பரிசுத்த அம்மா அனைவராலும் போற்றப்படுபவர் ஆவார். எனினும், பரிசுத்த அம்மா ஆதாமின் வழிமரபை சேர்ந்தவர் என்றும் இயேசு கிறிஸ்துவின் வழியாகத்தான் மீட்கப்பட்டவர் என்றும் உலகத்தில் உள்ள பல சபைகளும், கிறிஸ்துவ விசுவாசிகளும் சிந்தனை செய்து அதையே மக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள். ஆனால், இறை வசனத்தின் அடிப்படையில் அது உண்மை அல்ல.
பரிசுத்த அம்மா அனைவராலும்
போற்றப்படுபவர் ஆவார். எனினும், பரிசுத்த அம்மா ஆதாமின் வழிமரபை சேர்ந்தவர் என்றும்
இயேசு கிறிஸ்துவின் வழியாகத்தான் மீட்கப்பட்டவர் என்றும் உலகத்தில் உள்ள பல
சபைகளும், கிறிஸ்துவ விசுவாசிகளும் சிந்தனை செய்து அதையே மக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள். ஆனால், இறை வசனத்தின் அடிப்படையில் அது உண்மை அல்ல.
வார்த்தையான
இறைமகன் இயேசு கிறிஸ்து பரிசுத்த அம்மாவின் உதரத்திற்கு (யோவான் 1:1-5) வார்த்தையாக தான் வந்தார்.அதாவது,2000 வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்து இந்த
பூமிக்கு வருவதற்கு முன்பு வரை வார்த்தையாக தான் இருந்தார் , மானுடலுடன் அல்ல. எனவே, பரிசுத்த அம்மாவின் உதரத்திற்கு இறைமகன் ஆத்மாவாக தான் வந்தார்.
வானதூதர் வழியாக கடவுள் கூறிய வாக்கு (லூக்கா 1:28)
தன் உதரத்தில் மானுடலெடுக்கும் என்று பரிசுத்த அம்மா விசுவசித்தார். அவ்வாறு பரிசுத்த அம்மாவின் விசுவாசம் வழியாக ஊனும்,இரத்தமும் பெற்றுக்கொண்ட மானிடமகன் இயேசு கிறிஸ்து, இந்த பூமியில் பிறந்து இறைமக்களின் நடுவில் குடிக்கொண்டார்.
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
(யோவான்1:14)
அவ்வாறு கடவுளின் வாக்கு (லூக்கா 1:28) தன்னில் நிறைவேறும் என்ற பரிசுத்த அம்மாவின் விசுவாசம் வழியாக பெற்றுக்கொண்ட இரத்தத்தினால் தான்
பாவக்கழுவாய் நிறைவேற்றப்பட்டது.
இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார். இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.
(உரோமையர்
3:25-26)
ஆனால், ஆதாம் தந்தையாகிய
கடவுளின் வார்த்தைக்கு கீழ்படியாமல் சாத்தானின் பொய் வார்த்தையை விசுவசித்ததன் வழியாக கடவுளின் ஊனிலும் இரத்தத்திலும் பெற்ற பங்கினை இழந்தார். ஏனெனில்,ஆதாம் கடவுளின் ஊனிலும் இரத்தத்திலும் தான் படைக்கப் பெற்றார். அவ்வாறு ஆதாம் வழியாக ஒவ்வொரு இறைமக்களும் கடவுளின் ஊனிலும் இரத்தத்திலும் பங்கு பெற்றனர் (திருத்தூதர் பணிகள் 17:26).
அதுபோலவே, வார்த்தையான இறைமகன் இயேசு
கிறிஸ்து பரிசுத்த அம்மாவின் வழியாக தந்தையாகிய கடவுளின் ஊனிலும் இரத்தத்திலும்
பங்கு பெற்றார்.
ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்.
(எபிரேயர்
2:14)
ஏனெனில், ஆதாம் மற்றும் ஆதாமின் சந்ததிகள் அனைவரின் ஊனுடல் முழுவதும் பாவமும், மரணமும் நிறைந்ததாயும், ஜென்ம பாவம் உடையவராயும் மாறினார்கள்.
எனவே,இறைமக்களை மீண்டும் கடவுளின்
ஊனிலும் இரத்தத்திலும் பங்கு பெற செய்ய ஒரு குற்றமற்ற பலியின் வழியாக பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்க வேண்டியதாயிற்று.
மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா
53:4-5)
இதிலிருந்து பாவம்(பொய் வாக்கு) மற்றும் மரணம் உள்ள இரத்தத்திற்கு பாவக்கழுவாய் நிறைவேற்ற முடியாது என்றும் கடவுளின்
பிரசனத்தில் பலிப்பொருள் ஊனமற்றதாக இருக்க வேண்டும் என்பதும் வெளிப்படையாயிற்று.
