பெந்தகுஸ்தாவில் சீடர்களின் தலையில் கரங்களை வைத்தவர் யார்?

இயேசுகிறிஸ்துவின் மூன்றரை வருடக் கால நற்செய்தி பயணம் முழுவதும் சீடர்கள் அவருடன் தான் இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இருப்பினும், இயேசுகிறிஸ்து போகும் வழியெல்லாம் அவரை விட்டு விலகாது அவருடன் பயணித்த சீடர்களுக்கு பரிசுத்த ஆவியாரை அருளவில்லை. இதற்கு காரணம் என்ன?

பெந்தகுஸ்தாவில் சீடர்களின் தலையில் கரங்களை வைத்தவர் யார்?

இயேசுகிறிஸ்துவின் மூன்றரை வருடக் கால நற்செய்தி பயணம் முழுவதும் சீடர்கள் அவருடன் தான்  இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இருப்பினும், இயேசுகிறிஸ்து  போகும் வழியெல்லாம் அவரை விட்டு விலகாது அவருடன் பயணித்த சீடர்களுக்கு பரிசுத்த ஆவியாரை அருளவில்லை.

இதற்கு காரணம் என்ன?

மேலும், தமது உயிர்த்தெழுதலுக்கும் விண்ணேற்றம் அடைவதற்கும் இடையேநாற்பது”  நாட்கள் அவர்களுடன்  இருந்தும் கூட இயேசுகிறிஸ்து தம்மில் விசுவசித்த சீடர்களுக்கு பரிசுத்த ஆவியாரை அருளவில்லை.

குறிப்பாக, தமது உயிர்த்தெழுதலுக்கு பிறகு மறைநூலைப்  புரிந்து கொள்ளுமாறு சீடர்களுடைய மனக்கண்களை  திறந்தார் என்று வசனம் கூறுகிறது.

அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.(லூக்கா 24:45)

 

அதுமட்டுமின்றி, இயேசுகிறிஸ்துவின் மரணம் வழியாக  அவருடைய உயிர்ப்பில் விசுவசித்த அனைவரையும் கடவுளாகிய ஆண்டவர் தாமே தம்மோடு ஒப்புரவாக்கினார் என்று இறைவார்த்தை சான்றுப் பகர்கிறது.

 இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். (கொலோசையர் 1:22)

பிறகு ,ஏன் இயேசு கிறிஸ்து நேரடியாக பரிசுத்த ஆவியாரை தம்முடைய சீடர்களுக்கு அருளவில்லை?

 மேலும் இயேசுகிறிஸ்து தமது 30 வயதில் தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்டார் என்று இறைவசனம் சான்றுப் பகர்கிறது.

இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு  யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார்.(லூக்கா 4:1)

இருப்பினும், இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியாரை சீடர்களுக்கு அருளவில்லை.

சீடர்கள் பரிசுத்த ஆவியாரைப் பெற்றுக்கொள்வதை  இயேசுகிறிஸ்து விரும்பவில்லையா?

இல்லை, சீடர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு வல்லமை பெற வேண்டுமென்பதே இயேசுகிறிஸ்துவின் திருவுளம் ஆகும்.

பரிசுத்த ஆவியானவர் ஒருவரில் முழுமையாக ஆட்கொள்ளப்பட  வேண்டுமென்றால் சில தகுதிகள் பெற்றுக்கொள்பவருக்கு இருக்க வேண்டும். அதில் மிமுக்கியமானதாக அமைவது , பரிசுத்த ஆவியால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்ட நபர் தமது கைகளை பரிசுத்த ஆவியாரை பெறுபவரின் தலைமீது வைத்து ஜெபிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஒருவர் முழுமையாக பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்  எனக் கருதப்படுவார். இதற்கு பல்வேறு சான்றுகள் திருவிவிலியத்தில் இடம் பெற்றுள்ளது.

