நாம் மீட்பின் முழுமையை அடைந்து விட்டோமா? இறைமகன் இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையில் நாம் பெற்றுக் கொண்டது பாவமன்னிப்பாகிய அருளையும் (மீட்பையும்), அவரது இரண்டாம் வருகையில் நாம் பெற்றுக்கொள்ளவிருக்கும் மீட்பையும் குறித்து பிரித்தே திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது.
நாம் மீட்பின் முழுமையை அடைந்து விட்டோமா? இறைமகன் இயேசு
கிறிஸ்துவின் முதல் வருகையில் நாம் பெற்றுக் கொண்டது பாவமன்னிப்பாகிய அருளையும் (மீட்பையும்), அவரது இரண்டாம் வருகையில்
நாம் பெற்றுக்கொள்ளவிருக்கும் மீட்பையும் குறித்து பிரித்தே
திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது.
முழுமை பெறவிருக்கும் மீட்பு
1. நாம் பெற்றுக் கொண்டது முழுமையான மீட்பையா ?
நாங்கள் மீட்படைந்து விட்டோம் எனக் கூறுகின்ற கிறிஸ்தவ விசுவாசிகள், அந்த மீட்பின் முழுமையைப் பற்றி சிந்திப்பதுமில்லை. மேலும்
கடவுள் ஆயத்தம்
செய்திருக்கின்ற மீட்பைக்
குறித்துள்ள இறைவசனங்களை தேடுவதுமில்லை . ஏனெனில், மீண்டும் ஒரு மீட்பருக்காக அல்லது
மீட்புக்காக காத்திருக்க
வேண்டுமா ? என்ற கேள்வியை எழுப்புவது, மீட்பராம் இயேசு கிறிஸ்துவை புறக்கணிப்பதற்கு சமம் என கிறிஸ்தவர்கள் நினைக்கின்றனர்.
2. நாம் மீண்டும் ஒரு மீட்பை காத்திருக்க வேண்டும் என இறைவார்த்தை கற்றுக் கொடுக்கின்றதா ?
ஆம். நாம் ஒரு மீட்பை காத்திருக்க வேண்டுமென
இறைவார்த்தை தெளிவாக கற்றுக் கொடுக்கின்றது. இயேசுகிறிஸ்துவின்
முதல் வருகையில் நாம் பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பாகிய அருளைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நாம் பெற்றுக்கொள்ளவிருக்கும் மீட்பைக் குறித்தும் பிரித்தே திருவிவிலியத்தில்
கூறப்பட்டுள்ளது . ஆனால், இந்த மீட்பைக் குறித்து யாரும் இறைமக்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை.
மாறாக, இறைவார்த்தைக்கு முரணான இவ்வுலக தத்துவங்களின் வாயிலாக தங்களையே இவ்வுலகத்தில் உயர்ந்தவர்களாக மாற்றிக் கொண்டார்கள். மேலும், இறைமகனின் மாட்சிக்குரிய இறைவார்த்தையின் உண்மையை அறியாதவாறு குருடரானார்கள். ஆனால்
இம்மீட்பைப் பற்றி
அறிய கடவுளின் வானதூதர்கள் கூடக் காத்திருக்கின்றனர்
என இறைவார்த்தைச் சான்று
பகர்கின்றது (1 பேதுரு 1:5-12).
· உண்மையில் நாம் யார்? எதற்காக கடவுள் நம்மை படைத்தார் ?
·
கடவுள் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாக வகுத்திருக்கும் மீட்பின் திட்டம் என்ன ?
·
அந்த மீட்பின்
ஆசீர்வாதத்தை எப்போது நாம் பெற்றுக் கொள்வோம்?
·
இந்த மீட்ப்பளிக்கின்ற இறையாட்சியின் உரிமைப்பேற்றை நாம் எவ்வாறு அடையப்போகிறோம்?
மண்ணுலகிலிருந்து
விண்ணுலகம்
உயர்ந்து இருப்பது போல கடவுளின் எண்ணங்களும்,
வழிமுறைகளும் உயர்ந்திருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்ளும்
இறைமக்களுக்கு மட்டுமே , அவர் வகுத்திருக்கும் திட்டத்தைப் பற்றி புரிந்துக்கொள்ள இயலும் .
என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
(எசாயா 55:8-9).