ஆகவேதான், குற்றம் இல்லாத பரிசுத்த இரத்தம் சிந்தி இயேசுகிறிஸ்து இறைமக்களுக்கும் கடவுளுக்கும் இடையில் இருந்த
திரைச்சீலையை அகற்றி கடவுளோடு ஒப்புரவாக்கினார்.
சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.
ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.
(எபிரேயர் 10:19-20)
இதிலிருந்து நாம் ஒரு பொருளை அறிந்துக் கொள்ளலாம். பரிசுத்த அம்மா ஆதாமின் வழிமரபை சேர்ந்தவராக இருந்திருந்தால், அமலோற்பவியாக இருக்க முடியாது.
ஆதாமிலிருந்து கடவுள் மக்களினத்தை படைத்தார் (திருத்தூதர் பணிகள்
17:26). ஆதாமின் பாவத்தால் அனைத்து மக்களினத்தாரும் தாயின் கருவில் உருவாகும் முன்பே பாவிகளாய் இருந்தனர்.
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
(உரோமையர் 5:12)
பரிசுத்த அம்மா
ஆதாமின் வழிமரபை சேர்ந்தவர் என்றால், இயேசுகிறிஸ்துவின்
உடலும் பாவத்திற்கு அடிமையானதாக இருந்திருக்கும். ஆனால்
இயேசுகிறிஸ்து பாவி அல்ல.
பாவத்திற்கு
அடிமையான உடலைக்கொண்டு பாவக்கழுவாய் பலி செலுத்த முடியாது. இதிலிருந்து விளக்கிக் கூறினால் , பரிசுத்த அம்மா ஆதாமின் வழிமரபை சேர்ந்தவராக
இருந்திருந்தால் இயேசுகிறிஸ்துவின் உடல் பாவத்திற்கு
அடிமையான உடலாயிருந்திருக்கும்.
பரிசுத்த அம்மா
அமலோற்பவி ஆவார்.
அமலோற்பவம் என்றால் என்ன?
இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ
பிறந்தவர்கள் அல்லாமல்; கடவுளால் பிறந்தவர்களே அமலோற்பவி ஆவார். இதைத்தான் உயர்குடிப் பிறப்பு என்கிறோம்.இந்த உயர்குடிப் பிறப்பை பெற்றவர் தாம் பரிசுத்த அம்மா.
கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது. அதனால் அனைத்துலகின் ஆண்டவர் அதன்மேல் அன்புகூர்ந்தார். ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப் புகுமுகம் செய்து வைக்கிறது; அவருடைய செயல்களைத் தேர்வுசெய்வதும் அதுவே.
(சாலமோனின் ஞானம் 8:3-4)
திருச்சபை அறிஞர்களின் கருத்து என்னவென்றால், இயேசுகிறிஸ்துவின்
தகுதி மூலம் பரிசுத்த
அம்மாவிற்கு மட்டும் ஒரு உடன்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஆதாமின் வழி
மரபினர் காரியத்தில் கடவுள் அப்படி செய்ய முடியாது என்று கூறுகின்றனர். காரணம், கடவுளிடமிருந்து
பிறக்க வேண்டிய மக்கள் அனைவரையும் கடவுள் ஆதாமிற்குள் பேரின்ப வீட்டிலேயே படைத்திருந்தார் என்றும் தம்மைதாமே கடவுளால் மறுக்க முடியாது என்றும் எடுத்துரைக்கின்றனர்.
மேலும், ஆதாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான்
. ஆதாமை போலவே மக்களினம் அனைவரும் மண்ணிலிருந்து தான் படைக்கப்பட்டனர். ஆனால் பரிசுத்த அம்மா மண்ணிலிருந்து அல்ல கடவுளிடமிருந்து படைப்புகளுக்கு முன்பே பிறந்தவர்
என்று இறைவசனம் சான்று பகர்கிறது.
ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார். தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.
அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.
வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்.
(நீதிமொழிகள் 8:22-30)
இந்த வசனத்தில் உள்ள அம்சங்கள் எல்லாம் இந்த பூமியில் வாழ்ந்திருந்தவர்களுக்கோ, வாழ்கின்றவர்களுக்கோ பொருந்தக்கூடியது அல்ல. மாறாக இவையெல்லாம் தெய்வீகமானவை.
இவ்வாறு இறைவசனம் பரிசுத்த அம்மா அமலோற்பவி என்று சான்று பகர்கிறது.
பரிசுத்த அம்மா ஆதாமின்
வழிமரபை சார்ந்தவர் என்ற போதனை கடவுளிடமிருந்து பிறந்த ஞானத்தின் ஆவியை மறுப்பதாகும்.மேலும் , இறைமகன் இயேசு
கிறிஸ்துவில் நிறைவேறிய மீட்பின் செயல்களை அவமதிப்பதும் நிராகரிப்பதுமாகும்.
பரிசுத்த அம்மா ஆதாமின் வழிமரபை சேர்ந்தவரல்ல,மாறாக அமலோற்பவியாவார்.
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.