பரிசுத்த தாயின் கானாவூரில் காரியதரிசனம்

தமது நேரம் இன்னும் வரவில்லை என்று முழுவதுமாக ஒதுங்கி இருந்த இயேசுகிறிஸ்து, எதற்காக “அவன் சொல்வதை செய்யுங்கள்” என்று பரிசுத்த அம்மா கூறிய வார்த்தையை கேட்டவுடன், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார்?

பரிசுத்த தாயின் கானாவூரில் காரியதரிசனம்

தமது நேரம் இன்னும் வரவில்லை என்று முழுவதுமாக ஒதுங்கி இருந்த இயேசுகிறிஸ்து, எதற்காக அவன் சொல்வதை செய்யுங்கள்என்று  பரிசுத்த அம்மா கூறிய வார்த்தையை கேட்டவுடன், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார்?

கானாவூர் திருமண வீட்டில் நிகழ்ந்தது என்ன?

கடவுளின் எல்லா செயல்களும் நிறைவேற அவருடைய எல்லையற்ற ஞானத்தினால் குறிப்பிடத்தக்க நேரத்தையும் காலத்தையும் வரையறுத்திருக்கிறார். எனவே, அவருடைய செயல்கள் அனைத்தும் அவர்  உறுதிச் செய்த நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ நிறைவேறாது.

(சபைஉரையாளர்3:1-17,சீராக்35:15-17)

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு.

(சபை உரையாளர் 3:1)

 நற்செய்தி வாசகங்களில் இடம்பெற்றுள்ள இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளையும், செயல்களையும் ஆராய்ந்தால் தந்தையாகிய கடவுள்  கட்டளையிட்ட வார்த்தைகளும், செயல்களும் அவர்  உறுதிச் செய்த நேரத்திலும், வழி முறைகளிலும் தான் இயேசுகிறிஸ்து  செய்தார் என்பது தெளிவாகிறது.

கடவுள் உறுதிச் செய்த நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ அவர் கட்டளையிட்ட வார்த்தைகளை செயல்படுத்த முற்படுவது சாத்தானாவான். ஆனால், ஞானிகள் தக்க காலத்தையும் நேரத்தையும் அறிந்து அதற்கேற்ப செயல்படுபவராய் இருப்பர்.

அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது. அவன் சொல்வதைச் செய்வதற்குரிய காலத்தையும் வழியையும் ஞானமுள்ளவன் அறிவான்.

(சபை உரையாளர் 8:5)

நேரம் வருவதற்கு முன்பு அற்புதச் செயலை செய்வதற்காக  அல்ல, பரிசுத்த கன்னிமரியா கானாவூர் திருமண வீட்டில் நடுவராக செயல்பட்டது. இயேசு கிறிஸ்து தமது நற்செய்தி பயணம் முழுவதும் செலவழித்தது கடவுளின் அலுவல்களில் ஈடுபடுவதற்கே ஆகும்.

 இயேசு கிறிஸ்து தமது 12 -ஆம் வயதில் எருசலேம் ஆலயத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அப்போது போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும், அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார். அவற்றை கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துக்கொள்ளும் ஆற்றலையும்  திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். இது, தனது தந்தையின் அலுவல்களில் ஈடுபட ஆர்வமாயிருப்பதாக  அவர் கூறினார்.

எனினும், தன்னுடைய தாயின் சொல்லைக் கேட்டு அவர் வீட்டிற்கு சென்றார். அதற்கு பிறகு அவர் 18 ஆண்டுகள் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டதாக மறைநூலில் எவ்விடத்திலும் நாம் காண்பதில்லை. காரணம், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று அவர் அறிந்திருந்தார்.

இதே வார்த்தைகளைத் தான் இயேசு கிறிஸ்து கானாவூர் திருமணத்தின்போதும் கூறினார்.

தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுவதற்கும் தந்தையின் அலுவல்களில் ஈடுபடுவதற்கும்  இடையே உள்ள தொடர்பு என்ன ?

இயேசு கிறிஸ்து அதுவரை எவ்வித அற்புதங்களும் அடையாளங்களும் செய்யவில்லை.

ஆனால் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்று அவரது தாய் கூற காரணம் என்ன? திராட்சை இரசம் என்பது உடனே தயார் செய்யக்கூடிய பொருள் அல்ல.

தனது நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு கிறிஸ்து தெளிவாக அறிந்திருந்தார். அதாவது, நான் ஒன்றும் செய்யவும் சொல்லவும் மாட்டேன் என்று இயேசு கிறிஸ்து கூறினார். இருப்பினும், எதற்காக பரிசுத்த அம்மா அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று கூறினார். நேரமாவதற்கு முன்பே   இறைமகனைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைச் செய்ய அவரை தூண்டுவது சாத்தானாவான்.

