About Zion

Church of Light Emperor Emmanuel Zion

கேரள மாநிலத்தின் மையமாகவும், கலாச்சாரங்களுக்கு புகழ்மிக்கதாகவும் அமைந்துள்ளது தான் திருச்சூர் மாவட்டம். இந்த திருச்சூர் மாவட்டத்தின் முரியாடு கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுதலம் தான் எம்பரர் இம்மானுயேல் தெய்வாலயம் அல்லது சீயோன் ஆகும். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பறைசாற்றுகின்ற சத்வார்த்தையாகிய நற்செய்தியை விளம்பரம் செய்யவும், அவருக்காக ஒரு தூய மக்களினத்தை ஒருங்கிணைப்பதும் தான் சீயோனின் தலையாயப்பணியாகும். இந்த சத்வார்த்தை நற்செய்தியைக் கேட்பதற்காக கேரளாவின் பல மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் மற்றும் உலகின் பல நாடுகளில் இருந்தும் மக்கள் சீயோனிற்கு வருகின்றனர்.
எனவேதான், சத்வார்த்தையைக் கேட்டு இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நம்பிக்கை கொண்டோர் பலர் ஒரே சமூகமாக இந்த தெய்வாலயத்தைச் சுற்றிலும் பரவி வசிக்கின்றனர்.
மேலும், இறைவாக்கினர்கள் மற்றும் திருத்தூதர்களின் பணிகளையும், பாதைகளையும் பின் தொடர்கின்ற சீயோன், பிற எந்த கிறிஸ்தவ சபைகளுக்கும் அமைப்புகளுக்கும் கீழே செயல்படுவதில்லை.
எம்பரர் இம்மானுயேல் என்ற பெயர் வழங்கப்பட்டதற்கானக் காரணம்?
மீண்டும் இந்த பூமிக்கு வந்த இறைமகன், இம்மானுயேல் என்ற புதிய பெயரைத் தான் பெற்றுக்கொள்வார் (எசாயா 7:14).
மேலும், இறைமகன் இயேசு கிறிஸ்து மீண்டும் வருவது பலரின் பாவத்தை போக்கும் பொருட்டல்ல, மாறாக அரசர்க்கெல்லாம் அரசராவதற்கே வருகின்றார்(எபிரேயர் 9:28, திருவெளிப்பாடு 19:16).
அரசர்க்கெல்லாம் அரசர் என்பது பேரரசர் (சக்ரவர்த்தி) என பொருள்படும். ஆங்கில மொழியில் பேரரசர் என்பது EMPEROR ஆகும்‌. ஆகவே, பேரரசராகிய இம்மானுயேல் என்பதே EMPEROR EMMANUEL என அழைக்கப்படுகிறது. அதாவது, இறைமகன் மீண்டும் வந்துள்ளது எம்பரர் இம்மானுயேல் என்ற பெயரில் ஆகும். சுருக்கமாக கூறினால், மீண்டும் வந்த இறைமகனிற்கு வழியை ஆயத்தம் செய்து, அவருக்காக ஒரு தூய மக்களினத்தை ஒருங்கிணைப்பதற்காக நிறுவப்பட்ட சீயோன் அமைப்பு, அவருடைய பெயரில் எம்பரர் இம்மானுயேல் தெய்வாலயம் என்று அறியப்படுகிறது.

எதற்காக எம்பரர் இம்மானுயேல் தெய்வாலயத்தை ஒளியின் சபை என அழைக்கிறோம்?
பரிசுத்த இறையன்னை 1990 -ஆம் ஆண்டு மெக்சிகோவில் காட்சியளித்த போது “இறைமகனின் இரண்டாம் வருகையில் அவருக்காக உலகம் முழுவதும் உருவாகவிருக்கும் ஒளியின் சபை உடனே தோன்றும்” என கூறினார். அவ்வாறு, உலகின் ஒளியாக மீண்டும் இந்த பூமிக்கு வந்த இம்மானுயேலில் நம்பிக்கைக் கொண்டு, அவரை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்ற இந்த சமூகத்தை கடவுள் ஒளியின் சபை என அழைக்கின்றார்.
ஏன் சீயோன் என அறியப்படுகிறது?
பழைய இஸ்ரயேலின் யூதா அரசராக இருந்த தாவீது அரசரின் அரண்மனையும், கோட்டையும் அமைந்திருந்த இடம் தான் சீயோன். அதாவது தாவீது அரசர் கைப்பற்றிய கோட்டையே சீயோன்.மேலும், 2000 வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்து தாவீதின் வழிமரபில் தான் பிறந்தார்.
மேலும்,இறைவசனம் இவ்வாறு கூறுகிறது:
ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார். (திருப்பாடல்கள்132:13)
ஆனால், 2000 வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்து சீயோன் உறைவிடத்தில் வசிக்கவில்லை. மாறாக, மாட்டுத் தொழுவத்தில் பிறந்து கல்வாரி மலையில் இறந்தார். மேலும்,
சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்; யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்.(எசாயா 59:20)
என இறைவசனம் சான்று பகர்கிறது. ஆகவே, இறைவாக்கினர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ளதை போன்று சீயோனிற்குதான் இறைமகன் மீண்டும் வருவார். அதாவது, தாவீது குடும்பத்திற்கு வருவார். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவருக்காக கடவுள் ஏற்படுத்திய உறைவிடம் கேரளாவின் முரியாடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. எனவே தான் இந்த வழிபாட்டுத்தலம் சீயோன் என அழைக்கப்படுகிறது.

ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார். "இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்.

திருப்பாடல்கள் 132:13-14

Contact Us

Church of Light
Emperor Emmanuel Zion (C.L.E.E.Z)

English

+91 9544111842

Contact Us

Church of Light
Emperor Emmanuel Zion (C.L.E.E.Z)

Malayalam

+91 8129895013

Send Us a Message

Fill out the form and we will get back to you as soon as possible

Chat with us