மீண்டும் வருகின்ற இறைமகன் இம்மானுயேல் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கும் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம்( தமது அன்புக்குரியவர்கள்) உடலை மாட்சிக்குரிய அவரது உடலின் சாயலாக உருமாற்றமடைய செய்வார்.
மீண்டும் வருகின்ற இறைமகன் இம்மானுயேல் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கும் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய
நம்( தமது அன்புக்குரியவர்கள்) உடலை மாட்சிக்குரிய அவரது உடலின் சாயலாக உருமாற்றமடைய செய்வார்.
எதிலிருந்து நாம் மீட்பு பெற வேண்டும் ?
·
மனிதர்கள்
அனைவரும் பாவிகள் என்று
திருவிவிலியம் சான்று பகர்கிறது (கலாத்தியர் 3:22). எனவே நாம் பாவத்திலிருந்து மீட்படைய வேண்டும்.
·
நமது உடல் நோய்(பிணி), முதுமை, மரணம் ஆகியவற்றிற்கு கீழ்ப்பட்டுள்ளது. ஆகவே நாம் மரணத்திலிருந்து
மீட்பு பெற வேண்டும்.அதாவது, அழியாதவராக (மரணமில்லாதவர்) மாற வேண்டும்.
·
நாம்
பிரபஞ்சத்தின் சட்டங்களுக்கு அடிமையாக
உள்ளோம். அதிலிருந்தும் மீட்பு பெற
வேண்டும்.
·
ஊனியல்பின் சட்டங்கள் நமது ஆன்மாவிற்கு எதிராக
போரிடுகிறது. ஆகவே நாம் ஊனியல்பின்
சட்டங்களிலிருந்தும் மீட்பு பெற வேண்டும்.
·
சாத்தான்
ஆதிக்கம் செலுத்தும் இவ்வுலக ஆட்சி நம்மை அவனது
வலையில் சிக்கவைக்க முயலுகிறது. எனவே
நாம் உலகின் இச்சைகள் மற்றும் பெருவிருப்புகள் ஆகியவற்றிலிருந்தும் மீட்பு பெற
வேண்டும்.
சுருக்கமாக கூறினால்: கடவுள்
நம்மை ஆதாமிற்குள் படைத்தப்
பொழுது நமக்கு அளித்த அவரது
சாயல், அழியாத உருவம், படைப்புகள் மீதுள்ள அதிகாரம் , நிலைவாழ்வு மற்றும் அவருடைய மாட்சி ஆகியவற்றை நாம் திரும்ப பெற்று கடவுளோடு சேர்ந்து வாழ்வதே உண்மையான
மீட்பு. இந்த மீட்புதான் கடவுள்
அருளுகின்ற முழுமையான மீட்பு.
இறைமக்களுக்கு
மீட்பு அளிப்பதுதான் கடவுள் தமது மகன் இயேசு
கிறிஸ்துவிற்கு அளித்த பணியாகும்.
இயேசு கிறிஸ்து மட்டும்தான் ஏக மீட்பர்.
வேறு யாரிலும் கடவுள் அருள்கின்ற மீட்பு இல்லை.
2000 வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்து பரிசுத்த அம்மாவிடமிருந்து மானுடல் பெற்று (யோவான் 1:14) இந்த பூமியில் பிறந்தார். இறையாட்சியை பறைசாற்றி, நம்முடைய பாவங்கள் அனைத்தையும் சுமந்து, அந்த பாவத்தின் தண்டனையை தன்னுடைய உடலில் சுமந்து இறந்தார். அவ்வாறு,
இயேசு கிறிஸ்து பாவமன்னிப்பாகிய மீட்பை நமக்கு பெற்றுத் தந்தார்.
ஆனால், மீட்பின் முழுமையை நமக்கு அருள மீண்டும் வருவேன் என்று
வாக்களித்து , 2000 வருடங்களுக்கு
முன்பு இயேசு கிறிஸ்து விண்ணேற்றம் அடைந்தார். மேலும் அவர் செய்த செயல்கள் அனைத்தும் தொடரவும், அவர் வழியாக இறைமக்களுக்கு கிடைத்த அருளை இழந்து விடாமல் சுமந்து
செல்லவும்,
அவர் மீண்டும் வரும்போது
தந்தையாகிய கடவுளுக்கு சமர்ப்பிக்குமாறு ஒரு சிறு மந்தையை உருவாக்கவும், அவர்மேல் நம்பிக்கை
வைத்தவர்களுக்கு தூய ஆவியாரை அருளினார்.
இதோ, காலத்தின் நிறைவில் எல்லா இறைவாக்குகளும் நிறைவேறுகின்ற இந்த நேரத்தில் இயேசு கிறிஸ்து சரீரம் தரித்து(மானுடலுடன்)
வந்திருக்கிறார்.மேலும் அவர் உரிய காலத்தில் தமது மாட்சியால் வெளிப்படுவார். மேலும்,
அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால்,
பாவத்தின் பொருட்டு அல்ல,
தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.