இந்த திட்டத்தின் மறைபொருள்கள் வெளிப்படும்பொழுது அவற்றைக் கேட்டு புரிந்து கொள்பவர்களுக்கு மட்டுமே, இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்காகவும் அவர் தருகின்ற மீட்புக்காகவும் காத்திருக்க இயலும்.
மனிதனின் ஆயுட்காலம் என்பது குறுகியதே. ஆனால், கடவுளின் ஆயுட்காலம்
என்பது நிலையானது (அழியாதது). இதனை மனிதன்
இன்றுவரை பிரித்துணரவில்லை. எனவேதான், இன்றைய மனிதனின் நிலை
மிகப்பெரிய
காலக்கட்டமாகத் தோன்றுகிறது . ஆனால், கடவுள்
சர்வ வல்லமையோடு நித்தியத்தில் வாழ்கிறார். ஆகவே, மீட்படைகின்ற கடவுளின் மக்கள் வசிக்கவிருப்பதும் அந்த நித்தியமான நிலைவாழ்வில் தான் .
நித்தியத்தோடு ஒப்பிடும்போது அந்தச் சில ஆண்டுகள் கடல்நீரில் ஒருதுளி போன்றவை. கடல் மணலில் ஒரு துகள் போன்றவை. ( சீராக்கின் ஞானம் 18:10).
எனவே,நித்தியத்தோடு
ஒப்பிடும்போது மனிதனின் இவ்வுலக வாழ்க்கையின்
ஆயுட்காலம் என்பது கடல் நீரில்
ஒருதுளி தண்ணீரைப் போன்றும் கடல் மணலில் ஒரு துகள்
போன்றும் கருதப்படுகிறது என கடவுள்
தாமே இறைவசனம் வழியாக சான்று
பகர்ந்துள்ளார்.
மேலும், கடவுள் நமக்கு இறைமகன் வழியாக மீண்டும் அருளவிருக்கும் மீட்பைக் குறித்து திருவிவிலியத்தில் நாம் காண்போம்.
A. தண்டனையிலிருந்து மனிதன்
விடுதலை
பெற
வேண்டும்
1
மனிதன் தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதே மீட்பு?
மனிதன் பாவம் செய்ததன் விளைவாக அவன் எதை இழந்தான் என்று அறிந்துகொண்டால் மட்டுமே, மீட்பின் முக்கியத்துவம் என்ன என்பதை
புரிந்துக்கொள்ள முடியும். இவ்வாறு மனிதன் எதை இழந்தானோ அதை மீண்டும் முழுமையாக பெறுவதே மீட்பின் முழுமை எனப்படும்.
2 மனிதன் மீதுள்ள தண்டனை என்ன?
ஆன்மா, உடல், உள்ளம் ஆகிய மூன்றும் சேர்ந்தவன் தான்
முழுமையான மனிதன். மேலும், கடவுள் மனிதனை அவர்தம் சாயலிலும் , உருவிலும் தான் படைத்தார் (தொடக்கநூல்1:26-28). கடவுளின் உருவம் என்பது மாட்சிமை நிறைந்தது . கடவுளின் சாயல் என்பது அழியாமையின் சாயலாகும்.இவ்வாறு, கடவுள் மனிதனை அவர்தம் சொந்த இயல்பின் சாயலில்
படைத்தார்.
3 கடவுளின்
சொந்த இயல்பு என்பது என்ன?
கடவுள் தமக்கு உள்ளதைப் போன்ற வலிமையை அவர்களுக்கு
வழங்கினார், எல்லா உயிரினங்களும்
மனிதனுக்கு அஞ்சும்படி செய்தார் (சீராக்கின் ஞானம் 17:3-4). மேலும்
மனிதன் என்றும் அழியாமல் வாழ்வதற்காக கடவுள் மரணம் இல்லாத(அழியாமையின்)
இயல்பில் தான் மானிடரைப்
படைத்தார். ( சாலமோனின் ஞானம் 2:23). அதாவது
கடவுளைப் போல நிலையான எழில்மிகு
இளைஞனாகவே மனிதனை உருவாக்கினார்.
