வாக்குறுதி அளிக்கப்பட்ட புதிய பூமி நிலையான நகரம்

இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு நிலையான நகரம் எதுவுமில்லை. எனவே பூமியும் அதிலுள்ள அனைத்தும் அகற்றப்படவுள்ளது.ஆனால், சாத்தானின் தீண்டாமை மற்றும் பாவத்தின் மணம் இல்லாத தூய்மையின் கூடாரம் தான் சொர்க்க சீயோன்.

வாக்குறுதி அளிக்கப்பட்ட புதிய பூமி நிலையான நகரம்

இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு நிலையான நகரம் எதுவுமில்லை. எனவே பூமியும் அதிலுள்ள அனைத்தும் அகற்றப்படவுள்ளது.ஆனால், சாத்தானின் தீண்டாமை மற்றும் பாவத்தின் மணம் இல்லாத தூய்மையின் கூடாரம் தான் சொர்க்க சீயோன்.

இறைவசனம் இவ்வாறு சான்று பகர்கிறது.

பழங்காலத்திலிருந்தே கடவுளுடைய வார்த்தையால் விண்ணுலகும் மண்ணுலகும் தோன்றின. மண்ணுலகம் நீரிலிருந்தும் நீராலும் நிலைபெற்றிருந்தது என்பதை இவர்கள் வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள்.அந்த நீராலே, வெள்ளப்பெருக்கினால் அப்போதிருந்த உலகம் அழிவுற்றது. இப்போதுள்ள விண்ணுலகும் மண்ணுலகும் அதே வார்த்தையினாலே தீக்கிரையாவதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இறைப்பற்றில்லாதோர் அழிவுற வேண்டிய தீர்ப்பு நாள் வரையிலும் அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன. (2 பேதுரு 3: 5-7)

அதாவது, இப்போதுள்ள விண்ணுலகு, மண்ணுலகு ஆகிய அனைத்தும் படைக்கப்பட்டதும், நிலைபெற்றிருப்பதும்  இறைவார்த்தையால் தான். எனவே, அந்த இறைவார்த்தைகளைத்  திருப்பி எடுத்துக் கொள்ளும் போது  இவையெல்லாம் அழிந்துவிடும். விண்ணும் மண்ணும் ஒழிந்து  போகும்போதுதான் அனைத்தும் நிறைவேறும்(மத்தேயு 5:18). ஆகவே, சாத்தானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பூமி தீக்கிரையாகும் என்பது தெளிவாகிறது (2 பேதுரு 3:10).  அவ்வாறு அசையாதவை நித்தியம் நிலைத்து நிற்பதற்காக, படைக்கப்பட்டவையும் இந்த பூமியும் அதில் உள்ள அனைத்தும் நீக்கம் செய்யப்படும் (எபிரேயர் 12: 26-27). மேலும் இந்த பூமியில் நமக்கு நிலையான நகரம் இல்லை (எபிரேயம் 13:14).

ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கடவுளின் மக்கள், இவ்வுலகில் சாத்தானைக் கீழ்படுத்தி, சாத்தான் பறித்துக் கொண்ட அனைத்தையும் திரும்பப் பெற்று, திரும்பி வருவதற்காக தான் தந்தையாகிய கடவுள் மீட்பின் திட்டங்களை  வடிவமைத்தார் (எரேமியா 29: 11-14). ஆனால், கடவுள் தமது மக்களை  திரும்ப அழைத்து செல்வது தோட்டத்திற்கு அல்ல. மாறாக, அற்புதமான ஒரு நகரத்திற்கு தான். மேலும்,மிகவும் உயர்வாகக் கூறப்படுகின்ற இந்த சொர்க்க சீயோன்  கட்டப்பட்டதும், அடித்தளமிட்டதும் ஒரு அமைப்பாக உருவாக்கியதும் கடவுளே ஆவார் ( திருப்பாடல்கள் 82: 1-3,5 ; எபிரேயர் 11: 10).

சொர்க்க சீயோனின் தனித்தன்மைகள்:

·         சாத்தானின் தீண்டாமையும், பாவத்தின் மணமும் இல்லாத தூய்மையான கூடாரம்தான் இந்த நகரம்.

·         இறைமக்களுக்குக் இவ்விடத்தில் கடவுளின் உரிமைப் பேறும், இயேசு கிறிஸ்துவின் (இம்மானுயேலின்) பங்கும் அளிக்கப்படும்.

·         கடவுள் இறைமக்களுக்காக  கண்ணுக்குப் புலப்படாததும், செவிக்கு எட்டாததும் ஆகிய அழியாத செல்வத்தை இந்த நகரத்தில் தயார் செய்து வைத்திருக்கிறார் (1 கொரிந்தியர் 2: 9 ; திருவெளிப்பாடு 21: 10-27) .

