ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.
எசாயா 61:1
இறுதிக் காலத்தில் பறைசாற்றுகின்ற மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையை அறிவிக்கின்ற தூதர். இறுதிக்காலத்தில் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடு, குலம் , மொழி, மக்களினம் ஆகிய அனைத்திற்கும் அறிவிக்கக் கூடிய எக்காலத்துக்கும் உரிய இறையாட்சியின் நற்செய்தியான உண்மையின் வார்த்தையை அறிவித்த சத்வார்த்தையின் தூதர் இவரே. சீயோனுக்கு மீட்பராக வருகின்ற இறைமகனின் இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் செய்ய அவருக்கு முன்பாக கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் தான் இவர். அனைத்து ஒழுக்கக்கேடான செயல்களிலிருந்தும், பெருகி வருகின்ற தீமைகளிலிருந்தும் எல்லா இறைமக்களின் மனதையும் திருப்பி மாசற்றவர்களாகவும்,குற்றமற்றவர்களாகவும் தூயவர்களாகவும், மீட்பருக்காக பகுத்தறிவோடு காத்திருக்கும், முன்மதியுடைய மணமகளின் தோழிகளைப் போன்று மணமகனை எதிர்நோக்கி காத்திருக்கின்ற ஒரு இறைமக்களின் கூட்டத்தை ஆயத்தம் செய்தவர்.
ஊழிகாலமாக மறைக்கப்பட்டிருந்த மறைபொருள்களையும், ஒலிவ மலைமீது சீடர்கள் கேட்ட இறைமகனின் இரண்டாம் வருகைக்கும் உலகம் முடிவுக்குமான அடையாளங்களையும், இறுதிக்காலம் வரை அடைத்து முத்திரை செய்யப்பட்ட இறை வார்த்தைகளையும், தூய அன்னை இந்த பூமியில் பல இடங்களில் காட்சியளித்து அறிவித்த விண்ணகத்தின் மறைப்பொருளையும், மறைநூலில் எழுதியுள்ளதை உள்ளவாறு வெளிப்படுத்தியவர். இந்த உலகினர் உருவமற்றவர் என்று கருதிய தந்தையாகிய கடவுளின் வருகையை பற்றியும், அவரது மாட்சியை பற்றியும், வெளிப்படையாக கற்றுக் கொடுத்தவர். இன்றுவரை உள்ள எந்த தலைமுறைகளிலும் வெளிப்படுத்தப்படாத தந்தையாகிய கடவுளின் தூய பெயரை அறிவித்தவர். ஏதேன் தோட்டத்தில் கடவுளின் மக்கள் இழந்து போன வளமையான வாழ்வை மீண்டும் அளிப்பதற்காக மீட்பரை அருள்வேன் என்று, தன் சொந்த மக்களுக்கு வாக்குறுதி அளித்த தந்தையாகிய கடவுளின் உடன்படிக்கையை சீயோனில் நிலையாக சீர்படுத்துகின்ற,மீட்பளிக்கும் நற்செய்தியை அறிவித்த உடன்படிக்கையின் தூதரே ஜோசப் பொன்னார்.
© 2024. Church of Light Emperor Emmanuel Zion. All rights reserved.