ஆனால், மனிதன் கடவுளின் கட்டளைக்கு கீழ்
படியாமல், சாத்தானின் பொய் வார்த்தையைக் கேட்டு, அதில் விசுவசித்து கட்டளையை மீறினான். எனவே, மனிதனுக்கு கடவுள்
கொடுத்த ஆன்மா, உடல் மற்றும் உள்ளம் ஆகியவை சாபத்திற்கு
உட்பட்டது. அதாவது, கடவுளின் சொந்த இயல்பின்
சாயலையும், உருவத்தையும் மனிதன் இழந்தான்.சுருக்கமாக கூற வேண்டுமென்றால், கடவுள் அருளிய (வாழ்வு) நிலைவாழ்வை மனிதன் இழந்து மரணத்திற்கு உட்பட்டான்.மேலும், உடலின் உயிர் என்பது குருதியில் உள்ளது (லேவியர் 17:11). இவ்வாறு, கடவுளின் சொந்த இயல்பை இழந்த மனிதன் முதுமைக்கும், நோய்க்கும், மரணத்திற்கும் அடிமையாக மாறினான்.
இதிலிருந்து, மனிதன் கடவுள் அருளிய நிலையான வாழ்வை இழந்து மரணத்திற்கு (அழிவிற்கு) அடிமையாக இருக்கிறான் என்பது தெளிவாகிறது.இதுவே மனிதன் மேலுள்ள தண்டனை ஆகும்.
மேலும், இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு கிடைத்துவிட்டது எனக் கூறும் திருத்தூதரான பவுல் தாமே இவ்வாறு புலம்புகிறார்
.
அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? (உரோமை 7:15-24).
இங்கு திருத்தூதரான பவுல் மன்றாடுவது உடலிலுள்ள ஆன்மாவின் விடுதலைக்காக அல்ல. ஆன்மாவின் விடுதலைக்காகவே. மீட்பு என்றால், கடவுள் தமது கரங்களால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊதவும் (தொடக்க நூல் 2:7), அவனுக்குள் ஆன்மாவினை உட்புகுத்தவும் தேவையில்லை (சபைஉரையாளர் 11:5 , யாக்கோபு 4: 5 ). அதாவது,உடலுள்ள மனிதனாக படைத்திருக்கவே வேண்டாம். ஆனால் இந்த இறைவசனத்தில் உடலின் மீட்பை பற்றியே குறிப்பிட்டுள்ளது.
படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்
கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை
விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்....
(உரோமையர் 8:23 – 24). நம் உடலை விடுவிக்கும் நாள் இன்னும் எதிர்நோக்காகத் தான் இருக்கிறது.
இறைமக்களுக்கு பலன் அளிப்பதற்கும்,பணிவிடைகள் செய்வதற்குமே கடவுள் படைப்புகள் அனைத்தையும் படைத்தார். ஆனால், படைப்பு அனைத்தும் பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது .எனவே இறைமக்கள் எப்போது
பிள்ளைகளுக்குரிய பெருமையையும், விடுதலையும் பெற்றுக்
கொள்வார்களோ அப்போதுதான் படைப்பும் அதன் பயனற்ற நிலையிலிருந்து விடுதலை பெறும்.
இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
(உரோமையர் 8: 19 – 22)
எனவே மனிதனின் ஆன்மா, உடல், உள்ளம் அனைத்தும் குற்றமின்றி
தூயவராக்குவதே
முழுமையாகும் (1 தெசலோனிக்கர் 5:28). தூய்மையின் முழுமை கடவுளுக்கு இருக்கிறது. எனவேதான் இயேசுகிறிஸ்து உங்கள் விண்ணக தந்தை
நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் என அனைவருக்கும் அழைப்பு
விடுத்தார் (மத்தேயு 5 : 48). மனிதன் ஆன்மா, உடல் மற்றும் உள்ளம் ஆகிய
இம்மூன்றிலும் முழுமை பெறாததால், அவன் இன்று வரை நிறைவு
பெறவில்லை.எனவே, இதிலிருந்து இன்னும் ஒரு மீட்பை நாம் பெற்றுக் கொள்ளவிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.
B .படைப்பின் நோக்கத்திற்கு மனிதன் தகுதியுள்ளவனாக இருக்க வேண்டும்
நாம் தூயவராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை இயேசு கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்தார் (எபேசியர் 1: 4).
