மூன்றாம் தெய்வராஜியத்தின் நற்செய்தி

காலத்தின் நிறைவில் அதாவது இறுதிக் காலத்தில் பறைசாற்றப்படும் விண்ணரசு பற்றிய நற்செய்தி தான் இந்த சத்வார்த்தை. இதுவே மூன்றாம் இறையாட்சியின் சத்வார்த்தை ஆகும்.

மூன்றாம் தெய்வராஜியத்தின் நற்செய்தி

காலத்தின் நிறைவில் அதாவது இறுதிக் காலத்தில் பறைசாற்றப்படும் விண்ணரசு பற்றிய நற்செய்தி தான் இந்த சத்வார்த்தை. இதுவே மூன்றாம் இறையாட்சியின் சத்வார்த்தை ஆகும்.

 

இறையாட்சி என்பது சர்வ வல்லவரும் அனைத்திற்கும் ஆண்டவருமான தந்தையாகிய கடவுளது திருவுளத்தை முழுமையான மகிழ்ச்சியுடன் கடைப்பிடிக்கின்ற அமைப்பாகும். மேலும் இறையாட்சியில் மக்களோடு சேர்ந்து  வாழ வேண்டுமென்பதே கடவுளின் கனவு. இந்த இறையாட்சியை அமைப்பதே இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்கு கடவுள் அளித்த பணியாகும்.

 கடவுளின் நீதியும்  அன்பும் நிறைந்த, அவரது வார்த்தைகளால் ஆளப்படுகின்ற இறையாட்சியை  நிறுவுவதுதான், மக்களை பெற்றெடுத்த நாள்முதல் கடவுளது இலட்சியமாக இருந்தது. இந்த இறையாட்சியில் இறைமக்களை திரும்பச் செய்வதற்கான  திட்டத்தை தான் கடவுள் வடிவமைத்துள்ளார் (எரேமியா 29:11-14). எனவே இதற்காக சட்டங்களையும், இறைவாக்கினர்களையும் அளித்து, ஒரு சிறு மந்தையை தனியாக பிரித்து தயார்ப்படுத்தினார்.

மேலும், கடவுள் இறைமகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பி இறையாட்சியைப் பற்றி கற்றுக்கொடுக்கவும், இறையாட்சியின் செயல்களைக் காண்பிக்கவும் செய்தார் (மத்தேயு 11:3-6).

ஆனால் இந்த இறையாட்சிக்கு மூன்று நிலைகள் உள்ளன அல்லது மூன்று இறையாட்சிகளைக் குறித்து இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்தார். இந்த மூன்று இறையாட்சிகளும் குறித்த காலத்தில் நிறுவப்படுகின்றன.

ஒன்றாம் இறையாட்சி :

                 ஒரு மனிதனது  ஆன்மாவினை எதிர்த்து போராடுகின்ற ஊனியல்பின் சட்டங்களை தூய ஆவியாரின் வல்லமையால் கீழ்ப்படுத்தி  கடவுளது ஆவியின் கனிகளை புறப்படச் செய்யும் நிலைதான் ஒன்றாம் இறையாட்சி. மேலும் பெந்தகோஸ்து நாளில் இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம் வழியாக தூய ஆவியாரை பெற்றதிலிருந்தே இந்த இறையாட்சி நிறுவப்பட்டது.

இரண்டாம் இறையாட்சி :

                      பேரின்ப வீடு தான் இரண்டாம் இறையாட்சி .தந்தையாகிய கடவுளும், இறைமகனும், தூய ஆவியாரும், பரிசுத்த அம்மாவும் வாழ்கின்ற இடம் அல்ல பேரின்ப வீடு. மாறாக விசுவாசத்திலும் தூய்மையிலும் இறந்தவர்கள் இருக்கின்ற இடமாகும். மேலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த பின்னரே இந்த இறையாட்சிக்குள் நுழைய முடிந்தது (எபிரேயர் 10 :19 -20). இயேசு கிறிஸ்து பாதாளத்திற்கு இறங்கி சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தவர்களும் இங்கே உள்ளனர் (எபேசியர் 4:8-9). இதுவரை ஒன்றாம் இறையாட்சியில் உள்ளவர்கள் அதாவது தூய்மையோடு இறந்தவர்கள் சென்று நுழைவது தான் இரண்டாம் இறையாட்சி (மாற்கு 9:47-48).

