பரிசுத்த தாய் சக மீட்பர்

அமலோற்பவியாகிய பரிசுத்த அம்மா, மீட்கப்பட்டது இயேசு கிறிஸ்துவின் வழியாக அல்ல, மாறாக தமது உயர்க்குடி பிறப்பினாலே மீட்கப்பட்டவராவார்.

பரிசுத்த தாய்   சக மீட்பர்

அமலோற்பவியாகிய பரிசுத்த அம்மா, மீட்கப்பட்டது இயேசு கிறிஸ்துவின் வழியாக அல்ல, மாறாக தமது உயர்க்குடி பிறப்பினாலே மீட்கப்பட்டவராவார்.

பரிசுத்த அம்மா ஆதாமின் வழிமரபை சார்ந்தவரல்ல எனவே, அவருக்கு மீட்பு தேவையில்லை(நீதிமொழிகள்8:22-30)

அதுபோலவே, பரிசுத்த அம்மா மரணமில்லாத்தவராவார், அதனால் அவருக்கு மீட்பு தேவையில்லை (சீராக் 24:18 ,24:9 ,பாரூக்கு 4:1)

மனிதர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்து வழியாக அருளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பே  பரிசுத்த அம்மா கடவுளால் அருள்மிகப் பெற்றவராவார்”.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.

(லூக்கா 1:28)

அதுபோலவே, இயேசு கிறிஸ்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுவதற்கு முன்பே, பரிசுத்த அம்மா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்.

 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

(லூக்கா 1:35)

எனவே பரிசுத்த அம்மா கடவுளின் தாய். இயேசு கிறிஸ்துவை போலவே பரிசுத்த அம்மாவும் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தூய ஆவியானவரால் சான்று பெற்றவராவார்.

அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!

(லூக்கா 1:42)

பரிசுத்த அம்மா இறைமகனால் தெய்வம் என்று அழைக்கப்பட்டவரும் ஆவார்.

 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.

(யோவான் 10:35)

 பரிசுத்த அம்மா இந்த பூமியோ, பூமியில் பூற்பூண்டுகளோ படைக்கப்படுவதற்கு முன்பே கடவுளிடமிருந்து பிறந்தவர் ஆவார். மேலும் முதன்முதலில் கடவுளின் ஊனிலும் இரத்தத்திலும் பங்கு பெற்றவரும், உலக படைப்புகளில் கடவுளோடு இருந்தவரும், அவரது எல்லா செயல்களுக்கும் பொறுப்பாளராக செயல்படுபவரும் பரிசுத்த அம்மாவே ஆவார் (நீதி மொழிகள் 8:22-30).

வாழ்வளிக்கும் சட்டமும் தந்தையாகிய கடவுளின் ஊனும், இரத்தமும் முன்பதிவு (நிறைத்து) செய்திருப்பது பரிசுத்த அம்மாவில் தான்.

 (பாரூக்கு 4:1-2).

மேலும், சொர்க்கத்தில் இருந்து வசனத்தின் ஆத்மாவாக வந்த இறைமகன்  இயேசு கிறிஸ்துவிற்கு ஊனும் இரத்தமும் அளித்தது பரிசுத்த அம்மா ஆவார் (யோவான் 1:14 ,உரோமையின் 3:25-26).

ஆகவே, பரிசுத்த அம்மா மரணமில்லாத்தவரும், கடவுளின் ஞானம் முழுவதும் நிறைந்திருப்பவரும் ஆவார் (சால.ஞானம் 8:3-4).

பரிசுத்த அம்மாவின் ஆன்மா சர்வவல்லமையும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றதும், எல்லாவற்றையும் சரிசெய்வதும் ஆகும். (சால.ஞானம் 7:23-30)

 

அவ்வாறு, பரிசுத்த அம்மா இயேசு கிறிஸ்துவின் வழியாக மீட்கப்படவில்லை.

மாறாக, தமது உயர்க்குடி பிறப்பினாலே மீட்கப்பட்டார். ஆகவே  தான் பரிசுத்த தாய் சக மீட்பர் ஆவார்.

Related Articles

View All

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.

இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.

Chat with us