இவ்வாறு, கடவுளின் மக்கள்
அனைவரும் அன்பினால் தூயோராகவும், மாசற்றோராகவும் தமது
திருமுன் விளங்க வேண்டும் என்பதே கடவுளது திருவுளம். அவ்வாறெனில்,
அன்பு செய்வதற்கு உடலும் உள்ளமும் அவசியமானது. மேலும், நாம்
மாசற்றவராக திகழ வேண்டுமென்றால் நமது உடலிலிருந்து பாவமும் , மரணமும் நீக்கப்பட வேண்டும். ஏனெனில்
பாவத்திற்கு உயிர் கொடுப்பது சட்டமே (1கொரிந்தியர் 15 : 56 , உரோமையர் 7 : 8). எனவே,
மனிதனின் உடல் அழிவின் சட்டத்திலிருந்து விடுதலைப் பெறவேண்டும்(உரோமையர்8:23). மேலும், எப்பொழுதும் அன்பினால் கடவுளின் திருமுன்னிலையில் நிற்க வேண்டுமென்றால், பாவத்திற்கு அடிமையாகாத ஒரு உடலை நாம் பெற்றுக் கொள்ள
வேண்டும். அதாவது நமது உடல் சாகமையும், அழியாமையும் அணிந்து கொள்ள வேண்டும்.ஆனால், இம்மீட்பு இன்னும் நிகழ வேண்டியதாக உள்ளது.
C. மனிதன்
நிலைவாழ்வை அடைய வேண்டியுள்ளது
பாவம் செய்து மரணத்திற்கு அடிமையான மனிதன் இன்னும் நிலைவாழ்வை அடைய வேண்டியதாக உள்ளது. நிலைவாழ்வு குடிக்கொள்வது மனிதனின் உடலில் தான்.மேலும், மனித உடலின் உயிர் என்பது அவனது குருதியில் உள்ளது (லேவியர் 17:11) என்று இறைவார்த்தை சான்று பகர்கிறது.
ஆகவே, மரணம் மற்றும் பாவத்திற்கு அடிமையாகாத, நிலையான(அழிவுறாத) உடலோடு என்றும் கடவுளோடு
சேர்ந்து வாழ்வதே நிலைவாழ்வு. இந்த நிலைவாழ்வு தான் இறைமக்களுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதி(1 யோவான் 2:25) ஆகும்.
எனவே நிலைவாழ்வே மீட்பின் நிறைவு ஆகும்.
நமது உடல் எவ்வாறு மீட்கப்படுகிறது?
உயிர்த்தெழுதல்
மற்றும் உருமாற்றம் வழியாக நமது உடல் மீட்கப்படுகிறது (1 கொரிந்தியர்
15:51-55). இந்த இறைவசனம்
வழியாக யாரும்
இன்றளவும் நிலைவாழ்வை அடையவில்லை என்பது தெளிவாகிறது(எபிரேயர்
11:39-40). எனவே உயிர்த்தெழுதல் மற்றும்
உருமாற்றம் ஆகிய இரண்டும் நிறைவேற்றப்பட
வேண்டிய மீட்பாகும்.
இறைவசனம் கூறுகிறது:
ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள் (கொலோ 3 :3 - 4).
ஆகவே, இயேசு கிறிஸ்து எங்கே தமது மாட்சியோடு தோன்றுவாரோ அங்கேதான் அவர் நமக்கு வாழ்வை அருள்வார் என இறைவார்த்தை எடுத்துரைக்கின்றது.
ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர்
தம் மாட்சியுடன் திகழ்வார் (திருப்பாடல்
102 :16).
எனவே, அவ்விடத்தில் தான் இயேசுகிறிஸ்து நமது தாழ்வுக்குரிய உடலை அவரது மாட்சிக்குரிய உடலாக உருமாற்றம் அடையச் செய்வார் (பிலிப்பியர் 3:20-21). அவ்வாறு மரணமும், முதுமையும், நோயும் இல்லாத நிலைவாழ்வு என்னும் மீட்பின் முழுமையை நாம் பெற்றுக் கொள்ள இருக்கின்றோம்.
D.கடவுளை நேருக்கு நேர்
காணவும், அவருடன் என்றும் சேர்ந்து
வாழவும் நாம் மீட்புப் பெற வேண்டும்
தம் பிள்ளைகள் என்றும் வாழ வேண்டும், என விரும்பாத தந்தை எவரேனும் இவ்வுலகில் உள்ளனரா?