அப்படியெனில், இயேசுகிறிஸ்து  பரிசுத்த ஆவியால் முழுமையாக ஆட்கொள்ளப்பட சீடர்களின் தலைமீது கைகள் வைத்து கடவுளிடம் வேண்டுதல் செய்திருந்தால் போதுமானது. ஏனெனில், தந்தையாகிய கடவுளுக்கும் ம்மில்  நம்பிக்கை வைக்கின்ற ஒவ்வொரு இறைமக்களுக்கும் இடையில் பரிந்து பேசுபவராய் இறைமகன் இயேசு கிறிஸ்து திகழ்கிறார்.

என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார்.(1யோவான் 2:1)

மேலும், இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வேண்டுதல்கள் அனைத்தையும் தந்தையாகிய கடவுள் கேட்பார் என்று அவரே சான்று பகிர்ந்துள்ளார்.

அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, "தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்" என்று கூறினார்.

(யோவான் 11: 41-42)

பிறகு ஏன் இயேசுகிறிஸ்து  பரிசுத்த ஆவியாரை சீடர்களுக்கு அருளவில்லை ?

அவ்வாறெனில்  பெந்தகோஸ்து நாளில் சீடர்கள் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டது எப்படி?

 இயேசு கிறிஸ்து விண்ணேற்றம் அடைந்து 10 நாட்கள் கடந்த பிறகே மாற்கின் மாளிகையில் வைத்து 120 சீடர்களும் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.

மேலும் தந்தையாகிய கடவுள் பரிசுத்த ஆவியை  இறைமகன் இயேசு கிறிஸ்து வழியாக தான் பொழிந்தார் என்று இறை வசனமும் சான்று பகர்கிறது

அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். (தீத்து 3:6)

ஆனால், அவர்கள் தூய ஆவியை பெற்றது  இயேசு கிறிஸ்து தம் தந்தையின் வலது பக்கத்தில் மாட்சியுடன் வீற்றிருந்த நேரம் ஆகும்.

பின்பு 120 சீடர்கள் தலைமீது கரங்களை வைத்து பரிசுத்த ஆவியை அருளியது யார்?

அவர்கள் நடுவில் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவராய் இருந்த மனிதன் யார்?

"ஆண்டவருடைய செயல்களெல்லாமே மிக நல்லவை; அவருடைய கட்டளையெல்லாம் குறித்த நேரத்தில் நிறைவேறும். ";இது என்ன?; அது எதற்கு? என யாரும் கூறக் கூடாது; எல்லாவற்றுக்கும் குறித்த நேரத்தில் விளக்கம் கொடுக்கப்படும்.

(சீராக்கின் ஞானம் 39:16)

ஏன் தந்தையாகிய கடவுள் சீடர்களுக்கு பரிசுத்த ஆவியாரை இவ்வாறு அருள திருவுளம் கொண்டார்?

அவ்வாறெனில்  பெந்தகோஸ்து நாளில் சீடர்களுக்கு பரிசுத்த ஆவியை அருளியது யார்?

இதோ, கடவுளின் எல்லா மறைபொருளும் (இரகசியங்களும்) சத்வார்த்தையின் வழியாக வெளிப்படுகின்ற காலம்!

அவர் தொடர்ந்து என்னிடம் பின்வருமாறு கூறினார்; "இந்த நூலில் உள்ள இறைவாக்குகளை முத்திரையிட்டு வைக்காதே; இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

(திருவெளிப்பாடு 22:10)

Related Articles

View All

இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இறைமக்களுக்கு ஒரு மீட்பு கிடைக்கவுள்ளது. அது இறைமக்களின் உடல் இறைமகனின் உடல் போன்றும், தூயவர்களாகவும், அழியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும் என்றும் கடவுளோடு புதிய பூமியில் வாழ்வதாகும்.

இதோ! இறுதிக்காலத்தில் மட்டும் இந்த உலகத்தில் முழங்குகின்ற விண்ணரசுப் பற்றிய நற்செய்தி இதோ அறிவிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் கடவுளின் பழிவாங்கும் நாளையும் கடவுளின் ஆட்சி(இறையாட்சி) நிறுவப்படுவதையும் பற்றி அறிவிப்பதுதான் இந்த நற்செய்தி.

Chat with us