இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.
இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி
இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும்
கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான்
இந்த நற்செய்தி.
Content: தாம் கற்றுக்
கொடுத்தவை அனைத்தையும் எல்லா மக்களினத்தாரும் கடைபிடிக்க இயேசு கிறிஸ்து
தமது விண்ணேற்றத்திற்கு முன்பு திருத்தூதர்களிடம் கற்றுக் கொடுக்கும் பணியை ஒப்படைத்தார் (மத்தேயு 28:19-20).
கடந்த 2000 வருடங்களாக திருத்தூதர்கள் வழியாக கிடைத்த நற்செய்தி இந்த உலகத்திலுள்ள எல்லா மக்களினத்தாரின் மனமாற்றத்திற்காக அறிவிக்கப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்து இவ்வாறு உரைத்தார் என மத்தேயு 24:14 -ல் எழுதப்பட்டுள்ளது.
உலகம் எங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசை பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும். (மத்தேயு 24:14)
அதாவது
இங்கு குறிப்பிட்டுள்ள இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்பட்டால் உலக முடிவு வரும்
என்றுதான் இயேசு
கிறிஸ்து கூறியுள்ளார். இன்றுவரை ஒரு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் உலகின் முடிவு ஏற்படவில்லை.
அப்படியெனில்
இந்நற்செய்தி எது?
மத்தேயு
24-ல் கூறப்பட்டுள்ள நற்செய்தியே என்பது
நமக்கு தெளிவானது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும், உலக முடிவையும், கடவுளின்
பழிவாங்கும் நாளையும், கடவுளின் ஆட்சி(கடவுளின் விண்ணரசு) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்நற்செய்தி.
எது
இந்த விண்ணரசு?
வல்லமையோடும்
கண்ணுக்கு புலப்படக்கூடிய அடையாளங்களோடும் இறங்கி வருகின்ற கடவுளின் விண்ணரசு தான்
இது. இயேசு கிறிஸ்து மீண்டும் வருவது பாவிகளை தண்டிக்கவும், பூமியை ஒன்றும் இல்லாமல் அழிக்கவும், தன்னை காத்திருக்கின்ற நேர்மையாளர்களை மீட்பதற்காகவும் தான் (எபிரேயர்
9:28).
இறுதிக்காலத்தில்
மட்டும் வெளிப்படுத்துவதற்காக கடவுள் ஆயத்தப்படுத்தியுள்ள ஒரு மீட்பு உள்ளது என்றும், இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது மட்டும் இறைமக்களுக்கு
கிடைக்கக்கூடிய சிறப்பு வாய்ந்த ஒரு அருள் உள்ளது என்றும் 2000 வருடங்களுக்கு முன்பு
தூய ஆவியார் பேதுரு வழியாக அறிவித்தார் (1 பேதுரு 1:5,13).
ஆகையால்
இறைமக்களை பொறுத்தவரை மீண்டும் வருகின்ற இறைமகன் அருள்வது, நிலையான, மீட்பின் நற்செய்தியான சத்வார்த்தையைத்தான்.
மேலும்
விண்ணரசைப் பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும் என்று இறைவசனம் தெளிவாகக்
கூறுகிறது. தம்முடைய இரண்டாம் வருகையில் தன்னை ஏற்றுக்கொள்கின்ற அனைவருக்கும், தமது பெயரில் நம்பிக்கை கொள்கின்ற அனைவருக்கும் கடவுளின்
பிள்ளைகளாகும் உரிமையை இறைமகன் அளிப்பார் என இறைவசனம் கூறியுள்ளது(யோவான் 1:12).
மீண்டும் வருகின்ற இறைமகனில் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்றால் யாராவது அறிவிக்க வேண்டும். அறிவிக்கப்பட வேண்டும் என்றால் யாராவது கடவுளால் அனுப்பப்பட வேண்டும். ஏனென்றால் அறிவிப்பதை கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். (உரோமையர் 10:14-17).
தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல் தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை என்று இறைவசனம் கூறுகின்றது (ஆமோஸ் 3:7).
அப்போது கடவுள் அனுப்புகின்ற இந்த தூதர் இம்மீட்பைக் குறித்து அறிவிக்கின்ற செய்திதான் உலகம் எங்கும் சென்றடைகின்ற மத்தேயு 24:14 -ல் கூறப்பட்டுள்ள விண்ணரசைப் பற்றிய இந்நற்செய்தி.
உலகமெங்கும்
உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசுப் பற்றிய இந்நற்செய்தி அறிவிக்கப்படும்
என்பது கடவுளின் நீதியாகும். தெளிவான மற்றும் குறித்த நேரத்தில் முன்னறிவிப்பு அளித்த பின்பு கடவுள் உலகிற்கு தண்டனைத்
தீர்ப்பு வழங்குவார். காரணம், கடவுள் நீதி உள்ளவர். ஆகையால், இந்நற்செய்தி இறைமக்கள் கடவுளிடம் திரும்பி வருவதற்கான
எக்காளமுழக்கம் ஆகும்.
இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் உலகமெங்கும் முழங்குகின்ற விண்ணரசைப்
பற்றிய இந்நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.
கடவுளிடமிருந்து பகுத்தறியும் வரம் கிடைத்தவர்களுக்கு மட்டுமே இந்நற்செய்தி கடவுளிடமிருந்தா
அல்லது மனிதர்களிடமிருந்தா என்பதை பகுத்தறிய முடியும். கடவுளின் திருவுளம் நிறைவேற்ற விருப்பம் உடையவர் என
கடவுள் யாரை அங்கீகரிக்கின்றாரோ அவர்களுக்கு மட்டுமே இந்த வரம் கிடைக்கும் (யோவான்7:16-17).
செவியுடையோர்
கேட்பதற்காக இந்நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.