அவ்வாறே தந்தையாகிய கடவுள் தம் மக்கள்
என்றும் தன்னுடன் குடிகொள்ள
வேண்டும் என்பதற்காகவே மானிடரைப் படைத்தார்.மேலும், அவர்களுக்கு அன்பும் , பரிவும், வளமான
வாழ்வும்
அருள வேண்டும் என விரும்புகின்ற அன்பான ஒரு நல்ல தந்தை தான் நம்
கடவுள். ஆனால், கடவுளின் முகத்தை பார்க்க விரும்பிய மோசேயிடம்
கடவுள்
இவ்வாறு கூறினார் :
மேலும்
அவர், "என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும்
உயிரோடிருக்க முடியாது" என்றார் (விடுதலைப் பயணம் 33:20). அதாவது, கடவுளின் முகத்தை பார்க்க மனிதனால் இயலாது. ஏனெனில்
அவரை காண்பவர் எவரும் உயிருடன்
இருக்கமுடியாது.ஆகவே, இன்றுவரை எவரும் தந்தையாகிய கடவுளின் முகத்தைப் பார்த்ததில்லை.ஆனால், மனிதன் கடவுளின் முகத்தை காண்பான் என கடவுள் தாமே
இறைவார்த்தை வழியாக சான்று பகர்ந்துள்ளார் (திருப்பாடல்கள் 84:7).
நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும். (1 யோவான் 3:1-3)
எனவே, அவர் இருப்பதுபோல அவரைக் காணவும், அறிந்து கொள்ளவும் நாம் தகுதியுள்ளவர்களாக மாற வேண்டும் (1 கொரிந்தியர் 13:12). அதாவது, நாம் மீட்படைய வேண்டும்.
E.மூன்றாம் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள மேலும் நாம் மீட்படைய வேண்டும்
இறைமக்கள் ஒரு நிலையான இறையாட்சிக்கு உட்பட வேண்டும் என்பதுதான் கடவுளின்
திருவுளம். அவ்வாறான இறையாட்சியை அருள கடவுள் ஒரு மக்களினத்தின் மீது பூரிப்படைந்துள்ளார்
(லூக்கா 12:32). மேலும்,அந்த மக்களினத்திற்கு
தான் தமது ஆட்சியுரிமையை அருள்வேன் என இயேசு கிறிஸ்து வாக்குறுதி அளித்துள்ளார் (லூக்கா 22:28-30). அது என்றும் நிலையாக
இருக்கக்கூடிய இறையாட்சி ஆகும். இந்த இறையாட்சியே இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்த மூன்றாம்
இறையாட்சி. இறைவார்த்தையை பரிசோதித்துப் பார்த்தால், நாம் கற்றுக்
கொண்ட அனைத்தும் மூன்றாம் இறையாட்சியை அடைகின்ற படிக்கட்டுகளாக உள்ளன என்பதை நாம் புரிந்து
கொள்ளலாம்.
மேலும், வல்லமையோடு
இறங்கி வருகின்ற இறையாட்சியும் இதுவே ( மாற்கு 9:1 ). நம் கண்களுக்கு காண இயலுகின்ற இறையாட்சியும் இதுவே (யோவான் 3:3). இறையாட்சி வருக என மன்றாட
இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுத்தார் (மத்தேயு6:9-10).
சகல முன்னோர்களோடும், நீதிமான்களோடும், இறைவாக்கினர்களோடும்,
திருத்தூதர்களோடும் நாம் பந்தியில் அமர்கின்ற விண்ணரசின் இறையாட்சி இதுவே (மத்தேயு 8:11). இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு
வழங்குபவர்களாக , அரியணையில் வீற்றிருக்கும் இறையாட்சியும் இதுவே (லூக்கா 22:28-30).
நாம் பந்தியில் அமர்ந்து உண்டு குடிக்கவும், இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்குபவர்களாக அரியணையில் அமரவும் நமக்கு உடல் தேவையல்லவா?
அன்பர்களே, நான் சொல்வது இதுவே; ஊனியல்புடைய மனிதர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைய முடியாது. அழிவுக்குரியது அழியாமையை உரிமைப் பேறாக அடைய முடியாது (1 கொரிந்தியர் 15:50).எனவே, இறையாட்சியை உரிமைப்பேறாக அடைய நமது உடல் அழியாமையை அணிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்றுவரை எவரும் அழியாமையை அணிந்து கொள்ளவில்லை.அதாவது மூன்றாம் இறையாட்சியை அடையவில்லை. இதிலிருந்து இயேசு கிறிஸ்துவே உருமாற்றமும், உயிர்த்தெழுதலும் வழியாக அழியாமையை கொடுக்கவிருக்கின்றார் என்பது தெளிவாகிறது (பிலிப்பியர் 3:20 - 21, 1 கொரிந்தியர் 15:51 - 56).
