தந்தையாகிய கடவுள் இந்த பூவுலகை சந்திக்க வருகின்ற நாளே அவரது பழிதீர்க்கும் நாளாகும். இதோ! சர்வ வல்லமையோடும் மாட்சியோடும் அனைத்தையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் இந்த பூவுலகை சந்திக்க வருகிறார் என்று சத்வார்த்தை வழியாக விளம்பரம் செய்யப்படுகிறது.
தந்தையாகிய கடவுள் இந்த பூவுலகை
சந்திக்க வருகின்ற நாளே அவரது பழிதீர்க்கும் நாளாகும். இதோ! சர்வ வல்லமையோடும் மாட்சியோடும் அனைத்தையும் படைத்த கடவுளாகிய
ஆண்டவர் இந்த பூவுலகை சந்திக்க வருகிறார் என்று சத்வார்த்தை வழியாக விளம்பரம் செய்யப்படுகிறது.
கடவுள் அன்பானவர் என்று ஏராளமான
இறைவசனங்கள் கூறுவது போலவே,பாவிகளுடனும், உலகில்
பாவத்தை நிறைத்த சாத்தானுடனும், அவனுடைய தூதர்களுடனும்,உலக ஞானிகளுடனும் சமரசம் செய்யாத நீதிமான் என்றும் இறைவசனம் சான்று பகர்கிறது.
தந்தையாகிய கடவுளின் பேரன்பு எவ்வளவு இரக்கமுள்ளதோ அவ்வளவு
கடுமையானது அவருடைய நீதி தீர்ப்பு என்பதை, கடவுளாகிய ஆண்டவரைப் பற்றி கற்றுக் கொடுத்த இறைவாக்கினர்களும், தந்தையாகிய
கடவுளை வெளிப்படுத்திய ஏகமகன் இயேசு கிறிஸ்துவும், இயேசு கிறிஸ்துவிடமிருந்து கற்றறிந்ததை எழுதியும், விளம்பரம் செய்தும் அறிவித்த திருத்தூதர்களும் நிரூபித்துள்ளனர்.
தந்தையாகிய கடவுள் ஒரு நீதி தீர்ப்பின்
நாளை ஆயத்தப்படுத்தியுள்ளார். அதை இறைமகன்
இயேசுகிறிஸ்து மீண்டும் வரும்போது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப கைமாறு அளிப்பார்.
இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைமாறு என்னிடம் உள்ளது.
(திருவெளிப்பாடு22:12)
தந்தையாகிய கடவுளின்
வார்த்தையையும், செயல்களையும், அவர்
அனுப்பியவர்களையும், விசுவசித்து கீழ்படிகின்றவர்களுக்கு மீட்பும்,சமாதானமும் அருளுகின்றபோது, இவற்றிற்கு கீழ்படியாதவர்களை துன்புறுத்தவும் பழிவாங்குவதற்கும் அச்சமிகுத் தோற்றத்துடன் வருகின்றார்.
தந்தையாகிய கடவுளும் அவரது ஏகமகன் இயேசு கிறிஸ்துவும்,பரிசுத்த ஆவியாரும் தண்டனை தீர்ப்பின்(பழிவாங்கும்) நாளைப்பற்றி முன்னறிவிப்பு வழங்கியுள்ளனர்.
தந்தையாகிய கடவுளின்
முன்னறிவிப்பு:
கடவுளாகிய ஆண்டவர் 3500 வருடங்களுக்கு
முன்பு சீனாய் மலையில் இறைமக்களைக் காண்பதற்கு முதன்முறையாக இறங்கி வந்தார் (விடுதலைப் பயணம்19:16-20).
அதன் பிறகு அவர் அருளிச் செய்தது:
நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார்.ஆயினும் நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன் என்றார். (விடுதலைப் பயணம் 32:34)
இறைமக்களைத் துன்புறுத்துகிறவர்களுக்குத் துன்பத்தையும், துன்புறுத்தப்படுகிறவர்களுக்கு அமைதியையும் அருள்வார்.(2தெசலோனிக்கர்1:6-9)
தண்டனை தீர்ப்புப்பற்றி இயேசு கிறிஸ்துவின் முன்னறிவிப்பு:
எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள் (மத்தேயு 21:40-41).
திராட்சைத் தோட்ட உரிமையாளர்
தந்தையாகிய கடவுளாவார்.
பரிசுத்த ஆவியானவரின் முன்னறிவிப்பு:
பவுலின் வழியாக:
ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பது போல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.(1கொரிந்தியர்13:12)
யோவான் வழியாக:
நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்;ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும். (1யோவான் 3:1-3)
பேதுரு வழியாக :
ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப் போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீர்க்கிரையாகும். (2பேதுரு 3:10)
ஆகவே,இதோ! தந்தையாகிய கடவுள்
சர்வ வல்லமையோடும் மாட்சியோடும் பல அருள் அடையாளங்களால் இந்த பூவுலகை சந்திக்க வருகின்றார். பாவிகளுக்கு தண்டனை
தீர்ப்பு வழங்கவும். தமக்காக பாவத்தை விட்டுவிட்டு தூயோராகக் காத்திருக்கிறவர்களுக்கு தமது பேரன்பால் மீட்பு வழங்கவும் வருகின்றார் என்று சத்வார்த்தை வழியாக விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக்கூடியவர் யார்? அவர் தோன்றும் போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார்.(மலாக்கி3:2)
உமது கை உன் எதிரிகளையெல்லாம் தேடிப் பிடிக்கும்; உமது வலக்கை உம்மை வெறுப்போரை எட்டிப் பிடிக்கும். நீர் காட்சியளிக்கும் பொழுது, அவர்களை நெருப்புச் சூளை ஆக்குவீர். ஆண்டவர் சினங்கொண்டு அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை விழுங்கிவிடும். (திருப்பாடல்கள் 21:8-9)
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.