·         விண்ணகத்தின் எல்லா ஆன்மீக வரங்களால்  நிறைந்த இறைமக்கள் இந்த நகரத்தில் சர்வ அதிகாரத்தோடும், சர்வ மாட்சியோடும் தந்தையாகிய கடவுளோடு சேர்ந்து வாழ்வர் (திருவெளிப்பாடு 21:1-3).

·         ஏதேன் தோட்டத்தில் இருந்த அதே இறையாட்சி இவ்விடத்தில் மீண்டும் சீர்படுத்தப்படும் (எரேமியா 29:11-14).

 

அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

(2 பேதுரு 3:13)

இவ்வாறு, அவர் வாக்களித்த புதிய பூமியில் தான் இந்த நகரம் அமைக்கப்பட்டுள்ளதுமேலும், பிரபஞ்சத்தின் முடிவில்லா எல்லையை மனிதன் அடைந்தாலும், நட்சத்திரத்தின் இரகசியங்களை கண்டுபிடித்தாலும் மனிதனின் பார்வையிலிருந்து புதிய பூமி மறைவாகத்தான் உள்ளது. ஏனெனில், காலம் நிறைவேறும் போது மட்டும் வெளிப்படுவதற்காக எலக்ட்ரானிக் ஜாமர் போன்ற ஒரு கவசத்தினுள் கடவுளின் தூதர்களான கெருபுகளால் அது பாதுகாக்கப்படுகிறது.

இந்த நித்திய நகரத்தில் உறைவிடங்கள்  ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை அழைத்துக்கொள்வேன் என்பதுதான் இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதி ஆகும். எனவேதான், இயேசு கிறிஸ்து இவ்வாறெல்லாம் முன்னறிவித்துள்ளார்.

1)   மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. (மத்தேயு 6:19-20).

2)   கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.

(1 கொரிந்தியர் 15:19).

3)   உலகின் மீதும் அதிலுள்ளவை  மீதும் அன்பு செலுத்தாதீர்கள் என்றும் கடவுள் கட்டளையிட்டார் ( யாக்கோபு 4:4 ; 1யோவான் 2:15-17).

4)   அவருக்கு சொந்தமானவர்களை உலகம் வெறுக்கும் என்றும் முன்னறிவித்தார் (யோவான் 15: 18-19).

 அதுமட்டுமின்றி, தந்தையாகிய கடவுள் இந்நகரத்தின்  மாதிரி படிமத்தை ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு மற்றும் நீதிமான்களாகிய அனைவருக்கும் காண்பித்துக் கொடுத்தார்.ஆகவேதான், அவர்கள் இவ்வுலகத்தில் அன்னியரும் தற்காலிகக் குடிகளுமாய் வாழ்ந்தனர் (எபிரேயர் 11:13). மேலும், நிலைவாழ்வும், புதிய நகரமும் அளிப்பேன் என்று கடவுள் அருளிய வாக்குறுதிகள், இதோ! நிறைவேற போகிறது. இதனை மக்களுக்கு அருள்வேன் என்பது தந்தையாகிய கடவுளின் உறுதிமொழி. இது இறைமக்களின் உரிமையும் ஆகும் (எபிரேயம் 6:16-19 ; உரோமையர் 8:15-17).

 பின்பு அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தன. மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனி தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை.சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.

(திருவெளிப்பாடு 22:1-5)

மேலும், வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் மற்றும் கடவுளின் தூயவர்கள் மட்டுமே இந்த நகரத்தில் நுழைவார்கள்.  ஆனால், இறைவாக்குகளுள் எதையாவது சேர்த்தவனோ, எடுத்து விட்டவனோ  புதிய பூமியின் நித்திய நகரத்தில்  இடம்பெறார். அதுமட்டுமின்றி, திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அனைத்தும் அவனை வந்தடையுமாறு கடவுள் செய்வார் (திருவெளிப்பாடு 22: 18-19).

 

 "தங்கள் ஆடைகளைத் துவைத்துக் கொண்டோர் பேறுபெற்றோர். வாழ்வு தரும் மரத்தின்மீது அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் வாயில்கள் வழியாக நகருள் நுழைவார்கள். நடத்தைகெட்டோர், சூனியக்காரர், பரத்தைமையில் ஈடுபடுவோர், கொலையாளிகள், சிலைவழிபாட்டினர், பொய்ம்மை நாடி அதன்படி நடப்போர் ஆகிய அனைவரும் அதில் நுழைய மாட்டார்கள்.

(திருவெளிப்பாடு 22:14-15).

Related Articles

View All

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.

இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.

Chat with us