மூன்றாம் இறையாட்சி :

வல்லமையோடும் காணக்கூடிய அடையாளங்களோடும் வருகின்ற ஒரு இறையாட்சியைப் பற்றி இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்தார் (மாற்கு 9:1). அதுவே மூன்றாம் இறையாட்சி. அது இந்த பூமிக்கு இறங்கி வந்து இங்கே நிறுவப்படும்(திருவெளிப்பாடு 21:1-2).

 இந்த இறையாட்சி வரவேண்டும் என மன்றாடுவதற்குதான் இயேசு கிறிஸ்து சீடர்களை அழைத்தார். விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்ற ஜெபத்தில் இறைமக்கள் கடந்த 20 நூற்றாண்டுகளாக இந்த இறையாட்சி வர வேண்டும் என்றே ஜெபிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவர் இறைமக்களை ஆட்சி செய்யும் போது இந்த பூமியில் ஒருங்கிணைக்கப்படுவதும் இந்த இறையாட்சியே . மேலும் இந்த ஆட்சி புதிய பூமியில் சர்வ மாட்சியோடு என்றென்றும் நிலைத்து நிற்கும்.

 

எல்லா மக்களினத்தையும் எல்லா படைப்புகளையும் இறைவார்த்தையால் ஆட்சி செய்கின்ற நிலைதான் இந்த இறையாட்சி. பேரின்ப வீட்டில் பாவம் செய்வதற்கு முன்பு இறைவசனம்தான் மனிதரையும் அவர்கள் வழியாக படைப்புகளையும் ஆட்சி செய்தது.

இந்த இறைவசன ஆட்சியை சீர்படுத்துவதற்காகவே இறைமகன் இயேசு கிறிஸ்து(இம்மானுயேல்) மாட்சியோடு மீண்டும் வரவிருக்கின்றார். இதோ! சகல மக்களினத்தையும் இரும்புக் கோல் கொண்டு ஆட்சி செய்ய இறைமகன் வருகிறார் என்ற சத்வார்த்தை இப்பொழுது பறைசாற்றப்படுகிறது(எசாயா 40:9-10 ; திருவெளிப்பாடு 12: 1-5). இறைவசனத்தாலும் ஞானத்தாலும் நிறைந்த வசனத்தால் ஆட்சி செய்யப்படுகிறவர்களின் தாழ்வுக்குரிய உடலை தமது மாட்சிக்குரிய உடலாக இயேசு கிறிஸ்து (இம்மானுயேல்) உருமாற்றுவார் (பிலிப்பியர் 3:20-21). பாவிகளையும் , சாத்தானிற்கு சொந்தமானவர்களையும் அவர் தண்டிப்பார் (எசாயா 63:1-6). அவ்வாறு கடவுளின் நீதியை அவர் நேர்மையோடு நிறைவேற்றுவார் (எசாயா 42:2-4 ; 2கொரிந்தியர் 5:10).

நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் (யோவான் 8:23). உலகிலிருந்து அவர் தேர்ந்தெடுத்த மக்கள் உலகை சார்ந்தவர்கள் அல்ல( யோவான்15: 18-19). இந்த உலகிற்கு உயர்ந்தவையாக கருதப்படுவது கடவுளுக்கு அருவருப்பானதாகும் ( லூக்கா 16:15). உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார், என இறைவசனம் நமக்கு கற்றுத் தருகிறது(யாக்கோபு 4:4). உலகின்மீதும் அதிலுள்ளவைமீதும் அன்பு செலுத்துகிறவர்களுக்குள் தந்தையின் பால் அன்பு இராது என தூய ஆவியார் நமக்கு முன்னறிவிப்பு தருகிறார் (1யோவான் 2:15-17). மேலும் ஒருவர் மிகுதியான உடைமைகளை கொண்டிருப்பதால் வாழ்வு வந்து விடாது என்றும்(லூக்கா 12:14-15), கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர்  அறிவிலி(லூக்கா 12:20-21) என்றும், அதனால் விண்ணுலகில் உண்மையான (எதார்த்தமான) செல்வத்தை சேர்த்து வைய்யுங்கள் என (மத்தேயு 6:19-20)  இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, தமது பிறப்பினாலும், வாழ்க்கை முறையினாலும், மரணத்தினாலும் அவர் இந்த உலக ஆட்சிக்கு சவால் விடுத்து வெற்றி கொண்டார் (யோவான் 16:33). பேரின்ப வீட்டில் கடவுள் ஆதாமிற்கும் அனைத்து மக்களினத்தாருக்கும் அளித்த கட்டளையும், ஆசீர்வாதமும் தான் பூமியையும் உலகத்தையும் கீழ்ப்படுத்துவது (தொடக்கநூல்1:28).

ஆனால் கடவுள் தமது மக்களுக்காக ஏற்பாடு செய்தவை கண்ணுக்கு புலப்படாததும், செவிக்கு எட்டாததும், மனித உள்ளம் அறியாதவைகளிலும்(1கொரிந்தியர் 2:9)  இலட்சியம் வைக்காமல் அழியக்கூடிய மடைமையான இந்த உலகத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க முயற்சிக்கும் போதெல்லாம் கடவுள் அதனை அழித்து விடுவார். இவ்வாறு கடவுளோடு மறுதலித்த மக்கள் செய்தவைதான்‌ சினயார் சமவெளியில் உயர்த்திய பாபேல் கோபுரம் முதல் இன்றுவரை மனிதன் தீர்த்து கொண்டிருக்கும் ஒரே உலக நுகர்வோர் -உடல் சாம்ராஜ்யம் . இவற்றிற்கு எல்லாம் அழிவு தான் முடிவு.

சபை என்பது என்ன?

இந்த இறையாட்சியை நிறுவுவதற்கான ஆயத்தமாகதான்  கடவுள் சபையை  நிறுவினார். கடவுள் இயேசு கிறிஸ்துவை(இம்மானுயேலினை) அனுப்பியது போலவேதான்  இயேசு கிறிஸ்துவும் தமது சீடர்களை அனுப்பினார்(யோவான் 20:21). அதாவது சொந்த சிலுவையை எடுத்து உலகத்தை கீழ்ப்படுத்திக்கொண்டு இறையாட்சிக்கு சாட்சிகளாகவும், இறையாட்சிக்காக மக்களை ஒருங்கிணைக்கவும், திருத்தூதர்கள் உழைக்க வேண்டும். காரணம், அதற்காகவே தந்தையாகிய கடவுள் பணியாற்றுகிறார்(ஏசாயா 64:4). மேலும் இறைமகன் பணியாற்றுவதும்(யோவான் 5:17) பரிசுத்த அம்மா பணியாற்றுவதும் (சால. ஞானம்9:10) பரிசுத்த ஆவியானவர் பணியாற்றுவதும் (1கொரிந்தியர் 12: 4-7) தந்தையாகிய கடவுளின் திருவுளம் நிறைவேறுவதற்கே, இறைவசனத்தின் கீழ்படிதலுக்காக இந்த உலகத்திலிருந்து வேறுபடுத்தப்பட்ட சமூகம்தான் சபை.

