காலத்தின் அடையாளங்கள் மற்றும் மூன்றாம் இறையாட்சியின் வருகை

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

காலத்தின் அடையாளங்கள் மற்றும் மூன்றாம் இறையாட்சியின்  வருகை

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

2000 வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்து உரைத்தது :

அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (லூக்கா 21:31)

எது நிகழ்வதைக் காணும் போது?

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அடையாளங்களும், உலக முடிவின் அடையாளங்களும் நிகழ்வதை காணும் போது கடவுளின் மக்கள் ஓர் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்வார்கள் என இயேசு கிறிஸ்து கற்பித்தார்.

 இதிலிருந்து பல உண்மைகள் தெளிவாகின்றன:

 இந்த இறையாட்சி என்பது விண்ணகத்தை விட்டு இறங்கி வருகின்ற ஓர் இறை  ஆட்சியாகும். இந்த இறையாட்சி வரும்போது அடையாளங்கள் பல தோன்றும். இந்த அடையாளங்கள் என்பது இறைமகனின் இரண்டாவது வருகையையும், அவர் நிறைவேற்ற உள்ள நீதித் தீர்ப்பையும், மண்ணுலகமும் அதன் செயல்களால் தீக்கிரையாகின்ற உலக முடிவினையும் குறித்துள்ள அடையாளங்களாகும். இதிலிருந்து, இந்த இறையாட்சி வருவது உலக முடிவில், அதாவது இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் என்பது தெளிவாகிறது. (மத்தேயு 24:33 , லூக்கா 21:25-33 , மத்தேயு 25:31-46)

எனவே, இந்த பூமியில் வாழ்கின்ற இறுதி தலைமுறையினரே காலத்தின் அடையாளங்களை கண்டு இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (லூக்கா 21:32)

இந்த இறையாட்சி என்பது ஒரு மறைபொருள் ஆகும் (மாற்கு 4:10-12). இது இறுதிக் காலம் வரை இறைவசனத்தால் முத்திரையிடப்பட்டிருக்கும் என கடவுள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் (தானியேல் 12:8-10).

அப்போது 2000 வருடங்களாக இந்த பூமியில் அறிவிக்கப்படுகின்ற இறையாட்சி எதைப்பற்றியது?

1.      ஒரு விசுவாசியின் உள்ளத்தில் நிறுவப்படுகின்ற இறையாட்சி.

2.      மரணத்திற்கு பிறகு ஒரு விசுவாசி சென்றடைகின்ற  இறையாட்சி(பேரின்ப வீடு).

இவையே, இதுவரை பறைசாற்றப்பட்ட இறையாட்சி ஆகும்.

ஆனால் கண்களுக்கு புலப்படும் முறையில் அடையாளங்களோடு இறங்கி வரவுள்ள இறையாட்சியைக் குறித்தல்ல இதுவரை பறைசாற்றப்பட்டது (லூக்கா 17:20).

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றியும், உலக முடிவை பற்றியும், விண்ணகத்தை விட்டு இறங்கி வருகின்ற மூன்றாம் இறையாட்சியை பற்றியும் திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ள இறைவார்த்தைகளின் முத்திரைகளை உடைத்து வெளிப்படையாக அறிவிக்கின்ற ஒரு விண்ணை சார்ந்த நற்செய்தி உள்ளது. அந்த நற்செய்தியை கேட்டு இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நாம் அறிந்து, உறுதியான நம்பிக்கை உடையோராய் இருக்க வேண்டும் என்பதே கடவுளின் கட்டளை (மாற்கு 1:15 , மத்தேயு 10:7 , லூக்கா 10:10-12).

மேலும், இந்த நற்செய்தியை கேட்டு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால் அதைப் பற்றி யாராவது அறிவிக்க வேண்டும். ஆகவே, அதை அறிவிக்க கடவுளால் யாராவது அனுப்பப்பட வேண்டும். ஏனென்றால் நற்செய்தியை செவிகளில் கேட்பதன் வழியாகத்தான் நம்மில் இறை நம்பிக்கை உண்டாகும் (உரோமையர் 10:14-17).

இதிலிருந்து, இந்த இறையாட்சியின் நற்செய்தி இறுதிக்காலத்தில் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். ஆகவே, உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசை பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும்.அதன் பின்பு முடிவு வரும் என்று இயேசு கிறிஸ்து முன்னுரைத்தார் (மத்தேயு 24:14).

ஆனால்,இறுதி தலைமுறையினர் இந்த அடையாளங்களையும் அறிகுறிகளையும் அறவே புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதாவது, இந்த நிகழ்வுகளை எல்லாம் ஓர் அடையாளமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இயேசு கிறிஸ்து அன்றே தெளிவாக முன்னுரைத்துள்ளார் (லூக்கா 12:56).

இறையாட்சியின் வருகை பற்றிய இறைவார்த்தைகளை இயேசு கிறிஸ்து எங்கெல்லாம் அறிவித்தாரோ அங்கெல்லாம் மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளாமல் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள் என்று முன்னதாகவே இதைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் .

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. (லூக்கா 21:33)

இதோ! இறையாட்சியின் வருகை பற்றிய அடையாளங்கள் இவ்வுலகில் நடந்து கொண்டிருக்கின்றது. மூன்றாம் இறையாட்சியின் நற்செய்தியும் இவ்வுலகில் பறைசாற்றப்படுகிறது. ஏனெனில், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது! எனவே கேட்க செவியுடையோர் கேட்கட்டும்.

Related Articles

View All

இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.

இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.

காலத்தின் நிறைவில் அதாவது இறுதிக் காலத்தில் பறைசாற்றப்படும் விண்ணரசு பற்றிய நற்செய்தி தான் இந்த சத்வார்த்தை. இதுவே மூன்றாம் இறையாட்சியின் சத்வார்த்தை ஆகும்.

Chat with us