இந்த நிலையான இறையாட்சியை உன்னதரின் புனித மக்கள் பெறுவார்கள் என இறைவார்த்தை எடுத்துரைக்கிறது.
ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு; எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும் (தானியேல் 7:27).
உன்னதரின் புனித மக்கள் யார்?
ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும்
ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது
(லூக்கா 2:23).
விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறான ஒரு
மக்களினம் கடவுளுக்கு உள்ளனர் என இறைவார்த்தை சான்று பகர்கின்றது(எபிரேயர்
12:22-24). இந்த தலைப்பேறான மக்களினம்
தான் உன்னதரின் புனித மக்கள் என அழைக்கப்படுகின்றனர்.
தந்தையாகிய கடவுளிடமிருந்து இயேசு கிறிஸ்து பிறந்தபோது, அவருடன் சேர்ந்து
பிறந்த கடவுளின் மக்களே தலைப்பேறான மக்களினம் ஆவர். கடவுள் தலைப்பேறான
மக்கள் அனைவரையும் முதலில் ஆதாமிற்குள் உட்புகுத்தினார் என்றாலும், அவர்கள் அனைவரும்
இறுதிக்காலத்தில் தான் இந்த பூமியில் பிறப்பார்கள்.
1.தங்களை அடிமைப்படுத்திய எல்லா சட்டங்களில் இருந்தும்
விடுதலைப் பெறுபவர்கள் .
2.இந்த பூமியில் வைத்தே கடவுளின் ஊனிலும், இரத்தத்திலும் பங்கு பெற்று உண்மையான
கடவுளது பிள்ளைக்குரிய இயல்பைச் சொந்தமாக்கும் மக்களினம் (உரோமையர் 8:19-24, எபேசியர் 1:5).
3.இயேசு
கிறிஸ்து வரும்போது உள்ளம், ஆன்மா, உடல் ஆகிய அனைத்தையும் குற்றமின்றி முழுமையாக பாதுகாத்து
இறையாட்சியை உரிமைப்பேராக அடைவார்கள் (1 தெசலோனிக்கர் 5:23).
4. கடவுள் தம்
மக்களின் வரிசையில் சேர்த்து கொள்ளும் மக்களினம் (எரேமியா 3:19).
5.கடவுளின் திருவுளப்படி முழுமையாக நிறைவுபெறுவது இந்த மக்களினமே ஆவர் (எபிரேயர் 11:39-40).
இயேசு கிறிஸ்துவே தமது இரண்டாம் வருகையைப் பற்றியும் உலகம் முடிவைப் பற்றியும் முன்னறிவிப்பு கொடுத்தார். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் (லுக்கா 21:31).உலக முடிவில் விண்ணிலிருந்து இறங்கி வருகின்ற இறையாட்சியும் இதுவே. இந்த இறையாட்சியையே நாம் பெற்றுக் கொள்ள இருக்கின்றோம்.
F.கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள நாம் மீட்பு பெற வேண்டும்
கடவுளின் கண்ணோட்டத்தில் ஆசீர்வாதம் என்பது மனிதன் நினைப்பதல்ல. ஆசிர்வாதத்திற்கு எதிரானது சாபம். மனிதன் பாவம் செய்து கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்தை இழந்து சாபத்துக்கு உள்ளானான் எனவே. தந்தையாகிய கடவுள் தாம் நேசிக்கின்ற பிள்ளைகளுக்கு ஏற்கனவே இந்த ஆசிர்வாதத்தை வாக்குறுதியாக அளித்துள்ளார். மனிதனுக்குள் ஆட்சி செலுத்துகின்ற சாபத்தை எடுத்து மாற்றி, மனிதனை பாவத்திற்கு உள்ளாக்கிய சாத்தானை அழித்து , மனிதன் இழந்தவை அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதே கடவுளின் ஆசிர்வாதம் (தொடக்க நூல் 3:15).
கடவுள் தம்
மக்களுக்கு ஆயத்தம் செய்திருக்கின்றவை இந்த ஆசீர்வாதமே (1
கொரிந்தியர் 2:9). இறைமக்கள் நிறைவுபெற்று கடவுளைப்போல் மாறும்பொழுது
தான் ஆசீர்வதிக்கப்படுவார்கள் (மத்தேயு 5:8 ,யோவான் 10:35).