 

ஆனால் காலப்போக்கில் சபைகள் இந்த உலகில் ஒரு சாம்ராஜ்யத்தை அமைக்க உழைக்கக் தொடங்கினர். ஆகவே இன்று சபையதிகாரிகள் இறையாட்சியைப் பற்றியோ, நிலைவாழ்வைப் பற்றியோ கற்றுக் கொடுப்பதில்லை. இவை கிடைக்க மக்களை ஒருங்கிணைப்பதும் இல்லை மாறாக  மக்கள் ஒருபோதும் இவற்றை அடையாமல் இருப்பதற்கான திட்டங்களையும் அவர்கள் நடைமுறைப் படுத்துகின்றனர். இந்த உலக ஆட்சியில் மக்களை நிலைநிறுத்துகின்ற நிகழ்வுகளையும் நிறுவனங்களையும் தான் சபைகள் இன்று நடத்துகிறது. இவற்றையெல்லாம் செய்ய ஆண்டவர் அவர்களிடம் கூறவில்லை. அவர்கள் இது போன்ற நிறுவனங்களை நடத்துவதால் கடவுளுக்கோ இறையாட்சிக்கோ எவ்வித பயனும் இல்லை என்பது மட்டுமல்ல, இது கடவுளின் திட்டங்களுக்கு முரணானதாகும். இவ்வாறான செயல்களுக்கும் கடவுள் அவர்களுக்கு அளித்த பொறுப்புகளுக்கும்                   (மத்தேயு 28:19-20)  இடையில் எவ்வித பொருத்தமும் இல்லைஇந்த நிறுவனங்களில் கற்று முடித்தவர்களும் வரவிருக்கின்ற  உலகத்தின் நிலைவாழ்வைப் பற்றியோ, அவ்விடத்திற்கு அழைத்து செல்ல வரும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ, இறையாட்சியைப் பற்றியோ கேட்டதும் இல்லை, கேட்கவும் மாட்டார்கள்.

 

இவ்வுலக வாழ்க்கைக்காக மட்டுமே இன்றைய சபைகள் இயேசு கிறிஸ்துவில் எதிர்நோக்குக் கொண்டுள்ளது.

இயேசு கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.

(1 கொரிந்தியர் 15:19) 

என இறைவசனம் தெளிவாக கூறுகிறது.

 இறைவசனம் இரங்குதற்கு உரியவையாய்   கருதுவதெல்லாம் நிலையான இரங்குதற்கு உரியவையாகும். கடவுள் திட்டமிட்டதும்,அடிதளமிட்டதும், கட்டியதுமான விண்ணக நகரத்தைச் பற்றியோ (எபிரேயம் 11:10)  அவ்விடத்திற்கு செல்வதற்கான தயாரிப்புகளைப் பற்றியோ சபைகள் கற்றுத்தருவதில்லை. ஆகவே விண்ணகத்தில் செல்வத்தை சேர்ப்பதற்கு மாறாக இந்த உலகில் செல்வங்களை சேர்ப்பதற்கு ஒரு மக்களினத்தை அவர்கள் உருவாக்கினார்கள் (மத்தேயு 6:19-21) .  இன்று மக்களினத்தின் உள்ளம் இந்த பூமியிலுள்ளவைமீதாகும். அதாவது உன்னதத்திலுள்ளவற்றை தேடாமல் அவர்கள் பூமியிலுள்ள பொருட்கள்மீது கவனம் செலுத்துகின்றனர் (கொலோசையர் 3:1-2).

 உயிர்த்தெழுதல் மற்றும் உருமாற்றம் :

