையாகிய கடவுளின் அருகாமையிலிருந்து அகன்றுவாழ வேண்டியதாயிற்று. ஏனெனில்,பாவமுள்ள உடலோடு கடவுளைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது
என்று இறைவார்த்தை சான்று பகர்கிறது. எனவே தந்தையாகிய கடவுள் தமது திருவுளத்தை சிறிது காலம்
நீட்டிக்க வேண்டியதாயிற்று.
ஆனால், இப்பொழுது “காலம் வந்துவிட்டதால்” இயேசு கிறிஸ்துவின் வழியாக தமது வாக்குறுதியை நிறைவேற்றிக் கொண்டு மக்களினத்தை சந்திக்க வருகின்றார்.
“ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன், இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்க தயாராயிரு!”(ஆமோஸ் 4:12)
ஆகவே,ஒவ்வொருவரும் தந்தையாகிய
கடவுளின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்க கடமைப்பட்டிருக்கின்றோம். நாம் அனைவரும் கர்த்தர் கற்பித்த ஜெபம் சொல்கின்றோம். ஆனால்,யாரும் இன்று வரை அதன் உண்மையான பொருளை அறிந்து
கொள்ளவில்லை.
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். (“ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.”) (மத்தேயு 6:10-13)
இயேசு கிறிஸ்து தமது நற்செய்தி பயணத்தில் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்த எதிர்நோக்குடைய ஒரேயொரு ஜெபம் இதுவே ஆகும்.
இதில், “உமது ஆட்சி வருக!” என்று சொல்கிறோம். ஆனால்,உண்மையில் வல்லமையுடன் வரவிருகின்ற இறைவனின்
ஆட்சியை(இறையாட்சி) எதிர்நோக்கியா இதை சொல்கின்றோம்?
அதேபோன்று “உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக” என்று எதற்காக இயேசுகிறிஸ்து கற்றுக்கொடுத்தார்?
இயேசுகிறிஸ்து மீண்டும் வரும்பொழுது சொர்கத்தில் இருப்பதுபோல இந்த பூமியிலும் இருக்க வேண்டும் என்பது அவரது திருவுளம்
ஆகும். அதுமட்டுமல்ல சொர்க்கத்தில் இருப்பதுபோல மண்ணுலகிலும் கடவுளாகிய ஆண்டவரின் திருவுளம் நிறுவாவிடில் தூயவரான கடவுள் பூமிக்கு வரவியலாது. எனவேதான் இயேசு கிறிஸ்து மக்களிடம் எதிர்பார்ப்பது,
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய்
இருங்கள். (மத்தேயு 5:48)
மேலும் தந்தையாகிய கடவுள்,பரிசுத்த அம்மா,இம்மானுயேல்(இயேசு கிறிஸ்து) இந்த பூமிக்கு வருவார்கள். எனவே, கடவுளின் மக்கள் அனைவரும் வானதூதர்களைவிட பெரியவர்களாகவும், தூயோர்களாகவும் உயர வேண்டியுள்ளது.
தந்தையாகிய கடவுளின் வருகையை உறுதி செய்யும் ஏராளமான இறை வார்த்தைகள்:
· அணுக முடியாத ஒளியுடன் வருபவர்.
அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக
முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும்
முடியாது . அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென். (1திமொத்தேயு6:16)
· ஒரேபு மலையில் கடவுளின் மாட்சி வெளிப்பட்ட போது மக்கள் நடுங்கினர்.
மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது.
மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி
எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர். கடவுளைச்
சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும்
மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள். சீனாய் மலை
முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி
வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும்
மிகவும் அதிர்ந்தது. எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று. மோசே
பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார்.
(விடுதலைப் பயணம் 19: 16-19
மோசேயை நோக்கி நீர் எங்களோடு பேசும் நாங்கள் கேட்போம். கடவுள்
எங்களோடு பேசவே வேண்டாம். ஏனெனில், நாங்கள் செத்துப் போவோம்” என்றனர்.
