இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.
இறைமக்களுக்கு
ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும்,
அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும்
கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.
இயேசு
கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்பவர்கள் அனைவரும் கடவுளின் அருளால் மீட்படைந்துவிட்டனர் (இரட்சிக்கப்பட்டு விட்டனர்) என
திருவிலயத்தில் பல இறைவசனங்கள் (2திமொத்தேயு 1:9;எபேசியர்2:8 ; எபேசியர் 2:5) வழியாக
நாம் காண்கிறோம். ஆகவே ஏராளமான மக்கள் கருதுவதும், கற்றுத் தருவதும் இறைமக்கள் மீட்ப்படைந்து
விட்டார்கள்(இரட்சிக்கப்பட்டு
விட்டார்கள்) என்றுதான். ஆனால் மற்ற பல இறைவசனங்கள் வழியாக நாம் ஒரு மீட்பரை
காத்திருக்க வேண்டும் என்றும்,
ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது என்றும் கடவுளின் தூய ஆவியார் நமக்கு கற்றுத் தருகிறார் (எபிரேயர் 9:27-28 ;உரோமையர் 9:27 ;உரோமையர் 5:10 ;உரோமையர் 5:9 ;மாற்கு 16:16 ; திருவெளிப்பாடு 7:10; 1பேதுரு 1:10-13; 1பேதுரு 1:5; பிலிப்பியர் 3:20-21). மேலும் இயேசு கிறிஸ்து மட்டுமே ஏக மீட்பர் என்று தூய ஆவியார்
கற்றுத் தருகிறார்.
சிலர்
இவ்வாறு கருதுவதற்கான ஒரு காரணம் மீட்பைப் பற்றியுள்ள அவர்களது தவறான
கண்ணோட்டமாகும். கடவுளுக்கும் அவரது
வார்த்தைகளுக்கும் ஒத்துபோகாத தத்துவ அறிவியலின் ஆளுமையினால்தான் அவர்கள் இவ்வாறு கற்றுக்
கொடுக்கின்றனர். அதாவது மீட்பு என்பது
ஆன்மா மட்டும் உடலிலிருந்து
வெளியேற்றப்பட்டு ஏதோ
ஒரு மகிழ்ச்சி நிலையை அடைவது என ஏராளமான மக்கள் நம்புகின்றனர். ஆனால் திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ளதும், ஏக குருவும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து நிரூபித்ததும் இந்த மீட்பை அல்ல.
ஆன்மா, உள்ளம், உடல்
ஆகிய மூன்றும் இணைந்தவன் தான் முழுமையான மனிதன். இவைகளில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும்
அவன் முழுமையான மனிதன் அல்ல. உண்மையான
மீட்பு என்பது இவை மூன்றும்
இணைந்த ஒரு மனிதனின் மீட்பாகும். இதனைத்தான் இறைவாக்கினர்களும், இயேசு கிறிஸ்துவும், திருத்தூதர்களும் கற்பித்ததும் இயேசு கிறிஸ்து காண்பித்ததுமான மீட்பு. உண்மையான
மீட்பு என்பது நிலைவாழ்வாகும்.அதுவே இயேசு கிறிஸ்து நமக்கு அளித்த
வாக்குறுதி (1யோவான் 2:25).
மேலும் உடலின் உயிர் குடிகொள்வது இரத்தத்தில் ஆகும் (லேவியர் 17:11). ஆகவே இரத்தம் குடிகொள்ள உடல் மிக அவசியம் அல்லவா.ஆனால் பாவம்
குடிகொள்ளும் உடலில் நிலைவாழ்வு குடி கொள்வதில்லை.
பாவமில்லாத , மரணமில்லாத உடலில்
அதாவது விண்ணை சார்ந்த உடல் கிடைத்தால் மட்டுமே நிலைவாழ்வைப் பெற முடியும். அதாவது இயேசு கிறிஸ்துவைப் போன்ற மாட்சிமிகுந்த உடல்
கிடைத்தால் மட்டுமே நிலைவாழ்வு (நிலையான
மீட்பு) கிடைக்கும்.
ஒரு
மனிதன் வீழ்ந்து கிடக்கும் நிலையிலிருந்து தூக்கி,
மீண்டும் வீழ்ந்து போகாமலிருக்க திறனை பெறுவதும்தான் மீட்பின் அர்த்தம்.
எந்த நிலையிலிருந்து இறைமக்கள் வீழ்ந்தனர்?