இந்த
ஆசிர்வாதமே கடவுள் ஏவாளுக்கு கொடுத்த வாக்குறுதி (தொடக்கநூல் 3:15). கடவுள் ஆபிரகாமிடம், உன் ஒரு மரபினர்
வழியாக மண்ணுலகில் குடும்பங்கள் எல்லாம் ஆசி பெறும் என உடன்படிக்கை செய்தார் (தொடக்கநூல் 22:18 , திருத்தூதர் பணிகள் 3:25).
ஆபிரகாமோ ,நீதிமான்களோ,
இறைவாக்கினர்களோ, திருத்தூதர்களோ இன்றுவரை இந்த ஆசிர்வாதத்தைப் பெற்றுக்
கொள்ளவில்லை (எபிரேயர் 11:39-40, 2 திமொத்தேயு 4:7-8, பிலிப்பியர் 3:11-14).
அப்படி
என்றால்,மனிதன் எவ்வாறு ஆசீர்வாதம் பெறுவான்?
மனிதன்
ஆசிர்வாதம் பெற வேண்டுமென்றால் பாவத்திற்கும்,
சாபத்திற்கும் காரணமான சாத்தான் அழிக்கப்பட வேண்டும். எந்த
பெண்ணை சாத்தான் ஏமாற்றினானோ, அதே பெண்ணின் சந்ததியை வைத்தே கடவுள் சாத்தானை
அழிப்பதுதான் சாத்தானோடுள்ள கடவுளது சவால் (தொடக்க 3/15).
னால் கிறிஸ்தவர்கள் நினைப்பது போல சாத்தானின் தலையை நசுக்குகின்ற ஏவாளின் சந்ததி இயேசு கிறிஸ்துவல்ல. இயேசு கிறிஸ்து கடவுளிடமிருந்து பிறந்தவர் ஆவார் (யோவா1:13). அவர் கடவுளது மாட்சியின் சுடரொளி (எபிரேயர் 1:3). அவர் மண்ணிலிருந்து வந்த ஆதாமின் சந்ததி அல்ல. மாறாக, கடவுளின் வார்த்தையால் விண்ணுலகிலிருந்து வந்து, இந்த பூமியில் மனிதனாகப் பிறந்தவர் (யோவான் 1:14).
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப்
பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா
மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது (உரோமையர் 5:12).
எல்லா மனிதருக்குள்ளும் பாவம் வசிக்கின்றது என இறைவார்த்தை எடுத்துரைக்கிறது (உரோமையர் 7:19-24 , 1 யோவான் 1:8). ஆனால் இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை மீட்க வந்தவரே அன்றி, பாவம் அவரில் இல்லை (1 யோவான் 3:5). எனவே, அவர் ஆதாமின் சந்ததி இல்லை.
இயேசு கிறிஸ்து சாத்தானை அழிக்கவில்லை. அவ்வாறு இறைமகன் சாத்தானை அழித்திருந்தால் சாத்தானின் விதையான பாவமும் , பாவத்தின் விளைவான மரணமும் இவ்வுலகின் மீது ஆட்சி செலுத்தாது. மேலும், இறைமக்களும் நிலைவாழ்வான மீட்பின் ஆசிர்வாதத்தை பெற்றிறுப்பார்கள்.
இதிலிருந்து இறைமகன் இயேசு கிறிஸ்துவல்ல, சாத்தானின் தலையை நசுக்குவது. மாறாக ஏவாளின் ஒரு சந்ததிதான் சாத்தானின் தலையை நசுக்குவார் என்பது தெளிவாகிறது. கடவுள் தம் மக்களை மகிமைப்படுத்தவும், எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் விடுவித்து, இறைமகன் இயேசு கிறிஸ்துவை போல இறைமக்களை மாற்றுவதே கடவுளின் திருவுளம். இவை நிறைவேற வேண்டியிருக்கின்றது.
G. மீட்பு பெற்றவர்கள் மட்டுமே இவ்வுலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள் :
இறுதி எக்காளம் முழங்கும்போது இறந்தவர்கள் அழிவற்றவர்களாக உயிருடன் எழுப்பப்படுவர் என்றும், நாம் மாற்றுரு பெறுவோம் என்றும் இறைவார்த்தை கற்றுக் கொடுக்கின்றது. அப்போது உயிரோடு எஞ்சியிருப்போரும், உயிர்த்தெழுவோரும், மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்படுவார்கள் என இறைவார்த்தை தெளிவாக கூறுகின்றது
(1 தெசலோனிக்கர் 4:16-17).