(வி.பயணம்20:19)
· தண்டனை
தீர்ப்பு வழங்க வருகின்றார்.
நீ இப்போதே புறப்பட்டு போ உன்னிடம் நான் கூறியுள்ளபடி
மக்களை நடத்தி செல் இதோ என் தூதன் உன் முன்னே செல்வார் ஆயினும் நான் தண்டனை
தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன் என்றார். (வி.பயணம்32:34)
தந்தையாகிய கடவுள் மக்களின் பாவங்களுக்காக தண்டனை தீர்ப்பு வழங்க இன்னும் வரவில்லை. ஆனால், இயேசுகிறிஸ்து வழியாக கடவுள் பூமியை சந்தித்துவிட்டார் என்று பல சபைகளும் கற்பிக்கின்றது. உண்மையில் இயேசுகிறிஸ்து வந்தது பாவிகளுக்கு பாவமன்னிப்பாகும் மீட்பை அருளவும், தமது உயிரை கொடுப்பதற்குமாகும்.
இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல.மாறாக, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தன் உயிரை
கொடுப்பதற்கும் வந்தார் என்று கூறினார். (மத்தேயு20:28)
இழந்து போனதை தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார் என்று
சொன்னார். (லூக்கா 19:10)
· அவரது வருகையில் பஞ்சபூதங்கள் வெந்துருகும்
ஆண்டவருடைய நாள் திருடனைப் போல வரும். வானங்கள் பெருமுழுக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவை யாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவு படுத்த
வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப்
போகும்.(2பேதுரு3:10-12)
இதோ! ஆண்டவரின் நாள் வருகின்றது கொடுமையும் கோபமும் கடும்
சீற்றமும் நிறைந்த நாள் அது; மண்ணுலகை பாழ்நிலமாக்கும் நாள் அது; அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது. (எசாயா13:9)
· பாவிகளை நெருப்பால்
அழித்துவிடும் வருகை
நீர் காட்சியளிக்கும்பொழுது, அவர்களை
நெருப்புச்சூளை ஆக்குவீர்; ஆண்டவர் சினங்கொண்டு அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.(தி.பாடல்கள்21:9)
· விண்ணுலகும் கீழுலகும் நடுங்குகின்ற வருகை.
இதோ! அவரது வருகையின்போது வானமும் வானகத்தின் மேல் உள்ள
விண்ணகமும் கீழுலகும் மண்ணுலகும் நடுங்கும். (சீராக்கின் ஞானம் 16:18)
· குடிவெறியரைப்
போல் மண்ணுலகம் தள்ளாடும்.
குடிவெறியரைப்போல் மண்ணுலகம் தள்ளாடுகின்றது; குடிசைபோல் அது இடம் பெயர்ந்து செல்கின்றது; அதன்
குற்றப்பழி பாரச்சுமையாய் அதை அழுத்துகின்றது; அது
வீழ்ச்சியடையும்; இனி ஒருபோதும் எழாது.(எசாயா24:20)
· கடவுளின்
வருகையில் நிறைவுப் பெறும்.
ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனின் அரண்மனையிலும்
எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்கள் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே: ‘அவை யாவும்
பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படும். நான் அவற்றின்மீது எனது கவனத்தைத் திருப்பும்வரை
அவை அங்கேயே இருக்கும். பின்னர், நான் அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து இவ்விடத்தில் வைக்கச்
செய்வேன்’ என்கிறார் ஆண்டவர்(எரேமியா 27:21-22)
· தந்தையாகிய
கடவுள் நீதியை தமது ஏகமகன் வழியாக நிறைவேற்றுகின்ற நாள்தான் மானிடமகனின்
வருகை.
உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால்
மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக்கோள்கள் அதிரும். அப்போது
மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள்
காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள்
தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.” (லூக்கா 21:26-28)
· தந்தையாகிய
கடவுள் வெளிப்படும்பொழுது அவரை முழுமையாக அறிவோம்
தந்தையாகிய கடவுளின் முகத்தை நாம் பார்ப்போம்
என்றும் அவரை முழுமையாக அறிந்துகொள்வோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஏனெனில், இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க்
காண்கிறோம். ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.(1கொரிந்தியர்13:12)
· தந்தையாகிய
கடவுளின் மற்றும் இறைமகனின் மாட்சி வெளிப்படும்போதுதான்
இறைமக்களின் எதிர்நோக்கு நிறைவேறும்
மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின்
மாட்சி வெளிப்படப்போகிறது. (தீத்து2:13)
· இறையாட்சியை நல்ல பலன்
அளிப்பவர்களுக்கு கொடுக்க வருகின்றார்.
எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை
என்ன செய்வார்? என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், “அத்தீயோரை
ஈவிரக்கமின்றி ஒழித்துவிடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்
வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு
விடுவார்” என்றார்கள். (மத்தேயு 21:40-41)
கடவுள் சபையிடம்தான் இறையாட்சியை எழுப்ப ஒப்படைத்தார்.
நீங்களும் உயிருள்ள கற்கலாயிருந்து ஆவிக்குரிய இல்லமாக
கட்டி எழுப்பப்படுவீர்களாக இயேசு கிறிஸ்துவின் வழியாய் கடவுளுக்கு உகந்த
ஆவிக்குரிய வழிகளை படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக .
ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி மரபினர்
அரசகுருக்களின் கூட்டத்தினர் தூய மக்களினத்தினர், அவரது உரிமை
சொத்தான மக்கள். எனவே, உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்குள்
அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி (1பேதுரு2:5,9).
ஆனால், சபை பலன் அளிக்காததினால் இறையாட்சியை அவர்களிடமிருந்து எடுத்து பலன் அளிக்கின்ற ஒரு விசுவாசத்தின் மக்களினத்திற்கு அளிக்க, நல்லவரான கடவுள் வருகின்றார். படைகளின் ஆண்டவரது முந்திரி தோட்டம் இஸ்ரயேல் குடும்பமாகும்.
படைகளின் ஆண்டவரது திராட்சை தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே! அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூத மக்களே, நீதி விளையும் என்று எதிர்நோக்கி இருந்தனர். ஆனால் விளைந்தது இரத்த பழி, நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார். ஆனால், தழைத்ததோ முறைப்பாடு. (எசாயா 5:7)
இயேசு கிறிஸ்துவே உண்மையான திராட்சைச் செடி. அதை நட்டு வளர்ப்பவர் தந்தையாகிய கடவுள் ஆவார். அதாவது, திராட்சை தோட்டத்தின் உரிமையாளர். (யோவான் 15:1)
இறையாட்சி பறைசாற்றத் தொடங்கியது திருமுழுக்கு யோவான்
முதலாகும்.(லூக்கா 16:16) அதற்கு முன்பு இறையாட்சியை பறைசாற்ற தந்தையாகிய கடவுள்
எவரையும் நியமிக்கவில்லை. அதனால், யூத குருக்கள் அல்ல மூலைக்கல்லாகிய இயேசு கிறிஸ்துவை
புறக்கணித்த பணியாளர்கள் (எபேசியர்2:20-22). மாறாக,அது இன்றைய சபை
அதிகாரிகள் ஆவர். சபை அதிகாரிகள் இறை இல்லம் நிறுவப்படாததால் தந்தையாகிய கடவுள் நிறுவிய மூலைக்கல்லினை
அவர்கள் புறக்கணித்து அந்த கல்லில் அவர்கள் தடுக்கி விழுந்து நொறுங்கிப்
போகின்றனர்.(மத்தேயு 21:44,உரோமையர் 9:33)
எனவே, உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு
உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். (மத்தேயு 21:43)
· தந்தையாகிய
கடவுள் சிறு மந்தைக்கு ஆட்சியுரிமை வழங்க திருவுளம் கொண்டார்.
சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம்
கொண்டுள்ளார். (லூக்கா 12:32)
நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து
அவர்களை வென்றது. தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி
வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும்வரையில் இவ்வாறு
நடந்தது. (தானியேல் 7:21-22)
தொன்மை வாய்ந்தவர் என்று குறிப்பிடுவது தந்தையாகிய கடவுளை ஆகும். தந்தையாகிய கடவுள் தன் மகன் இயேசு கிறிஸ்துவிற்கு(இம்மானுயேலிற்கு) இந்த ஆட்சியுரிமையை வழங்கினார். (லூக்கா 22:29, தானியேல் 7:13-14,கொலோசையர் 1:15-16).
இந்த, ஆட்சியுரிமையை இயேசு கிறிஸ்து தம் சகோதரர்களுக்கு
கொடுத்தார்.
என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும்
உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே, என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து
உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்ப வழங்க
அரியணையில் அமர்வீர்கள்.(லூக்கா 22:29-30)
ஆனால், அரசருக்கெல்லாம் அரசரானவர்க்கு எதிராக
போராடும் (தானியேல் 8:25) அழிவின்
சந்ததியாகிய அந்தி கிறிஸ்து கடவுளின் தலைபேறுகளாகிய (லூக்கா 2:23) இந்த சிறு மந்தைக்கு எதிராகவும் போராடும். இருப்பினும், இயேசு கிறிஸ்து (இம்மானுயேல்) வரும்போது அவரது தோற்றமே நெறிகெட்ட அவனை அழித்துவிடும். (2தெசலோனிக்கர் 2:7-8).
· இறுதி தீர்ப்பு
நடத்த தந்தையாகிய கடவுள் வருகிறார்.
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில்
இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன் மக்கள்
முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின்
முன்னிலையில் நானும் மறுதலிப்பேன் .(மத்தேயு 10:32-33)
மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன்
வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு
அளிப்பார் (மத்தேயு 16:27).
அன்று, இயேசு கிறிஸ்து மக்களினத்தை ஏற்றுக்கொள்வதும் மறுதலிப்பதும் தந்தையாகிய கடவுளின்
முன்பாகும். அதற்காக தந்தையாகிய கடவுள் வர வேண்டும்.இறுதித் தீர்ப்பு நடைபெறுவது இந்த இடத்திலாகும்.
வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப் பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை
நீக்கிவிடமாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள்
முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்
(திருவெளிப்பாடு3:5).
தந்தையாகிய கடவுள் வரும்போது ஒரு சிறு
மந்தையை குற்றமற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும் தூயோர்களாகவும் அவருக்கு அர்ப்பணிக்க
வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் பணியாக இருந்தது. அதற்காக தம்முடைய சிறு மந்தையை கடவுள் இறைமகனுக்கு அளித்து, அவர்களை இறுதிகாலத்தில்
ஒன்று சேர்த்து தன் ஆத்மாவினால் புனிதப்படுத்துகின்றார்.
இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச்சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன்
விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாக கடவுள் உங்களைத் தம்மோடு
ஒப்புரவாக்கினார். (கொலோசையர்1:22)
· தந்தையாகிய
கடவுளை நேரடியாக காண்போம்.
நம் தந்தை நம்மிடம் எத்துனைணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து
கொள்ளாததால் தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால், அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில், அவர் இருப்பது போல அவரைக் காண்போம். (1யோவான் 3:1-3).
இதோ!சர்வ வல்லமையுடைய அச்சத்திற்குரிய தந்தையாகிய
கடவுள் வருகின்றார் என்று சத்வார்த்தை இடிமுழக்கம் போல் முழங்குகிறது.
எனவே மண்ணுலகும் விண்ணுலகும் நடுங்குகின்ற; பஞ்சபூதங்கள் வெந்துருகுகின்ற தந்தையாகிய கடவுளது வருகையின் நாளை எதிர்நோக்கி காத்திருங்கள்.
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.