திருத்தூதர்கள் உயிர்த்தெழுதலைப் பற்றி  தொடர்ந்து பேசினார்கள். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பிருந்தவர்கள் மேன்மைமிக்க உயிர்த்தெழுதலை அடைவதற்காக துன்பங்கள் வழியிலிருந்து பின் திரும்பவில்லை. மேலும் உயிர்த்தெழுதலில் எதிர்நோக்கு இருந்ததினால்தான் மக்கப்பேயர் நூலில் ஒரு தாயும் ஏழு மகன்களும் வீர மரணத்தை ஏற்றுக் கொண்டனர். லாசரின் உயிர்த்தெழுதலின் போது மார்த்தா இறுதி நாட்களில் நடக்கவிருக்கின்ற உயிர்த்தெழுதலை ஏற்றுக் கூறுகிறாள். ஆகவே கடவுள் ஒரு காலகட்டத்தின் வழியாக உயிர்த்தெழுதலைக் குறித்து கற்றுக் கொடுத்தார்  என்பதன் தெளிவுதான் இவையெல்லாம். ஆனால்  உருமாற்றத்தை குறித்துள்ள அறிவு இயேசு கிறிஸ்துவின் வழியாக மட்டுமே இறைமக்களுக்கு கிடைத்தது. தாபோரில்  உருமாற்றம்(மத்தேயு 17:1-2) என்பது இறைமக்கள் இறுதி நாள்களில் ஏற்றுக்கொள்ளவிருக்கும் உருமாற்றத்தின்  முன்புள்ள காட்சியாக இருந்தது. ஆனால் உலக அறிவியலின் போதையில் இருக்கும் ஏராளமான சபை அறிஞர்களுக்கு இவையெல்லாம் புத்தகத்திலுள்ள கட்டுக்கதைகளாகும்.

மூன்றாம் இறையாட்சியின் சத்வார்த்தை என்பது என்ன?

ஒன்றாம் மற்றும் இரண்டாம் இறையாட்சிகள் பற்றிய நற்செய்தி உலகம் முழுவதும், அதாவது அது சென்றடைய வேண்டிய இடங்களில் எல்லாம் சென்றடைந்து விட்டது   (கொலோசையர்1/23). ஆனால் மத்தேயு24/14 -ல்

உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும்.

என எழுதப்பட்டுள்ளது. மத்தேயு 24-ஆம் அதிகாரம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும், உலக முடிவைப் பற்றியும் தான் கூறப்பட்டுள்ளது.

·         அதாவது காலத்தின் இறுதியில் அல்லது இறுதிக்காலத்தில் பறைசாற்றப்பட வேண்டிய சத்வார்த்தை தான் விண்ணரசுப்பற்றிய இந்நற்செய்தி. இதுவே மூன்றாம் இறையாட்சியின் சத்வார்த்தை ஆகும்.

·         இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும், அவருடைய ஆட்சியையும், அவர் அளிக்கவிருக்கும் மீட்பையும், அவரது நீதி தீர்ப்பையும் பற்றி பறைசாற்றுக்கின்ற சத்வார்த்தை.

·          இதோ! தந்தையாகிய கடவுள் ஆற்றலோடு வருகிறார்.அவரது கரத்தின் வல்லமையால் ஆட்சி செய்கிறார். சமாதானம் அவரது கையிலிருக்கிறதுவெற்றிப் பரிசையும்  தம்முடன் எடுத்து வருகிறார்; அவரை நாம் நேரடியாக காண்போம் என்பதுதான் இந்த சத்வார்த்தை (எசாயா40:9-10 ;எசாயா 52:7-8).

மீட்புக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களுக்கு  மீட்பும், மற்றவர்களுக்கு தண்டனையும் அளிகின்ற நற்செய்திதான் இந்த மூன்றாம் இறையாட்சியின் நற்செய்தி.

இதோ! மூன்றாம் இறையாட்சியின் சத்வார்த்தை பறைசாற்றப்படுகிறது. இறையாட்சியின் மறைபொருள்களை (மாற்கு 4:10-12) மக்கள் அங்குமிங்கும் ஓடி நடந்தாலும் அவற்றை அறிய வரம் கிடைத்துள்ளவர்கள் மட்டுமே இதனை புரிந்து கொள்வர் . அறிவு பெருகினாலும், ஞானம் இருந்தால் மட்டுமே இந்த சத்வார்த்தையை புரிந்து கொள்ள முடியும். தேர்ந்தெடுத்தல் இருந்தால் மட்டுமே இதனை ஏற்றுக் கொள்ளவும் முடியும் (தானியேல் 12:4,8-10).

Related Articles

View All

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.

இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.

Chat with us