மீட்பின் நிறைவு - l

கடவுள் மனிதனுக்கு ஒரு நிலையான மீட்பை ஆயத்தப்படுத்தியுள்ளார் என்பது நமக்கு தெரியும். அப்போது இயேசு கிறிஸ்து தமது முதல் வருகையில் அளித்த மீட்பு என்ன? மீட்பு முழுமை அடைந்துவிட்டதா? மீட்பின் முழுமை என்பது என்ன ? அதை அவர் எப்போது தருவார் ?

மீட்பின் நிறைவு  - l

 கடவுள் மனிதனுக்கு ஒரு நிலையான  மீட்பை ஆயத்தப்படுத்தியுள்ளார் என்பது நமக்கு தெரியும். அப்போது இயேசு கிறிஸ்து தமது முதல் வருகையில் அளித்த மீட்பு என்ன?  மீட்பு முழுமை அடைந்துவிட்டதா? மீட்பின் முழுமை என்பது என்ன ? அதை அவர் எப்போது தருவார் ?

அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?

(உரோமையின் 7:24)

படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

(உரோமையர்  8:23)

 நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.

  (பிலிப்பியர் 3:20)

 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

 (எபிரேயர் 9 : 28)

  அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.

 (பிலிப்பியர் 3:21)

 முன்னுரை:

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் காலம் நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொண்ட விசுவாசிகளிடம் கடவுள் ஆயத்தமாக்கிய நிலையான மீட்பை பற்றிய திட்டங்களின் அறிகுறிகளை எடுத்துரைப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். உண்மையான கடவுள் ஒருவரே என்றும், இறைமகன் இயேசு கிறிஸ்துவே ஏக மீட்பர் என்றும் , அவருடைய வார்த்தை உண்மை என்றும் உறுதியாக  நம்புகின்ற  விசுவாசிகளின் முன்பாகத்தான்  இதை சமர்ப்பிக்கின்றோம். திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ள இறைவார்த்தையின் அடிப்படையில் மட்டுமே இவை விவரிக்கப்பட்டுள்ளது அவற்றை காண்போம்.

குறிப்பாக மூன்று பகுதிகளில்  கவனத்தை செலுத்தபோகிறோம்:

1.     கடவுள் மனிதர்களுக்கு அருள, ஒரு நிலையான மீட்பை  ஆயத்தப்படுத்தியுள்ளார் என்பது நமக்கு தெரியும். அப்போது இயேசு கிறிஸ்து அவரது முதல் வருகையில் அளித்த மீட்பு என்ன ? மீட்பு முழுமை அடைந்து விட்டதா? மீட்பின் முழுமை என்றால்  என்ன ? அதை அவர் எப்போது தருவார் ?


கடவுள் மனிதர்களின் வழியாகத்தான் செயல்படுகின்றார். மேலும், வெளிப்படுத்தப்படாமலும் ஆயத்தம் செய்யப்படாமலும் இம்மீட்பு பெறப்படுவதில்லைஆனால், காலம் வரும்போது  இம்மீட்பு வெளிப்பட வேண்டியுள்ளது. எனவே, இம்மீட்பைப் பற்றி பறைசாற்ற யாராவது கடவுளால் அனுப்பப்பட வேண்டும்.அப்போது இதை யார் அறிவிப்பார்? எங்கே அறிவிக்கப்படும்?


இறுதிக் காலத்தில் மீட்பையும் , தண்டனையையும் அளிப்பவர் இறைமகனே. அந்த மீட்பை யார் பெற்றுக் கொள்வர் ? அம்மீட்பு எங்கே கிடைக்கும் ?

 

A.     மீட்படைந்த சமூகம்

ஒரு அடிப்படையான கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஏக மீட்பரிலும் அவர் தருகின்ற மீட்பிலும் உள்ள ஆழ்ந்த  நம்பிக்கையாகும். இறைமகன் இயேசு கிறிஸ்து ஒருவரே ஏக மீட்பர் எனவும், அவருடைய துன்பப்பாடுகள், இரத்தம் சிந்துதல்சிலுவை மரணம், உயிர்த்தெழுதல்  வழியாக நாம்  மீட்படைந்து விட்டோம் என உறுதியாக நம்புகிறவர்களே கிறிஸ்தவர்கள். மேலும்,ஒரு மீட்பின் அனுபவமே கிறிஸ்தவர்களின் வாழ்வை உருமாற்றுகின்றது. எனவேதான், 2000 வருடங்களாக  இம்மீட்பைக் குறித்து  கிறிஸ்தவர்கள் பெருமையடைந்து  பறைசாற்றி வருகின்றார்கள்.