தொடக்கத்தில் கடவுள் நிலையான இளமையுள்ளவராகவும்,அழியாமை உடையவராகவும், மரணமில்லாத்தவராகவும், கடவுளின்
மாட்சியும் அவரது வல்லமைக்கு இணையான வல்லமை உடையவராகவும், சகல படைப்புகள்மீது அதிகாரமுடையவராகவும் தான் மனிதனை படைத்தார் (தொடக்கநூல் 1:26-28; சால. ஞானம் 2:23; சீராக் 17:3-4). மேலும் பாவமோ, நோயே(பிணியோ),
முதுமையோ, மரணமோ இல்லாத்தவராகதான் மனிதன் இருந்தான். ஆனால்
சாத்தான் மனிதனை வஞ்சித்து
பாவத்தை செய்ய வைத்தான். மேலும் மனிதனுக்கு கடவுள் அருளிய எல்லா
சொத்துக்களையும் கவர்ந்தெடுத்தான்.
இவ்வாறு
இறைமக்கள் இழந்த அனைத்தையும்
திரும்ப பெற்று, மீண்டும் பாவம் செய்யாமலிருக்கும் திறனை(அருளை) அடையும் போதுதான்
மீட்பு முழுமையடையும்.
இந்த மீட்பு அதாவது நிலைவாழ்வு இதுவரை எவருக்கும் கிடைக்கவில்லை. இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவேதான் இந்த மீட்பை அருள்கின்ற ஏக மீட்பர். வேறு எவராலும் இந்த மீட்பை அருள முடியாது. ஆனால் தமது ஒன்றாம் வருகையில் இயேசு கிறிஸ்து இந்த மீட்பை அருளவில்லை. பாவமன்னிப்பாகும் மீட்பின் அருளை மட்டுமே அவர் நமக்கு அருளினார். ஏனெனில் அவர் 2000 வருடங்களுக்கு முன்பு மரணத்திற்கு உட்பட்டவராகவே வந்தார். ஆனால் தனது இரண்டாம் வருகையில் அவர் நிலைவாழ்வுமாக வந்திருக்கிறார் (1யோவான் 5:10-12).
நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
(1 பேதுரு 1:5)
இந்த மீட்பை நமக்கு அருள்வது சரீரம் தரித்து மீண்டும் வந்திருக்கின்ற இயேசு கிறிஸ்துதான் (எபிரேயர்9:27-28). அவர் அருள்கின்ற உயிர்த்தெழுதலும் உருமாற்றமும்தான் மீட்பு (பிலிப்பியர்3:20-21). இதுவே நம்முடைய பலவீனமான உடலை மீட்டெடுக்கின்ற கடவுளின் பிள்ளைகளாக்கும் செயல். இந்த கடவுளின் பிள்ளைகளாக்கும் செயல் வழியாகத்தான் நாம் மீட்படைகின்றோம் என பவுல் வழியாக தூய ஆவியார் பறைசாற்றுகிறார் (உரோமையர் 8:23-25). இவை கிடைக்காததால்தான் இது இன்றளவும் எதிர்நோக்காகவே தொடர்கிறது. ஆகவே நாம் மீட்படைய வேண்டும் (இரட்சிக்கப்பட வேண்டும்). இந்த எதிர்நோக்கு முழுமை பெறுவது இந்த பூமியில் வைத்துதான்.
ஆகவே இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது.அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவராகவும், அழியாத்தவராகவும்,நிலையானவராகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும். நாம் மீட்படைந்து(இரட்சிக்கப்பட்டு) விட்டால் பின்பு மரணமும், பாவமும், நோயும், முதுமையும் இவ்வுலகத்தில் வைத்தே நீக்கம் செய்யப்படும். இந்த மீட்பின் வழியாக அழிவுக்குரியது அழியாமையை அணிந்துக் கொள்ளும் (1கொரிந்தியர் 15:51-56).
இவ்வாறு கடவுளின் மக்கள் கடவுளைப் போல ஆவதே கடவுளின் நீதி.
இந்த மீட்பை அருள்பவர், அரசர்களுக்கெல்லாம் அரசரானவர், இம்மானுயேல் பெயர் சூடியவர், விண்ணிலிருந்து இதோ! இந்த பூமிக்கு வந்துவிட்டார். கடவுள் நம்மோடு இருக்கிறார்!
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.