தெய்வ பிதாவை குறித்து தெளிவாக கற்றுத் தரப்படுகிறது

தந்தையாகிய கடவுளைப் பற்றியும், இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், இறைவார்த்தையின் மறைப்பொருள்கள் பற்றியும் தெளிவாகவும் முழுமையாகவும் இறைமக்கள் அறிந்து கொள்வது இறுதிக்காலத்தில். அதாவது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில்.

தெய்வ பிதாவை குறித்து தெளிவாக கற்றுத் தரப்படுகிறது

தந்தையாகிய கடவுளைப் பற்றியும், இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், இறைவார்த்தையின் மறைப்பொருள்கள் பற்றியும் தெளிவாகவும் முழுமையாகவும் இறைமக்கள் அறிந்து கொள்வது இறுதிக்காலத்தில். அதாவது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில்.

இந்த நூலில் உள்ள இறைவாக்குகளை முத்திரையிட்டு வைக்காதே; இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது. (திருவெளிப்பாடு22:10)

நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால், காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப்பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். (யோவான் 16:25)

தமது நற்செய்தி பணியின் இறுதி நேரத்தில் அதாவது கல்வாரி பயணம் தொடங்குவதற்கு முன்பு இயேசு கிறிஸ்து இந்த வாக்குறுதியை அளித்தார். அதன் பிறகு தந்தையாகிய கடவுளைப் பற்றி இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்ததாக எந்த இடத்திலும் காணப்படுவதில்லை. அதுமட்டுமல்லகாலம் வருகிறது என்று இயேசுகிறிஸ்து கூறியபோதெல்லாம் அவர் சொல்லவருவது அவரது இரண்டாம் வருகையைப் பற்றி அதாவது இறுதி நாட்களைப் பற்றி என்று இறைவார்த்தையை ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம்.

இயேசுகிறிஸ்துவின் மூன்று ஆண்டு கால நற்செய்தி பணியிலும் தந்தையாகிய கடவுளைப் பற்றித்தான் வெளிப்படுத்தினார்‌. ஆனால் யாருக்கும் புரியாமலிருக்க உவமைகள் வழியாக பேசினார்.

அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான், நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். (மத்தேயு 13:13)

ஆகவேதான், இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வழியாக தந்தையாகிய கடவுளைப்பற்றி வெளிப்படையாக அறிவிக்கப்படும் என இறைவார்த்தை சான்று பகர்கிறது.

இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்து கொள்ளும் ஆற்றலை நமக்கு தந்துள்ளார். (1 யோவான் 5:20)

 

நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் 16:12-13)

 

இது 2000 வருடங்களுக்கு முன்பு பெந்தகோஸ்து நாளில் சீடர்கள் பெற்றுக் கொண்ட தூய ஆவியாரைப் பற்றி அல்ல. காரணம் ஏராளமான இறைவார்த்தைகள் குறிக்கப்பட்ட  நாள்வரையில் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும் என கடவுளாகிய ஆண்டவரே கூறியுள்ளார்.

நான் அதைக் கேட்டும் அதன் பொருளை அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது அவரை நோக்கி, என் தலைவரே! இவற்றிற்குப் பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்.             தானியேலே! நீ போகலாம்; குறிக்கப்பட்ட நாள்வரையில் இந்தச் சொற்கள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும். (தானியேல் 12:8-9)

 

இப்பொழுது எதற்காக நாம் பிதாவாகிய கடவுளை அறிந்து கொள்ள வேண்டும்?

 

உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு (யோவான் 17:3).

 

எனவே நிலைவாழ்வை நாம் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமல்ல, தந்தையாகிய கடவுளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

இந்த நிலைவாழ்வை நாம் சொந்தமாக்கி கொள்வதற்காகவே தந்தையாகிய கடவுள் தம் ஒரே மகனையும் அளிக்கும் அளவிற்கு நம்மீது அன்பு கூர்ந்தார்.

 

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16)

 

அவ்வாறெனில், மீண்டும் அதே மகன் வழியாக நாம் நிலைவாழ்வை சொந்தமாக்கிக்கொள்ள கடவுள் தம்மை வெளிப்படுத்தாமல் இருப்பாரா?  நமக்கு பாவமன்னிப்பாகும் மீட்பை அருளிய இயேசுகிறிஸ்து வழியாக அழியாத நிலைவாழ்வை அருளாதிருப்பாரா?

 

இதோ! உண்மையின் முழுமையிலும், தந்தையாகிய கடவுளைப் பற்றிய தெளிவான அறிவிலும் இறைமக்களை வழிநடத்த நிலைவாழ்வின் வார்த்தைகள் இப்பொழுது அறிவிக்கப்படுகிறது. இது இறைமகன் இயேசு கிறிஸ்து மீண்டும் சரீரம் அணிந்து இந்த பூமியில் வந்து விட்டார் என்பதற்கான மிகப்பெரிய அடையாளம் ஆகும்.

அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலை வாழ்வு பற்றியதாகும். (1 யோவான் 2:25).

இதோ! தனது வாக்குறுதியை நிறைவேற்ற இறைமகன் இயேசு கிறிஸ்து மீண்டும் இந்த பூமிக்கு வந்து விட்டார்.

தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து வருக! வருக!” என்கிறார்கள். இதை கேட்போரும், வருக! வருக!” எனச் சொல்லட்டும். தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்”. (திருவெளிப்பாடு 22:17).

Related Articles

View All

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.

இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.

Chat with us