எடுத்துக்கொள்ளப்படுதல் (Rapture) என்பதை மனிதர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.
· யார் எடுத்துக்கொள்ளப்படுவர் ?
· எங்கிருந்து எடுத்துக்கொள்ளப்படுவர் ?
· என்ன நிகழ்ந்த பிறகு எடுத்துக்கொள்ளப்படுவர்?
· எடுத்துக்கொள்ளப்படுபவர்கள் என்னென்ன தகுதி உடையவர்களாக இருப்பார்கள் ?
·
இறுதி காலத்தில்
நாம் பெற்றுக் கொள்ளவிருக்கும் மீட்புக்கும் இந்த எடுத்துக் கொள்ளப்படுவதலுக்கும் இடையே
ஏதாவது தொடர்பு உண்டா?
இவ்வாறான
கேள்விகளுக்கெல்லாம் பதில் எங்கிருந்து கிடைக்கும்?
இறுதிக்காலத்தில்
வெளிப்பட ஆயத்தமாய் இருக்கின்ற மீட்பின் மறைப்பொருள்களைக் கடவுள் வெளிப்படுத்தும் போது
மேற்கண்ட கேள்விகளுக்குரிய பதில்கள் கிடைக்கும். கடவுள், மீட்பின்
மறைபொருள்களை வெளிப்படுத்துவதற்கு முன்பே,
மனிதன் தன் சிந்தனையில் உதித்தவற்றை வெளிப்படுத்தினாலும், அவை
உண்மையாகாது.
இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். (திருவெளிப்பாடு 1:7)
(மத்தேயு
24:30 , லூக்கா
21:26-28)
இந்த
இறைவசனங்கள் வழியாக இவ்வுலகிலுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்பது
தெளிவாகிறது.
அப்போது யார் எடுத்துக்கொள்ளப்படுவர்?
இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது அவரை சார்ந்தோர் உயிர் பெறுவர் (1 கொரிந்தியர் 15:23).
இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது யார் அவரை சார்ந்தோர்
என்று இறைவார்த்தை சான்று பகர்கிறது. மேலும் இவை
நிகழ்கின்ற இடம் எது என்பதும் இறைவார்த்தையில் இடம் பெற்றுள்ளது. அந்த
இடத்தில் மீட்புக்காக ஒருங்கிணைக்கப்பட்ட இறைமக்கள் மட்டுமே
எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
மனிதன்
இருக்கின்ற தற்போதைய நிலையில் அவன் எடுத்துக்கொள்ளப்பட தகுதியற்றவன். ஏனென்றால்
மனிதன் இவ்வுலக சட்டங்களுக்கும்,
பாவத்திற்கும் உட்ப்பட்டிருக்கிறான் . எனவே, மனிதன்
இவ்வுலக சட்டங்களினின்று விடுதலை பெற்றால் மட்டுமே இவ்வுலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவான்.
இப்போதுள்ள
நமது ஊனியல்புடைய உடலுக்கு விண்ணகத்தில் ஏறிச்செல்லவோ
நிலைவாழ்வை உரிமைப்பேராக அடையவோ முடியாது. (1 கொரிந்தியர் 15:50).
மீட்பு
என்பது இறைமக்கள் வானமேகங்களில் எடுத்துக் கொள்ளப்படும்போது பெறுவதல்ல மீட்பு. மாறாக, நம்முடைய தாழ்வுக்குரிய உடல் அவரது மாட்சிக்குரிய உடலாக
உருமாற்றமடைய வேண்டும். அதற்கு
இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வர வேண்டும் (எபிரேயர் 9:28, பிலிப்பியர் 3:20-21). எனவே மீட்பராம்
இயேசு கிறிஸ்துவிடமிருந்து உயிர்த்தெழுதலும், உருமாற்றமும்
ஆகின்ற மீட்பை பெற்றுக் கொள்பவர்களே
இவ்வுலகிலிருந்து உயர்த்தப்படுபவர்கள்.
இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்பட ஆயத்தமாயிருக்கின்ற மீட்பை பற்றிய இறைவார்த்தைகள் யாவும் இவ்வுலகிலேயே நிறைவேறும். விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது பெறுவதல்ல மீட்பு. மாறாக, கடவுள் ஏற்பாடு செய்திருக்கின்ற மீட்பின் திட்டங்கள் யாவும் இவ்வுலகில் வைத்தே இறைமக்கள் பெற்றுக் கொள்வார்கள்.
தொடரும்......
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.