உதாரணமாக:

40 நாட்கள் நோன்பிருந்த  இயேசு கிறிஸ்து அலகையால் சோதிக்கப்பட்டார்.கல்லை அப்பமாக மாற்றவும், கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும் என்றும் உரைத்தது சாத்தானாவான். இறைமகன் அரசராவதற்கே பிறந்தார் எனினும், நேரமாவதற்கு முன்பு (ஒன்றாம் வரவில்) தம்மை அரசராக்க முயன்ற மக்கள்க்கூட்டத்திற்கு  இடையில் செயல்பட்டது சாத்தானென்று அறிந்து, இயேசுகிறிஸ்து மக்களிடையில் இருந்து விலகி தனியே  மலைக்கு சென்றார்.

 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

(யோவான் 6:14-15)

தமது ஒன்றாம் வரவில், அவர் உயிர்த்தெழும் வரை எவரும் தாமே இறைமகன் கிறிஸ்து என்று யாருக்கும் தெரியக்கூடாது என விரும்பினார்

(மத்தேயு 16:20 , 17:9).

அதுபோலவே தந்தையாகிய கடவுளும் அவரை இந்த உலகத்திலிருந்து மறைத்து வைத்தார்.  இருப்பினும், கடவுள் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்கு முன்பே,  “உன்னத கடவுளின் மகனேஎன்று வெளிப்படையாக அழைத்து, அவரை வெளிப்படுத்த முயற்சி செய்தது அசுத்தஆவிகளும், பிசாசுக்களும் ஆகும்

(மாற்கு 1:34 , 5:1-7 ).

கடவுள் குறிப்பிட்ட நேரமாவதற்கு முன் இறைமகன் ஒன்றும் செய்யவும் மாட்டார், செய்யவும் கூடாது.

 இன்று ஏராளமான கிறிஸ்தவ போதகர்கள் கூறுவது போல, இயேசு கிறிஸ்துவின் நேரம் வராததற்கு முன்பே அவரை செயல்பட தூண்டுகின்ற செயலையா பரிசுத்த கன்னி மரியா செய்தார்?

அப்படியெனில், அது சாத்தானின் செயலென்றுக் கூற வேண்டியிருக்கும். ஆனால், தந்தையாகிய கடவுள் தமது ஏகமகனை, ஏராளமான வருடங்கள் காத்திருக்கின்ற மக்களிடையில் அனுப்பும் போது,  இந்த பூமியில் சாத்தானின் ஆளுமையுள்ள ஏதோ ஒரு பெண்ணின் கரங்களில் அளிக்கும் அளவிற்கு கடவுள் வலுவில்லாதவரோ,

அறிவில்லாதவரோ அல்ல.

 அதுமட்டுமல்ல, கடவுளின்  அலுவல்களில் ஈடுபட்டிருந்த இறைமகனை எருசலேம் ஆலயத்திலிருந்து வெளியேற்றி  வீட்டிற்கு அழைத்துச் சென்ற தமது அம்மாவின் வார்த்தைகளுக்கு 18 வருடங்கள்  கீழ்ப்படிந்து பணிவுடன் நடந்துக்கொண்டார். எனவே தான்,  கானாவூரிலும் இயேசு கிறிஸ்து தமது நேரம் வரவில்லை என்று கூறினார். சாத்தானை கீழ்ப்படியும் அளவிற்கு இறைமகன் வலுவற்றவர் அல்ல.

 இயேசு கிறிஸ்துவின் நேரம் வருவதற்கு முன்பே அற்புதங்கள்  செய்ய , கட்டாயப்படுத்தும் செயலை பரிசுத்த அம்மா செய்யவில்லை. உதவியின்றி தவித்த வீட்டுரிமையாளர்களின் சார்பில் நின்றுகொண்டு, அவர்களுக்கு திராட்சை இரசம் கிடைப்பதற்கு அல்ல, பரிசுத்த அம்மா நடுவராக செயல்பட்டதும்.

தன்னுடைய நேரம் இன்னும் வரவில்லை என்று முழுவதுமாக ஒதுங்கி இருந்த இயேசு கிறிஸ்து. எதனால் அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று அவனுடைய அம்மா கூறியபோது அதைச் செய்தார்?

 ஒரு நிமிடம் முன்பு வரை ஆகாதிருந்த நேரம் ஒரு நிமிடத்திற்கு பிறகு எப்படி வந்தது?

 அங்கே நிகழ்ந்தது என்ன?

 தண்ணீரை திராட்சை இரசமாக மாற்ற இயேசு கிறிஸ்துவை தூண்டுமளவிற்கு கானாவூர் திருமண வீட்டில் நிகழ்ந்தது என்ன?

இதோ! அனைத்து மறைப்பொருள்களும்  சத்வார்த்தை வழியாக வெளிப்படுத்தப்படுகின்றது

Related Articles

View All

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.

இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.

Chat with us