திருவிவிலியத்தில் தொடக்கநூல் முதல் திருவெளிப்பாடு வரையுள்ள அனைத்து நூல்களையும் ஆராய்ந்தால், நமது தந்தையாகிய கடவுள் சரீர இரத்தம் உள்ள முழுமையான பண்பை உடையவர் என்று ஏராளமான இறைவசனங்கள் வழியாக அறிந்து கொள்ள முடியும்.
திருவிவிலியத்தில் தொடக்கநூல்
முதல் திருவெளிப்பாடு வரையுள்ள அனைத்து நூல்களையும் ஆராய்ந்தால், நமது
தந்தையாகிய கடவுள் சரீர இரத்தம் உள்ள முழுமையான பண்பை உடையவர் என்று ஏராளமான இறைவசனங்கள்
வழியாக அறிந்து கொள்ள முடியும்.
தந்தையாகிய கடவுளின் படைப்புகளில்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டுமே தமது சொந்த
தனித்தன்மையில் பங்களித்தார். அதாவது,
தமது சொந்த சாயலிலும் உருவிலும் மனிதர்களை படைத்தார்.
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை படைத்தார். (தொடக்கநூல் 1:27)
இதிலிருந்து, ஆதாம் தந்தையாகிய கடவுளின்
சரீரத்திலும் இரத்தத்திலும் பங்கு பெற்றார் எனலாம். அதுபோலவே, ஆதாமில் இருந்த அனைத்து மக்களினத்தாரும் இதில் பங்கு பெற்றனர்.
ஒரே ஆளிலிருந்து
அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும்
குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். (தி.பணிகள் 17:26)
ஆனால், சூழ்ச்சிமிக்க சாத்தான் பொய் வார்த்தையை பழத்தில் நுழைத்து தந்திரமாக ஏவாளை வஞ்சித்தான். சாத்தானின் வார்த்தையை விசுவசித்து பழத்தை உண்ட ஆதாமும், ஏவாளும் தந்தையாகிய
கடவுளின் சரீரத்திலும் இரத்தத்திலும் பெற்றிருந்த
பங்கினை இழந்தனர். இவ்வாறு ஆதாம் மற்றும் ஏவாளின் உடல்கள் பாவமும் மரணமும் நிறைந்ததாய் மாறியது. ஆதாமுடன் சேர்ந்து அனைத்து
மக்களினமும் அந்நிலையை அடைந்தனர் (ஜென்ம பாவம்).
ஒரே ஒரு மனிதன்
வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அது போலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக் கொண்டது. (உரோ 5:12)
எனவேதான், இறைமக்கள் மீண்டும் கடவுளின் ஊனிலும் இரத்தத்திலும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக “வார்த்தையான” இறைமகன் இயேசு கிறிஸ்து தந்தையின்
ஊனிலும் இரத்தத்திலும் பங்கு பெற்றார்.
ஊனும் இரத்தமும்
கொண்ட அப்பிள்ளைகளைப்போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். (எபிரேயர் 2:14)
“வார்த்தையான” இறைமகன் இயேசு
கிறிஸ்துவிற்கு தந்தையாகிய கடவுளின் ஊனும் இரத்தமும் கிடைத்தது பரிசுத்த அம்மாவிடம்
இருந்துதான்.
ஆண்டவர் தம்
படைப்பின் தொடக்கத்திலேயே, தொல் பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே,
என்னைப் படைத்தார். தொடக்கத்தில்,
பூவுலகு உண்டாகு முன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்
பெற்றேன். (நீதிமொழிகள் 8:22-30)
அவ்வாறு இறைமக்கள் மீண்டும் தந்தையாகிய கடவுளது ஊனிலும் இரத்தத்திலும்
பங்கு பெறுவதற்காக சாத்தான் செய்த அதே செயலை இறைமகன் இயேசு கிறிஸ்து செய்தார். அதாவது பொய் வார்த்தைக்கு பதிலாக “வாழ்வு தரும் வார்த்தையை” அப்பத்தில் நுழைத்தார். இறைமக்கள் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு
தரும் வார்த்தையை விசுவசித்து திருப்பலியில் அப்பத்தை உண்டு திராட்சை இரசத்தை பருகும்போதெல்லாம், தந்தையாகிய
கடவுளின் ஊனிலும் இரத்தத்திலும் பங்கு பெறுகின்றனர். இதற்காகவே, இறைமகன் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்தினார். ஆனால், கடவுளின் ஊனிலும் இரத்தத்திலும் முழுமையாக நாம் பங்கு பெறுவது வல்லமையுடன் வரவிருகின்ற இறையாட்சியில்தான். அதாவது, தந்தையாகிய கடவுள் தயார் செய்திருக்கின்ற விருந்தில்.
இறைமக்களில் நீதிமான்களும்,
இறைவாக்கினர்களும் தந்தையாகிய கடவுளைக் காண விரும்பினர். ஆனால் தந்தையாகிய கடவுளைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க
முடியாது என்று இறைவசனம் சான்று பகர்கிறது. ஏனெனில், பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமையான உடலோடு தந்தையாகிய
கடவுளைப் பார்க்க இயலாது.
எனவேதான், மோசே உம்மாட்சியை எனக்கு காட்டும்
என்று தந்தையாகிய கடவுளிடம் கேட்டபொழுது அவர் இவ்வாறு கூறினார், யார் யாருக்கு நான் பரிவு
காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு பரிவு காட்டுவேன். யார்
யாருக்கு நான் இரக்கம் காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன் என்று
கூறி, அவரது கையால் மோசேவின் முகத்தை மறைத்து தமது பின்புறத்தை மட்டும் காட்டினார்.
ஆனால், இப்பொழுது அவரது பரிவும் இரக்கமும் இயேசு கிறிஸ்து வழியாக இறைமக்களுக்கு அருளப்பட்டுள்ளது.
ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன், இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!
(ஆமோஸ் 4:12)
ஆகவே தந்தையாகிய கடவுள் மக்களை சந்திக்க வரும் நாளில் அவரது வல்லமையாலும் இரக்கத்தாலும் பாதுகாக்கப்பட்ட முதற்பேறான மக்களுக்கு இம்மீட்பை அருளி (1 பேதுரு1:5) தமது மாட்சியை (தமது முகத்தை) அவர்களுக்கு வெளிப்படுத்துவார்.
நம் தந்தை நம்மிடம்
எத்துணை அன்பு கொண்டு உள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும்
அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி
எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால், அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில், அவர் இருப்பது போல் அவரைக் காண்போம். (1யோவான் 3:1-3)
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.