(எபிரேயர் 9:28)
இறைமகன்
யாரை மீட்பார்?
1.
இந்த
மீட்பிற்காக தூய ஆவியால் முத்திரையிடப்பட்ட சிறு
மந்தைகளைத்தான் மீட்பார் ( எபேசியர் 1:13 ;4:30).
2.
வாழ்வின்
புத்தகத்தில் பெயர் உள்ளவர்களைத்தான்
இறைமகன் மீட்பார்( தானியேல்12:1 ;திருவெளிப்பாடு 21:27).
3.
எல்லா
பாவங்களிலிருந்தும் அகன்று உள்ளத்தில் சிலைகள் இல்லாத , அன்பில்
குற்றமற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும் இருப்பவர்களை மீட்பார்.
மேலும்
இயேசு கிறிஸ்து மீண்டும் வருவது அனைவரையும் மீட்க என்றும்,
கடவுள் யாரையும் தண்டிக்க மாட்டார் ; அனைவரையும் காப்பாற்றுவார் என்றும் கற்றுக் கொடுக்கும் இன்றைய
கிறிஸ்தவ சபைகளின் போதனைகள்
இறைவசனத்திற்கு முரணானதும், சாத்தானிடமிருந்து வரும் பொய்யுமாகும். இந்த
போதனை வழியாக பயனடைவது சாத்தான் ஆவான். காரணம்
இந்த போதனைகள் வழியாக இறைமக்கள் கடவுள் மேலுள்ள அச்சமும், பக்தியும் இல்லாதவர்களாய் மாறினார்கள். அவர்கள்
இறைவசனத்தை உதறித்தள்ளவும், உள்ளத்தில்
சிலைகளை காத்துக் கொள்ளவும்(கடவுளை விட அதிகமாக அன்பு செய்கின்ற
எதுவும்,எவரும் சிலைதான்) கடவுளின் செயல்களைப் புறக்கணிக்கவும் இப்போதனை காரணமாயிற்று. கடவுளாகிய ஆண்டவர்
ஒருவரே ஆண்டவர் என்றும், இயேசு கிறிஸ்து மட்டும்தான் ஏக மீட்பர் என்றும்
ஏற்றுக்கொள்ள இது தடையாக இருந்தது. மேலும் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்றால் இறுதி தீர்ப்பு என்ற உண்மையை நிராகரிக்க வேண்டியிருக்கும்.
இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.
(மத்தேயு 7:13)
ஆகவே
அனைவரும் மீட்பு பெற மாட்டார்கள் என்பதை புரிந்து
கொள்ள வேறு இறைவசனங்கள் தேவையில்லை.
அப்போது
இந்த மீட்பு என்பது என்ன?
நமது
உடல்களை விடுவிக்கும் மீட்பு (உரோமையர் 8:23).
மீண்டும்
வருகின்ற இறைமகன் இயேசு கிறிஸ்து (இம்மானுயேல்) அனைத்தையும்
தமக்குப் பணியவைக்கும் ஆற்றலால் அழிவுக்குரிய நம் உடல்களை மாட்சிக்குரிய அவரது உடலின்
சாயலாக உருமாற்றமடைய செய்யும் மீட்பு (பிலிப்பியர் 3:20-21). மேலும் அவர் நமக்கு ஒப்புயர்வற்ற
அன்பும் (அன்பின் முழுமை), ஒப்புயர்வற்ற அருளும் (கடவுளின் நிறைவு), ஒப்புயர்வற்ற வல்லமையும் (கடவுளின் வல்லமை) நிறைவாக அளிப்பார். இது அவரது வாக்குறுதி (யோவான் 14:1-3),கடவுளது சபதம்(உறுதிமொழி) (எபிரேயர் 6:16-19) ஆகும்.
ஆகவே, நாம் எதிர்பார்த்ததை விட இந்த மீட்பு அண்மையில் உள்ளது என்பதை காலத்தின் அடையாளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம் (உரோமையர் 13:11-12). இதோ! இந்த மீட்பின் சத்வார்த்தை இப்பொழுது பறைசாற்றப்படுகின்றது. இதோ!உன் அரசராகிய ஆண்டவர் உன்னை அரசாள வருகின்றார். பரிசுகள் கொண்டு வருகின்றார். அவரை நாம் நேரடியாக காண்போம் (எசாயா 40: 9-10 ; 52: 7-8). இதுவே சத்வார்த்தை ஆகும்.
இதோ! ஊழிஊழிகாலமாக ஆபிரகாம் முதலுள்ள நீதிமான்கள் அனைவரும் கேட்க காத்திருந்த சத்வார்த்தை இப்பொழுது பறைசாற்றப்படுகிறது. ( யோவான் 8:56).
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.