மேலும், மீட்படைந்து விட்டோம் என இறைமக்களுக்கு திருவிவிலியத்தில் சான்று பகர்கின்ற பல இறை வார்த்தைகளுள் ஒன்று.

நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை.

 (எபேசியர் 2:8)

இவ்வாறு, ஏராளமான இறைவார்த்தைகள் நாம்   மீட்கப்பட்டோம் எனச் சான்று பகர்கின்றது.

உதாரணமாக:

உரோமையர் 10:10 ,1 கொரிந்தியர் 1:21, எபேசியர் 2:5.

இவற்றில், நாங்கள்  மீட்படைந்து விட்டோம் (இரட்சிக்கப்பட்டு விட்டோம்) என்று உரிமை கொண்டாடுபவர்கள் உரைக்கின்ற இறைவார்த்தைகளில் ஒன்று தான் இது .

நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அருள் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" . (மாற்கு 16:16-17)

மேலும், நம்பிக்கை கொண்டோருடன் அடையாளங்கள் இருக்கும் என இறைவார்த்தை கூறுகின்றது.இருப்பினும், அவ்விதமான ஒரு அடையாளங்களும் இவர்களுக்கு இல்லை என்ற உண்மையை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த இறைவசனம் உண்மையானது, அது உறுதியாக நிறைவேறும். இங்கே கூறுகின்ற நம்பிக்கை இன்றுவரை வெளிப்படவும் இல்லை (காரணம்: கேட்டால் தான் நம்பிக்கை உண்டாகும்)  இன்று வரை எவருக்கும் கிடைக்கவும்  இல்லை.

 இங்கு,வேறொரு இறைவசனத்தையும் பரிசோதித்து பார்ப்போம். தாம் அருளவிருக்கும் நிலைவாழ்வைப் பற்றி இயேசு கிறிஸ்து ஒரு முறை இவ்வாறு கூறினார். 

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வுதரும் உணவு நானேஉங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். " (யோவான் 6/47-51)

 மேலும் இறைமகன் இயேசு கிறிஸ்து உரைத்தது:

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். மாறாக, மானிடமகன் கொடுக்கின்ற நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். (யோவான் 6:27)  என்று இறைமகன் இயேசு கிறிஸ்து அழைக்கின்றார்.இவ்வாறு, அவர் அருள்கின்ற வாழ்வு தரும் உணவை உண்பவர் எவரும் மரணத்திற்கு உட்படாமல் என்றுமே நிலையாக வாழ்வர் என உறுதியாகக் கூறியுள்ளார்.   மேலும், ஒவ்வொரு மனிதனும் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடலாம் அல்லது முதுமையடைந்தோ,  விபத்துக்குள்ளாகியோ இறக்க நேரிடலாம். அவ்வாறு மனிதன் இறவாமல் இருக்க வேண்டுமென்றால் , அவனது உடலில் உள்ள நோய் , முதுமை, மரணம் என்றென்றைக்குமாக  நீக்கப்பட வேண்டும். அவர் தரும் அழியாத நிலைவாழ்வின் உணவை உண்டால் இவ்வாறு நிகழும் என்பதையே  இயேசு கிறிஸ்து பறைசாற்றினார்.

இதுவே கடவுள் அருளிய வாக்குறுதி; நிலைவாழ்வு அல்லது மீட்பு (1யோவான்2:25).

 ஆனால் நம்பிக்கை கொண்டவரும், அவர் கொடுத்த உணவை உண்பவரும் ஆகிய எவரும் இன்றுவரை மரணத்தை கீழ்ப்படுத்தவில்லை. அனைவரும் இறந்து அழிவிற்கு உள்ளானார்கள்.மேலும்,மனிதனாக பிறந்த எவரும் இன்றுவரை நிலைவாழ்வை அல்லது மீட்பை அடையவில்லை என்பது உறுதியானது. ஆனால் இயேசு கிறிஸ்து உண்மையானதையே உரைப்பவர் என்றும், தம்மைத்தாமே புறக்கணிக்க அவரால் இயலாது என்றும், அவருடைய  உண்மையான வார்த்தை நிறைவேற வேண்டியவை  என்றும் தெளிவாகிறது.எனவே, (யோவான் 16: 47 – 51)-ல் இயேசு கிறிஸ்து வாக்குறுதி செய்த நிலைவாழ்வு (மீட்பு) இன்றுவரை எவரும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது.

அப்போது மீட்பு அடைந்து விட்டோம் என பறைசாற்றுபவர்களுக்கு கிடைத்த மீட்புதான்  என்ன? அல்லது இயேசு கிறிஸ்து அவரது முதல் வருகையில் கொடுத்தது எந்த மீட்பை?

 

B.     இயேசு கிறிஸ்து அருளிய மீட்பு

இயேசு கிறிஸ்து அருளிய மீட்பைக் குறித்து பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட திருத்தூதர்களில் ஒருவரான பேதுருவின் அருளுரை வழியாக தெளிவாகிறது.

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.

(திருத்தூதர் பணிகள் 2: 37-38

ஆகவே, நற்செய்தியை கேட்டு மனம் வருந்தி இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கைக் கொண்டு, அவரது பெயரால் திருமுழுக்குப் பெறுபவர்கள், பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுகின்றனர்.மேலும்,தூய ஆவியைக் கொடையாகப் பெறுகின்றனர்.

மீட்பரைக் குறித்து திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா இறைவார்த்தைகளும் முழுமையாக நிறைவேறிவிட்டது என இறைமக்கள் விசுவசிக்கின்றனர். இவ்வாறு இயேசு கிறிஸ்துவில்  நம்பிக்கை கொண்டோர் அனைவரும் அவரை ஆண்டவரும் மீட்பருமாக ஏற்றுக் கொண்டனர் . அவ்வாறு அனைவருக்கும் பாவமன்னிப்பாகும் அருள் (மீட்பு) கிடைத்தது. எனவே தங்களுக்கு  பாவ மன்னிப்பு கிடைத்துவிட்டது  என்ற மிகப்பெரிய உண்மையின்ழியாக, அவர்களது  உள்ளத்திற்குள் மகிழ்ச்சியும் அமைதியும் நிரம்பியது. மேலும் தூய ஆவியாரின் வல்லமையால் அனைத்து பிசாசுக்களையும், தீமையின் வல்லமையையும் கடவுள் நீக்கம் செய்தார். இதுவே நம்பிக்கை கொண்டோரின் உள்ளத்தில் நிறுவப்படும் இறையாட்சி (இதுவே இயேசு கிறிஸ்து அருளிய  ஒன்றாம் இறையாட்சி).

இந்தப் பாவமன்னிப்பாகின்ற  அருளையும் , இறையாட்சியையும் அல்லவா இன்றுவரை  இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் பெற்றுக் கொண்டது ?

இந்த பாவமன்னிப்பின்  அருளை இழக்காமல், இறை வார்த்தைகளுக்கு சாட்சியாக வாழ்ந்து  இறந்த ஒரு மனிதன், இந்த இறையாட்சியின் அனுபவத்தில் தான் இருப்பான். இவ்வாறு  மனிதன் இறக்கும்போது சென்றடைகின்ற  இறையாட்சியின் உயர்வான மற்றொரு நிலை உள்ளது. அதுவே பேரின்ப வீடு (மாற்கு 9:47-48). இதுவே இயேசு கிறிஸ்து பறைசாற்றிய இரண்டாம் இறையாட்சி.மேலும், இன்றுவரை இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இறந்தோர் அனைவரும் பெற்றுக் கொண்டதும் அதுவே.

தொடரும்.........

Related Articles

View All

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.

இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.

Chat with us